Posted by Haja Mohideen
(Hajas) on 4/7/2017 6:53:43 AM
|
|||
நிழலும்..நிஜமும்.. கோடி கோடியாக காசை இறைக்கிறார்கள்.. வியப்பான விஷயம்தான்.. ஒரு ஊருக்குள் நான்கு பேருக்குத்தான் நல்ல வருமானம் இருக்கும்.. மற்றவர்கள் இந்த சமூகத்துக்காக.. கார்..வீடு வாங்கி லோன் கட்டவே திணறுவார்கள்..ப்ராக்டிஷ் ரொம்ப சுமாராகத்தான் இருக்கும் வெறும் எம்பிபிஎஸ் உடன் ப்ராக்டிஷ் செய்பவர்கள் ஓரளவு மனதை தேற்றிக் கொள்வார்கள்.. பிஜிக்காக பல வருடங்கள் முயற்சித்து.. குடும்பம்..பிள்ளைகளை விட்டு விட்டு பல டிகிரிகள் வாங்கின பிறகும்.. நோயாளிகள் எட்டி பார்க்கவில்லை என்றால் மனமுடைந்து போய் விடுவார்கள்.. ஏதோ அரசாங்க தொழிலில் ஒட்டிக் கொண்டோ.. கார்ப்பரேட் மருத்துவமனையில் கிடைக்கும் சொற்ப சம்பளத்திற்கோ வேலை செய்வார்கள்.. எல்லோருக்கும் பயப்பட வேண்டும்.. யார் எந்தப் பக்கம் கவிழ்ப்பானோ? என்ற பயம் ஆட்டி படைக்கும்.. போராட்டம் என்றால் கை,கால் எல்லாம் உதறும்.. வெளியே சொல்ல முடியாத வேதனை மனம் முழுவதும் நிரம்பி இருக்கும்.. இதில் சொந்த,பந்தங்கள்..நண்பர்கள் எல்லாம் "என்ன டாக்டர் கோடி எல்லாம் உங்களுக்கு ஒரு காசா? " என்று சொல்லும் போது.. பின்னால் உள்ள spinal cord ஐ யாரோ கீறுவது போல் இருக்கும்.. ஒன்றும் புரியாது.. நல்ல திறமை இருக்கும்..அறிவு இருக்கும் .. பல பட்டமும் இருக்கும்..ஆனால் கூட்டம் பக்கத்தில் உள்ள quack ஐ நோக்கி போகும்.. சோறு இறங்கும் போது..Hydro chloric acid வாயில் இருந்தே சேர்ந்து இறங்கும்.. எங்கே தப்பு இருக்கிறது என்று ஆராய்வதற்குள் முடி உதிர்ந்து..கண்ணை சுற்றி கருவளையம் தோன்றி.. பிள்ளைகளின் கல்வி பயமுறுத்தும்.. மீண்டும் அவர்களை இந்த புதைகுழிக்குள் தள்ள.. நான் விட்டதை என் குழந்தைகள் பிடிப்பார்கள் என்ற வெறி உந்த.. இங்கே சாராயம் காய்ச்சியவனும்..மடாதிபதிகளும்..கட்ட பஞ்சாயத்து செய்தவனும் "நீ..உன் குடும்பம் என் நிரந்தர அடிமைகள்" என்று சொல்லாமல் சொல்ல.. நிழலுக்கும், நிஜத்திற்கும் சம்பந்தம் இல்லாமல்தான் டாக்டர்கள் பொழப்பு செல்லும்.. நிதானமாக ஆராய்ந்தால் இங்கு நிஜத்தை நம்ப யாரும் தயாரில்லை.. நிழல் பெரிதாக தெரிவதால் அதை நம்பியே நடக்கப் போகிறார்கள்.. ரஷ்யா..நேபாள்..சீனா..பிலிப்பைன்ஸ் அப்ப நீங்க?? மனமிருந்தால் மார்க்கம் உண்டு https://www.facebook.com/drmkhmusthafa/posts/1319939771407488
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |