Posted by Haja Mohideen
(Hajas) on 7/6/2017 5:46:32 AM
|
|||
ஜமால் சார் - ஒரு ஈமானிய ஆளுமை ஈமான் சங்கம் மூலமாகவும் முஹல்லா மற்றும் தனிப்பட்ட முறையிலும் பல்வேறு சமூக நலப்ப்ணிகளில் தன்னலம் பாராமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். பொதுப் பணிகளில் உள்ளவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டிய சகிப்புத் தன்மையும் நிதானமும் மார்க்கப் பற்றும் அவர்களிடமிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள்.
நமதூர் மக்களுக்கு இஸ்லாமிய விழுமியங்களுடன் கூடிய ஒரு தனியார் முஸ்லிம் கல்வி நிறுவனம் ( அல்ஹூதா மெட்ரிக் பள்ளி) . ஆரம்பித்ததிலும் முக்கிய பங்காற்றி முன்னோடியாக் இருந்தவர் ஈமானுடைய தற்போதைய பணிகளிலும் வயது வித்தியாசம் பாராமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். கடந்த வருடம் முதல் ராணி மெட்ரிக் பள்ளியில் ஈமான் சார்பாக நடத்தப்படும் தீனியாத் வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு ஜமால் சார் அவர்கள் தான் அஸ்திவாரமாக இருந்தார்கள் என்பது மறக்கமுடியாது. அது சமயம் ராணி பள்ளி மேடத்தை சந்திக்க அவர்களுடன் சென்ற போது , மேடம் எழுந்து நின்று , சார் முன்னால் உட்கார மாட்டேன் என்றும் சார் வந்து சொல்வதால் தீனியாத் பாட வகுப்புகள் நடத்த மறுக்க முடியாது என்று சொன்னதும் நெகிழ்ச்சிக்குரிய நினைவுகள். ஈமானின் வேர்களில் ஒருவரான அவர்கள் ஈமானிய மொட்டுகளுக்காகவும் உழைத்துள்ளார்கள். ஒவ்வொரு வருட நிகழ்ச்சிக்கும் காவல்துறை அனுமதி மற்றும் முஹல்லா நிர்வாகிகளை அழைப்பது போன்ற பணிகளில் மனமுவந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அடுத்த வருடத்துடன் 40 ஆண்டை பூர்த்தி செய்யும் இந்த மகத்தான ஈமான் அமைப்பின் மூலமாக இன்ஷா அல்லாஹ் இறுதி நாள் வரை செய்யப்படும் அனைத்து நற்காரியங்க்ளின் நன்மைக்ளிலும் ஈமானிய விதைகளை விதைத்தவர்களில் ஒருவர் என்ற முறையில் அன்னாருக்கும் அதன் நன்மைகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும் இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் கபூல் செய்வானாக. ஜமால் சார் அவர்களின் மறைவு ஒரு ஆரவாரமில்லாத ஆளுமையின் இழப்பு என்றால் மிகையல்ல. அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த சுவனத்தையும் அவர்களின் குடும்பத்தார்க்கு சிறந்த பொறுமையையும் வழங்குவானாக. அவ்ர்கள் விதைத்து விருட்சமாய் வளர்ந்திருக்கும் இந்த ஈமானிய மரம் சோலையாகி கனிகள் தருவதற்காக நாம் ஒவ்வொருவரும் அதில் பங்கெடுப்பதும் அவர்கள் முன்னெடுத்து சென்ற பணியைத் தொடர்வதன் மூலம் மீண்டும் ஒரு மதீனாவிற்கான முயற்சிகளில் நம்மை முழுமையாக இணைத்து கொள்வதுமே நாம் அவர்களுக்கு செய்யும் சிறந்த நினைவேந்தலாக இருக்கும் என எண்ணுகிறேன். மண்ணறை மணம் வீச .. மனமார்ந்த பிரார்த்தனைகளுடன்... |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |