Posted by Haja Mohideen
(Hajas) on 7/6/2017 10:45:25 AM
|
|||
முஸ்லிம்கள் ஏன் கத்தார் பழ மாணிக்கம் விளக்கம்..! *எந்த விஷயத்திலும் முஸ்லிம்கள் உங்களோடு ஒட்டாமல் தனித்து நிற்பதேன்?* என்பது முஸ்லிம் அல்லாத பலரின் கேள்வி. இதோ என் பதில்!! *அவர்களின் முன்னோர்கள் நம் இந்தியதேச விடுதலைக்கு அவர்களின் சதவீதத்திற்கும் அதிகமாக உழைத்தவர்கள். அதற்காக பட்டம், பதவி, கல்வி, செல்வம் போன்றவற்றைத் துறந்த முஸ்லிம்கள்,அவர்களுக்காக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய தேசம் பாகிஸ்தானுக்கு வாருங்கள் என அழைத்த போதும்கூட அவர்கள் இந்த மண்ணைவிட்டு வரமாட்டோம்! எங்கள் இந்துச் சகோதரர்களோடு வாழ்வோம்! என்று உறுதியாக நின்றவர்கள் அவர்கள்! ஆனால் இன்றைய மதவெறி அரசியல் அவர்களை பிரிக்க நினைக்கும் இக்காலகட்டத்தில் சில விஷயங்களை நீங்கள் சிந்திக்க வேண்டும்!* *அவர்கள் முஸ்லிம்கள்; அவர்கள் மார்க்கம் *காசைக் கரியாக்கி காற்றை மாசாக்கி, காதை செவிடாக்கி வீதியை குப்பையாக்கி, *வீதிகளை அடைத்து,நீர் நிலைகளை மாசுபடுத்தும்,பக்திக்காக அல்லாமல் மதவாத *இதனால் இந்த தேசத்திற்கு நன்மையா தீமையா ?* *சுற்றுச் சூழலை மாசுபடுத்தக் கூடாது என்பதால் பழையனவற்றை எரிக்கும் போகியில் கலந்து கொள்வதில்லை ! போகியின் பெயரால் தமிழர்களின் பல அரிய பொக்கிஷங்களை, ஒலைச்சுவடிகளை எரிக்கச் சொல்லி அவர்களை வரலாற்று அனாதையாக்கிய இந்துதுவா நஞ்சையும் அவர்கள் வெறுக்குகிறார்கள்.* *படைத்தவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்பதால்,ஆயுதங்களை வணங்கும் ஆயுத பூஜையிலும் காகிதங்களை வணங்கும் சரஸ்வதி பூஜையிலும் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை !இது உங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதால் அல்ல !* *தீமைகளின் தாய்* *மது* *என அவர்களின் மார்க்கம் தடுப்பதால் அவர்கள் மது அருந்துவதில்லை! ஆகையால் அவர்களால் மதுவால் ஏற்படும் விபத்துகள் இல்லை, குடும்ப சமூக பிரச்னைகள் இல்லை கலவரம் இல்லை, வழக்குகள் இல்லை ! இதனால் யாருக்கு என்ன நட்டம் ? மாறாக இந்த நாட்டுக்கு நன்மையே !* *வட்டி என்பது ஒருவரின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயல் என்பதால் அவர்களின் இஸ்லாம் அதைத் தடுக்கிறது ! அவர்களால் வட்டியினால் ஏற்படும் அடிதடி, கற்பிழப்பு, தற்கொலை, கொலை போன்ற உயிரிழப்புகள் இல்லை ! அவர்களால் யாருக்கு என்ன நட்டம் ? மாறாக அவர்கள் வங்கிகளில் இதுவரை வாங்காமல் விட்டு வைத்துள்ள வட்டித்தொகை 67,500 கோடிகளால் இந்த நாட்டுக்கு நன்மையே !* *மேலும் பெண்ணின் அழகு என்பது அவர்களை மணம் முடிக்கும் கணவனுக்காக மட்டுமே என்பதால் அவர்களின் பெண்கள் பர்தா அணிகிறார்கள் ! இதனால் பாலியல் குற்றங்களில் இருந்தும் காமப்பார்வைகளில் இருந்தும் அவர்களையும் பாதுகாத்து சமூகத்தையும் தீமையில் இருந்து காக்கிறார்கள்! இதனால் யாருக்கு என்ன நட்டம் ?* *குடிப்பதும் வெடிப்பதும் பண்டிகை அல்ல ! *அவர்களது மார்க்க சட்டப்படி *ஒன்றே குலம்! ஒருவனே இறைவன்!! என சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்! இதில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை !ஆனால் எல்லா சமூகங்களிலும் உணர்ச்சியால் உந்தப்பட்டு வன்முறையை கையில் எடுக்கும் சிலர் இருப்பது போல் இங்கும் இருக்கின்றனர் ! எப்படி குஜராத்தில் நடந்த கொலைகளுக்கு இங்குள்ள இந்துச் சகோதரர்கள் காரணமில்லையோ அது போன்று பயங்கரவாதத்திற்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் சம்மந்தமில்லை!மற்றவர்கள் குற்றம் இழைக்கும் போது மதத்தை அடையாளப்படுத்தாத மீடியாக்கள் முஸ்லிம்கள் குற்றம் இழைக்கும் போது மதத்தை அடையாளப்படுத்துகின்றனர்* . *ஆகையால் அவர்களின் போக்குகளில் தலையிட்டு அவர்களை வம்புக்கு இழுப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற அடிப்படையையாவது உணர்ந்து செயல்படுங்கள். இல்லையேல் சமூக அமைதி சீரழிந்து நாடு நாசமாகும்.* பழ. *மாணிக்கம்* , https://www.facebook.com/photo.php?fbid=563475017375742&set=gm.1376492885752758&type=3&permPage=1
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |