Posted by Haja Mohideen
(Hajas) on 7/6/2017 11:14:06 AM
|
|||
என் நெஞ்சம் பதறுகிறது !!வேடிக்கை பார்த்த , பார்த்து கொண்டிருக்கும் படித்த அன்பு சொந்தங்களே .... நெல்லை , தூத்துகுடி ,குமரி மக்களே நமக்காக , நம் சந்ததிக்கு , நம் கண் முன்னே இதோ புற்றுநோய் க்கு புறப்பட வாகன வசதியும் செய்தாகி விட்டது !! அங்கிருந்து அமரர் ஊர்தி தான் திரும்பி பல இடங்களுக்கும் வந்து கொண்டிருப்பது நீ அறிவாயா ?? சாதரணமான நாம் சம்பாதிக்கும் பணத்தை நீயும் , நானும் பெற்ற பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் தவிக்கும் போது , நம்மை புற்று தெற்றி விட்டால் என்ன செய்வாய் ?? புற்றுநோயால் பாதிக்கபட்டவரிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் சோக கதை தெரியும் .. பல லட்சம் செலவளித்தும் நம்மால் உயிர் எத்தனை நாள் வாழ முடியும் ?? அணு உலை வெடித்தால் இந்த பூமியில் நாம் வாழ முடியுமா ?? கடலில் கொட்டிய சாதாரண எண்ணையை அள்ள கூட வாளியை தூக்கும் அரசுகள் , தீ பிடித்த துணி கடையை அணைக்க கூட 4 நாட்களால் முடியாதபோது ... 35 தடவைக்கு மேல் பழுதான அணு உலை வெடித்தால், யாரால் பாதுகாப்புக்கு வரமுடியும் ?? அரசுகள் வெடிக்காது என உறுதி தர முடியுமா ?? களத்தில் இருக்கும் அண்ணன் பின்னால் போகாமல் அரசை நம்பி நாசமாக போக போறீர்களா ?? சிந்தித்து பாருங்கள் ... வலியோடு ... உங்களில் ஒருவன்
https://www.facebook.com/groups/baithussalam/permalink/1377385502330163/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |