Posted by Haja Mohideen
(Hajas) on 3/7/2017 9:23:21 AM
|
|||
ஏர்வாடிகாரர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய எச்சரிக்கைப் பதிவு. பெண் குழந்தைகளைப் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே! குழந்தைகள். زينة الحياة الدنيا அவர்களை அழகிய முறையில் வளர்த்து, பாதுகாத்துப் பராமரித்து உலகிலும் மறுமையிலும் நற்பேறு பெற்ற சீதேவிகளாக உருவாக்கும் பெரும் பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் உண்டு. குறிப்பாக பெண் குழந்தைகள் விஷயத்தில் தனிக் கவனமெடுத்து அவர்களைப் பாதுகாப்பது, பராமரிப்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த கடமையாகும். குற்றங்கள் மலிந்துவிட்ட இந்த காலத்தில் குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மனிதத் தன்மையற்றவை. சில பள்ளி நிர்வாகங்களின் கவனிப்பற்ற, பொறுப்பற்ற தன்மைகளால் 5 வயதே பூர்த்தியாகாத குழந்தைகளும் பாதிக்கப்பட்டு பெரும் கொடுமைக்கும், சித்தரவதைக்கும் ஆளாகி நிற்கும் நிகழ்வுகள் நம்மை மிரளவே வைக்கிறது. #நமது_ஊரில்_கூட நமக்கு மிகப் பரிச்சயமான பள்ளிகளில், பள்ளி நிர்வாகங்களின் பாதுகாப்பை நம்பியே தங்கள் அன்புக் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்பி வைக்கிறார்கள். குழந்தைகள் தொடர்பாக குறிப்பாக பெண் குழந்தைகள் விஷயத்தில் பள்ளி நிர்வாகங்களும், பெற்றோர்களும் சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும். பள்ளி நிர்வாகங்கள் கவனிக்க வேண்டியவை: 1) ஆசிரியர்கள் & பணியாளர்கள் நியமன விஷயத்தில் ஓர் ஒழுக்க அளவுகோளை பள்ளிகள் நிர்ணயித்துக் கொள்வது. 2) அவர்கள் ஏற்கனவே பணியற்றிய பள்ளியிலிருந்து ஏன் வெளியே வந்தார்கள்? 3) வகுப்பறைகள், ஆசிரியர் மற்றும் பணியாளர் தனியறைகள், பள்ளி வாகனங்கள் போன்றவற்றில் CCTV (கண்காணிப்பு) கேமராக்களை நிறுவுவது. 4) பெண் குழந்தைகளின் சீருடைகள் (Uniform) குட்டையாக அமைந்திருப்பதை முற்றிலும் தடுப்பது. 5) முறையான பாதுகாப்பு & கண்காணிப்பு இன்றி பள்ளியை விட்டு குழந்தைகளை வெளியே அனுப்புவதைத் தவிர்ப்பது. 6) குழந்தைகள் விஷயத்தில் பாலியல் ரீதியான வரம்பு மீறல்கள் நடைபெறுவது தெரிந்தால், 7) பள்ளியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் வெளியேற்றுவது, காலத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் மழலைகள் விஷயத்தில் எப்போதும் தனிக் கவனமெடுத்துச் செயல்படுவதே அவர்களின் முதல் பாதுகாப்பாகும். பெற்றோர்கள் கவனத்திற்கு..... 1) ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளியைத் தேர்வு செய்வது. 2) அவ்வப்போது பள்ளிக்குச் சென்று குழந்தைகளின் நிலமைகளைக் கண்காணித்து வருவது. 3) பள்ளி முடிந்து வந்ததும் ஆடைகள் மாற்றும் போது அவர்களின் மேனியைக் கவனிப்பது. 4) வீட்டுப் பாடம் (Home work) சொல்லித் கொடுக்கும் நேரத்தில் அன்றைய தினம் முழுவதும் பள்ளியில் என்ன நடந்தது என்பதை பேச்சு வாக்கில் விசாரித்து அறிந்து கொள்வது. 5) அவர்களிடம் நட்பு ரீதியில் சகஜமாகப் பேசிப் பழகுவது. 6) அவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பிறரின் சீண்டல்கள் குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்துவது. 7) பள்ளியில் யாரையும் மேலே கைவைக்க விடக்கூடாது. கன்னத்தை கிள்ளவிடக்கூடாது. 8) படிப்பே முக்கியம் என்ற வெற்றுக் கண்ணோட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல், குழந்தைகளின் நல்வாழ்விற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்யும் பெற்றோர்களே! நாம் அவர்களுக்குத் தர விரும்பும் நல்வாழ்வு வெறும் செல்வத்தால், கல்வியால் மட்டுமே கிடைத்துவிடாது. குழந்தைகள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பெரும் அமானிதங்கள். குழந்தைகளைப் பேணிப் பராமரிப்போம்! நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாத்து வளர்ப்பவர் நாளை மறுமையில் என்னோடு இருப்பார் என நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துள்ளார்கள். ஆண் குழந்தைகளின் விஷயத்தில் இப்படி ஒரு வாக்குறுதியைத் தராத இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பெண் குழந்தைகளின் விஷயத்தில் மட்டும் தந்திருப்பது, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருகில் சுவனத்தில் நமக்கொரு இடம் கிடைக்க வேண்டாமா? அல்லாஹ் நம் குழந்தைகளைப் பாதுகாப்பானாக! ✍ அபூ அஹ்மத். https://www.facebook.com/photo.php?fbid=483976728657147&set=gm.1392684184135607&type=3&permPage=1 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |