Posted by S Peer Mohamed
(peer) on 5/6/2017 1:12:03 AM
|
|||
அன்பு உலமாக்களே... நண்பர்களே தமிழகம் முழுவதும் வறட்சி அதிகம் நிலவுகிறது! பருவ மழை கடந்த இரண்டு வருடங்களாக சரியாக பொழியாததனால் "நெற்களஞ்சிய"மாம் தஞ்சை மாவட்டத்தில் கூட சரியான விவசாயம் இல்லை.....நிலத்தடி நீர் 50 அடியிலிருந்து 200 முதல் 300 அடி வரை சென்று விட்டது. குடி தண்ணீருக்கு கூட பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உண்டாகியுள்ளது! (அல்லாஹ் பாதுகாப்பானாக...!) எனவே அன்பு சகோதர,சகோதரிகளே! உங்களுடைய ஒவ்வொரு வேளை தொழுகைகளிலும் மழை நன்றாக பொழிய வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இதை அலட்சியமாக எண்ண வேண்டாம். கண்டிப்பாக மறக்காமல் துஆ செய்யுங்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக! உங்கள் துஆ அதிகம் தேவை! ஒட்டு மொத்தமா துஆ கேட்டால் அல்லாஹ் கொடுப்பான்! மழை பொழியவில்லை என்றால் மழை இல்லை மழை இல்லை என்று புலம்புகிறோமே தவிர, நம்மில் எத்தனை பேர் மழையை வேண்டி அல்லாஹ்விடம் துஆ செய்பவர்களாக இருக்கிறோம்? இன்ஷா அல்லாஹ், நமது அனைத்து தேவைகளுக்கும் அல்லாஹ்விடம் உதவி கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “உங்கள் செருப்பின் வார் அறுந்து போனாலும் அல்லாஹ்விடம் உதவி கேளுங்கள்.” {திர்மிதீ} மழைக்காக தாங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள் . ஆமீன்! மழை வேண்டுதலும்,
அல்லாஹும்ம அஸ்கினா ஃகைஸன் முஃகீஸன் மரீஅன் மரீஃஅன் நாஃபிஅன் ஃகைர ளார்ரின் ஃஆஜிலன் ஃகைர ஆஜிலின் பொருள் : அபூதாவுத் ஆதாரம்: புகாரி اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா, பொருள் : யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக! ஆதாரம்: புகாரி, முஸ்லிம் اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهَائِمَكَ ، وَانْشُرْ رَحْمَتَكَ ، وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ அல்லாஹும்மஸ்கி இபாதக வ பஹாயிமக வன்ஷுர் ரஹ்மதக வ அஹ்யீ பலதகள் மய்யித பொருள் : யா அல்லாஹ்! உன் அடியார்களுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் புகட்டுவாயாக! மேலும் உனது அருளை பரப்புவாயாக! வறண்டு கிடக்கும் இந்த உனது ஊருக்கு உயிர் கொடுப்பாயாக! ஆதாரம் : அபூதாவுத் مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ முதிர்னா பி ஃபள்லிலில்லாஹி வரஹ்மதிஹி பொருள் : அல்லாஹ்வின் அருளினாலும், அவனது கிருபையினாலும் நம்மீது மழை பொழிந்தது. ஆதாரம் : புகாரி, முஸ்லிம் மழை வேண்டி பல ஊர் பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனையும் தொழுகையும் நடைபெறுவது இரட்சகனே யாவருக்கும் பொதுவான இறைவனே |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |