Posted by Haja Mohideen
(Hajas) on 4/11/2017 5:50:26 AM
|
|||
இடைத்தேர்தல்_ரத்து_திட்டமிடப்பட்டதே! கோத்ராவிற்கு வந்த சமர்பதி ரயிலில் இருந்த 52 தலித் ராம பக்தர்களை உயிரோடு எரித்து அதன்மூலம் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்று சொல்லி அதன்பிறகு 4 ஆயிரம் முஸ்லிம்களை ரத்த வேட்டையாடி நடைபெற்ற மோடிஜீயின் மெகா கலவரத்திற்கு 6 மாதத்திற்கு முன்பாகவே பழைய கத்திகள், வாள்கள், கோடாரிகள் பட்டை தீட்டப்பட்டுவிட்டன, புதிய ஆயுதங்கள் தயார் செய்யப்பட்டன. இஸ்லாமியர் அல்லாத வீடுகளின் கதவுகளில் ஸ்வஸ்திக் முத்திரை போடப்பட்டன. அதன்பிறகே கோத்ரா ரயில் எரிக்கப்பட்டது. குஜராத்தில் மேப் வைத்துக் கலவரம் நடத்தப்பட்டது. இதை நான் சொல்லவில்லை, தெகல்கா சொன்னது. இதே பார்முலாதான் ஆர்.கே நகரிலும் கையாளப்படுகின்றது. புதிய தலைமுறையில் பன்னீர் அணிக்கே வெற்றி வாய்ப்பு என்று போக்குக் காட்டியும், தந்தி டிவியில் பன்னீருக்கு அடுத்தே தினகரன் என சொல்லிக்காட்டியும் மக்கள் பன்னீரை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் லயோலா கல்லூரி மாணவர்களின் கருத்துக் கணிப்பு திமுக வெற்றிபெறும் என்று சொல்லியது. ஆக இதற்கு மேலும் தேர்தலை நடத்தினால் பன்னீரை ஒரு நாய் கூட சீண்டாது என்பதாலும், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தினகரன் இரண்டாவது இடத்திற்கு வர வாய்ப்பிருக்கிறது. வெற்றி பெறா விட்டாலும் பன்னீரை விட பல்லாயிரக் கணக்கில் தினகரன் ஓட்டு வாங்கி பன்னீர் அணியை பின்னுக்குத் தள்ளி விடுவார். அவ்வாறு தினகரன் இரண்டாம் இடத்திற்கு வந்து விட்டால் தேர்தல் ஆணையத்தின் ஒப்பந்தப்படி அதிமுகவையும் இரட்டை இலையையும் தினகரனிடம் ஒப்படைத்து விட வேண்டும். பன்னீருக்கு கொடுக்கப்பட்ட அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை கலைத்து விட்டு அதிமுகவிடம் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி விட வேண்டும். ஒருவேளை பன்னீர் இரண்டாம் இடத்திற்கு வந்து விட்டால் அதிமுகவில் இருக்கும் குழப்பம் தொடர்ந்து நீடிக்கும். இரட்டை இலையும் அதிமுகவும் தொடர்ந்து முடக்கப்படும். ஆனால் பன்னீருக்கு அவ்வளவு ஆதரவு இல்லாத நிலையில் அதிமுகவில் தொடர்ந்து குழப்பத்தை நீட்டித்து அந்த குட்டையில் மீன் பிடித்து தன்னை வளப்படுத்திக் கொள்ள பாஜக நினைக்கின்றது. அதன் எதிரொலிதான் இந்த தேர்தல் ரத்து. இந்திய தேர்தல் ஆணைய ஓனர் அமித்ஷா இன்று (10/04/2017 திங்கள் கிழமை) தேர்தல் குறித்து முடிவெடுப்பார் என கூறப்பட்டது. இடைத்தேர்தல் ரத்து உத்தரவை ஆணையர் அமித்ஷா வெளியிட்டு விட்டார். பாஜக தன்னை தமிழகத்தில் நிறுவவே இடைத்தேர்தலை ரத்து செய்து விட்டதாக பல தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். தமிழிசையின் விருப்பப்படியே இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். பிரமாதம் உண்மையைச் சொல்லி விட்டார். இடைத்தேர்தலை நிறுத்துவது என்பது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு என்றும் அதற்காகவே விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://www.facebook.com/mohamed.siddiq.9083/posts/1028572767242918
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |