Posted by Haja Mohideen
(Hajas) on 5/2/2017 4:33:08 AM
|
|||
தற்போதைய ஊர் நிலவரம் 👉 அனேக வீடுகளில் போரில் தண்ணீர் வராத நிலை 👉 நல்லி தண்ணீர் சரியாக வருவதில்லை 👉 கல்யாண பிரியாணி கேன் வாட்டரில் சமைக்கப்படுகிறது இவ்வளவு நிலை மோசமாக இருப்பினும் திருமண வைபவங்களில் வாட்டர் பாட்டில் சராசரியாக ஒரு திருமணத்தில் 500 முதல் 1000 பேர் உணவருந்த வருகிறார்கள் 40% பேர் பாதி தண்ணீர் குடித்துவிட்டு மீதியை பந்தியிலே விட்டுவிடுகிறார்கள் அவை இழையுடன் குப்பைக்கு செல்கிறது. 1000 பேர் சாப்பிட்டால் 1000 பாட்டில்கள் நாளை குப்பை தொட்டியில்.இதனால் பிளாஸ்டிக் உபயோகம் அதிமாகுகிறது. நம் ஊர் தண்ணீர் பஞ்சத்தாலும் கேன்சாராலும் அவதிவுறுவதை அறிவீர்கள். அன்பானவர்களே யாரையும் குறை சொல்லும் நோக்கத்தில் இதை பதிவிடவில்லை. இந்த பழக்கம் எனது குடும்பத்திலும் நடக்கிறது அவர்களுக்கு விடுக்கும் அதே வேண்டுகோளை தான் நான் உங்களுக்கும் விடுகின்றேன். குறைந்தபட்சம் பாட்டில் வாட்டரை தவிர்த்து கேன் தண்ணீரை பேப்பர் கப்பில் ஊற்றி கொடுங்கள். எவ்வளவு காசு கொடுத்தாலும் தண்ணீரை வாங்க இயலாது . சிந்திப்போம் ! செயல்படுவோம் ! -அபு முஜாஹித் https://www.facebook.com/groups/nellaieruvadi/permalink/1714368335241837/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |