Posted by Haja Mohideen
(Hajas) on 4/28/2017 10:22:17 AM
|
|||
தாகம்_தீர்க்கும்_தனவாண்கள் நெல்லை ஏர்வாடி மெயின் ரோட்டில் பாலத்தின் தென்புறம் அமைய பெற்றுள்ள #காதர்_ஸ்டோர் என்பது நம் பகுதியின் சுற்றுவட்டாரத்தினர் அனைவரும் அறிந்த ஒரு மொத்த / சில்லறை மளிகை கடை. இது இந்த பகுதியின் 80% மக்களின் மளிகை தேவைகளை பூர்த்தி செய்கிறது என்றால் அது மிகையள்ள. இதன் உரிமையாளர்கள் #KJ_Brothers என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் / அறியப்படும் நமதூர் லெப்பைவளவு பகுதியை சார்ந்த #K_Jahir_Hussain மற்றும் #K_Hidhayathullah எனும் சகோதரர்கள் ஆவர். (முன்னால் எனது அண்டைவீட்டார். இப்போது காதர் நகரில் வசிக்கின்றனர்) அவர்களின் தகப்பனார் #மர்ஹூம்_காதர்_மீராசாகிபு அவர்களின் மரணத்தின் போது அவர்களின் நினைவாக மக்கள் அனைவரும் பயன்படும் வகையில் ஒரு நிரந்தரமான குடி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்ற நிய்யதை அவர்கள் கொண்டு, அதை என்னிடம் பகிர்ந்தும் இருந்தனர். கோடை கால வெப்பம் ஒரு புறம், தண்ணீர் தட்டுப்பாடு மறுபுறம் என்று மக்கள் அல்லாடும் இன்றைய சூழலில் அந்த நிய்யத்தை #ஹயாத்தாகும் வகையில் இதற்க்காக வேண்டி ஒரு புதிய #Stainless_Steel_டேங்கர் பொருத்தப்பட்ட #டிராக்டர் ஒன்று வாங்கப்பட்டு இன்று (28.04.2017) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு 3:00 மணியளவில் இந்த #இலவச_குடி_தண்ணீர் வழங்கும் சேவை இவர்களின் கரங்களாலே துவங்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இந்த சேவை தினமும் ஏர்வாடியின் அனைத்து சமுதாய மக்களுக்கும், தண்ணீர் தேவையுடைய அனைத்து பகுதிகளுக்கும் சென்று வழங்கப்படும். இன்று துவக்க நாள் நிகழ்வாக #மரக்குடி, #சிறுமளஞ்சி_ரோடு, #ஈத்கா_தெரு மற்றும் #6வது_தெரு பகுதிகளில் வழங்கப்பட்டது. நாளை இன்ஷா அல்லாஹ் #பொத்தையடி, #இளவணிகர்குடி பகுதிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இவர்களின் இந்த #தாகம்_தீர்க்கும் முயற்சி ஈருலகிலும் இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தார்க்கும், இவர்களின் தந்தையின் மறுவுலக வாழ்விலும் பயனளிக்க பிராத்திப்போம். ஆமீன் அன்புடன்
https://www.facebook.com/groups/427861373951231/permalink/1464288166975208/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |