Posted by Haja Mohideen
(Hajas) on 7/12/2017 1:48:18 AM
|
|||
அமர்நாத் யாத்திரை தாக்குதல் பின்னணி என்ன? ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லிங்கத்தை வணங்க அமர்நாத் யாத்திரை இந்துக்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வருடம் யாத்திரை மேற்கொண்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 7 பக்தர்கள் இறந்துவிட்டார்கள் என்கிற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். நீண்ட வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த தாக்குதலும், இறந்தவர்களில் 5 பேர் குஜராத்திகள் என்பதும், பதிவு செய்யாத பஸ் எப்படி அனுமதிக்கப்பட்டது எனவும் பல்வேறு கேள்விகள் எழும்போது இதை ஆய்வு செய்ய வேண்டும் என முற்பட்ட போது அப்பட்டமான அரசியல் இதற்கு பின்னணியில் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. சென்ற வருடம் நடைபெற்ற அமர்நாத் யாத்திரையின் போது, ஒரு பஸ் விபத்திற்குள்ளானது. அதில் உள்ள பயணிகளை தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றினார்கள் முஸ்லிம்கள். சென்ற வருடம் யாத்திரை சென்றவர்களை காப்பாற்றியது அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என இருந்த காஷ்மீர் மக்களை திடீரென தீவிரவாதி போல் காட்ட நினைப்பதும், கடந்த 10 வருடங்களாக நடைபெறாமல் இருந்த தாக்குதல் தற்போது நடைபெற்றுள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 1.அடுத்த வருடம் நடைபெறவுள்ள குஜராத் தேர்தல். இதில் மிக முக்கியமானது 1 வது காரணம் மட்டுமே. ஒவ்வொரு முறையும் குஜராத்தில் தேர்தல் வரும்போதெல்லாம், நாட்டில் எங்காவது ஒரு மூலையில் குஜராத்திகள் பழி கொடுக்கப்படுகிறார்கள். மேலும் பா.ஜ.க ஆட்சியில் இருந்த போது மட்டுமே அமர்நாத் யாத்திரை தாக்குதல் நடைபெற்றுள்ளது. 2006, ஜூலை 21 ஆம் தேதி, ஸ்ரீநகரில் பக்தர்கள் சென்ற பஸ் மீது கல்லெறி சம்பவம் மட்டுமே நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் குஜராத் தேர்தல் வரும்போது என்னென்ன நடந்தது? ஏன் குஜராத்திகள் தாக்கப்பட்டால் உடனே தேர்தலில் வென்று விடலாமா என்கிற சந்தேகங்கள் வரலாம். ஆகஸ்ட் 1, 2000 ஆம் ஆண்டில், அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர். யாத்திரை மீண்டும் துவங்கியது. தாக்குதலை லஷ்கர் தொய்பா அமைப்பு நடத்தியது. ஜூலை 20, 2001 ஆம் ஆண்டில், அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டதில் 13 பேர் உயிரிழக்கிறார்கள். தாக்குதலை லஷ்கர் தொய்பா அமைப்பு நடத்தியது. 2002 குஜராத் தேர்தல்: 2001 ஆம் ஆண்டு குஜராத் முதலைமச்சர் ஆகிறார் நரேந்திர மோடி. பிப்ரவரி மாதம் கோத்ரா சம்பவம் நடைபெறுகிறது. குஜராத்திகள் ரயிலில் வைத்து எரிக்கப்படுகிறார்கள் (ரயில் பெட்டியில் உள்ளிருந்தே தீ பரவியுள்ளது என நிரூபிக்கப்பட்டது வேறு விஷயம்). உடனே பழியை முஸ்லிம்கள் மீது போடப்பட்டு, கலவரம் நடைபெறுகிறது. இந்துவா முஸ்லிமா என்பதே கலவரத்தின் நோக்கமாக இருந்தது. இந்துக்களை அனைவரும் ஒருங்கிணைத்து விட்டோம், தேர்தலை சந்திப்பதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என தனது அமைச்சரவையை கலைத்து தேர்தல் வைக்க வேண்டும் என்றார் மோடி. ஆனால் தேர்தல் ஆணையம் இதை ஏற்கவில்லை. கலவர சூடு கொஞ்சம் தணிகிறது. ஜூலை 30, 2002, அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இருவர் பலியாகிறார்கள். லஷ்கர் தொய்பா நடத்துகிறது. ஆகஸ்ட் 6, 2002 ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. 8 பேர் பலியாகிறார்கள். அதே ஆண்டு ஜம்முவில் ரகுநாத் கோவிலில் தாக்குதல் நடத்தப்படுகிறது 18 பேர் பலியாகிறார்கள். குஜராத் தேர்தல் வருகிறது. குஜராத் தேர்தல் 2007: பல மக்களின் ரத்தங்களை குடித்த மோடி, இம்முறை கண்டிப்பாக தோற்கடிக்கப்படுவார் என சமூக ஆர்வலர்களும், நல்ல அரசியல் வாதிகளும் நம்பினர். சென்ற முறை தேர்தலை புறக்கணித்த முஸ்லிம்கள், இம்முறை மோடியை தோற்கடிக்க வேண்டும் என உறுதியோடு இருந்தனர். கருத்து கணிப்புகளும் மோடிக்கு எதிராக அமைகிறது. இம்முறை தேர்தலில் "இந்து' என்கிற வார்த்தையை பயன்படுத்தாமல் சற்றே மாறுபட்டு "குஜராத்திகள்" என்று கூறி பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பே இந்த சொல்லாடலை பயன்படுத்துகிறார் மோடி. ஜூலை 11, 2006 மும்பை நகரம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அன்றைய தினம், மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடக்கிறது. இதில் 200 பேர் பலியாகிறார்கள். மலட், கான்டிவ்லி, பொரிவிலி பகுதிகளில் இந்த தாக்குதல் நடைபெறுகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவருமே குஜராத்திகள். பலியானோரில் பெரும்பாலானோர் குஜராத்திகள். இந்த தாக்குதல் குஜராத்திகளை குறிவைத்து நடத்தப்பட்டது என அப்போது பேசப்பட்டது. மோடி குஜராத்திகள் என பேச ஆரம்பித்த போது நடைபெற்றது எனலாம். தேர்தல் வருகிறது. சோனியா மோடியை மரண வியாபாரி என்கிறார். உடனே மோடி 5 கோடி "குஜராத்திகளை" சோனியா மரண வியாபாரி என்கிறார் என இன அடிப்படைவாதத்தை காட்டி ஓட்டுகளை ஒருங்கிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுகிறார். சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி. இந்து என்கிற வார்த்தையிலிருந்து, குஜராத்திகள் என மாறியதை மோடியே ஒரு பேட்டியில் கூறுகிறார். தேர்தல் பரப்புரையில் மத கலவரத்தை தூண்டி விடும் படியாக நான் பேசியதாக நிரூபித்தால் நான் தோல்வியை ஒப்புகொள்ள தயாராக இருக்கிறேன் என்று தனது பேச்சுக்கள் அடங்கிய சீடிக்களை தருகிறார். அவர் கூறியதை போன்றே அவர் இந்து, முஸ்லிம், இந்துத்துவா என்று பயன்படுத்த வில்லை. மாறாக இவை அனைத்தையும் உள்ளடக்கி குஜராத்திகள் என்று பயன்படுத்திவிட்டார். குஜராத் தேர்தல் 2012: குஜராத் சட்டமன்ற தேர்தல் 2012 ஆம் ஆண்டு நடைபெற இருந்தது. மோடி தற்போது பிரதமர் வேட்பாளர் கனவில் இருந்தார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, அது நிறைவேறும் எனவும் கணக்கு போட்டார். ஜூலை 13, 2011 மீண்டும் மும்பை தாக்குதல் நடைபெறுகிறது. வர்த்தக பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஏராளமான வர்த்தகர்கள் பலியாகிறார்கள். இதிலும் குஜராத்திகளே அதிகம். இம்முறையும் குஜராத்திகள் என்கிற வாதத்தை முன்வைக்கிறார் மோடி. நாட்டின் பிரதமர் ஆவதை விட குஜராத்தியாக இருப்பதையே பெருமையாக நினைக்கிறேன் என்று கூறுகிறார். தேர்தலில் வெற்றியும் பெறுகிறார். மேற்கண்ட தாக்குதல் அனைத்துமே குஜராத் தேர்தலை மையம் கொண்டே நடத்தப்படுகிறது. பலியானவர்கள் அனைவருமே குஜராத்திகள் தான். இது சட்டமன்ற தேர்தலுக்கு மட்டுமல்ல, நாடாளுமன்ற தேர்தலின் போதும் நடந்துள்ளது. 2004 நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு 1 வருடத்திற்கு முன்பு, 2003 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முந்தைய வருடம் 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நடைபெறுகிறது. இதிலும் ஏராளமான குஜராத் வியாபாரிகள் இறந்துள்ளார்கள் என கூறப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு, தேர்தலுக்கு முந்தைய வருடம் 2013, உத்தரகாண்ட் வெள்ளத்தில் மோடி தனியாளாக சென்று ஆயிரக்கணக்கான குஜராத்திகளை டொயோட்டா காரில் காப்பாற்றினார் என செய்தி வெளியிட்டார்கள். ஆக எப்போதெல்லாம் குஜராத் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் நாட்டில் ஏதேனும் ஒரு மூளையில் குஜராத்திகள் பலியாகிறார்கள். இம்முறையும் அடுத்த ஆண்டு குஜராத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் இம்முறை மோடி முதல்வர் வேட்பாளர் அல்ல. மாறாக பிரதமர். தற்போது குஜராத்தில் ஆம் ஆத்மி வலுவாக உள்ளது. குஜராத்தில் தோற்றால் மோடிக்கு தான் அசிங்கம். மீண்டும் குஜராத்திகளை ஒன்றிணைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். தலித் பிரச்சனை, ஜி.எஸ்.டி போராட்டம், இட ஒதுக்கீடு போராட்டம் என குஜராத் மக்கள் ஆளும் பா.ஜ.க விற்கு எதிராக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் குஜராத்திகள் என்கிற எண்ணத்தில் இருந்து மாறுபட்டு வேறு கோட்டில் நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும் மீண்டும் குஜராத்திகள் என வட்டத்தில் அடைக்க வேண்டும் என்று இந்த அமர்நாத் யாத்திரை தாக்குதல் நடைபெற்று இருக்கலாம். இப்படி சந்தேகம் வர காரணம் இதற்கு முன்னாள் நடைபெற்ற சம்பவங்கள் தான். கடந்த 15 வருடங்களாக நடைபெறாத தாக்குதல் இப்போது நடைபெற்றுள்ளது. மேலே நான் கூறிய அமர்நாத் தாக்குதல் லஷ்கர் தொய்பா அமைப்பால் நடத்தப்பட்டது. கடந்த 15 வருடங்களாக இந்த அமைப்பு செயல்படவில்லையா? தூங்கினார்களாக? குஜராத் தேர்தல் வரும்போதெல்லாம் குஜராத்திகள் பலியாவதற்கு என்ன காரணம்? பதிவு செய்யப்படாத பேருந்து எப்படி அனுமதிக்கப்பட்டது? இரவு 7 மணிக்கு மேல் அனுமதியில்லாத சாலையில் இரவு 8.30 மணிக்கு எப்படி அந்த பேருந்து மட்டும் அனுமதிக்கப்பட்டது? மேலும், ஜூன் 17 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் ஆன்ச்பால் பகுதியில் 6 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட வழக்கில், தேடப்பட்ட "லஷ்கர் தொய்பா தீவிரவாதி" பஷீர் லஷ்கரி என்பவரை ஜூலை 1 ஆம் தேதி என்கவுண்டர் செய்கிறார்கள் பாதுகாப்பு படையினர். இவருடன் ஒரே வீட்டில் தங்கி இருந்த சந்தீப் சர்மா என்பவரையும் கைது செய்கிறார்கள். இவர் உ.பி முசாபர் நகரை சேர்ந்தவர். லஷ்கர் தொய்பா அமைப்பில் தீவிரவாதியாக இருக்கிறார். இவர் மீது ஏ.டி.எம் திருடு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், சந்தீப் சர்மா கைது செய்யப்பட்ட வீடு அமைத்துள்ள ஆனந்த்நாக் பகுதி தான், தற்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய போதெல்லாம் காங்கிரஸ் செயல்படவில்லை இந்தியா பயப்படுகிறது என கூறிய பா.ஜ.க ஆட்சியில் தான், அமர்நாத் யாத்திரை தாக்குதல் அனைத்தும் நடந்துள்ளது. பக்தர்களை பாதுகாக்க தவறிவிட்டதா பா.ஜ.க? பா.ஜ.க ஆட்சியின் போது மட்டுமே லஷ்கர் தொய்பா அமைப்பு செயல்படுமா? என்கிற கேள்வியும் எழுகிறது. இந்தியா என்பது மிகப்பெரிய நாடு. அந்த நாட்டின் பாதுகாப்புக்கு என்று தனி அமைச்சர் இல்லை. பல நெருக்கடிகளை கொண்ட துறையான நிதி துறையின் அமைச்சராக இருக்கும் அருண்ஜெட்லி தான் பாதுகாப்பு துறைக்கும் அமைச்சர். நமது நாட்டின் எல்லைக்குள்ளே வந்து அத்துமீறும் சீனா பற்றிய விவாதத்தையும், ஜி.எஸ்.டி விவாதத்தையும், குஜராத்திகள் என்கிற வட்டத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என எல்லோராலும் கூறப்படுகிறது. குஜராத் தேர்தல் வரும்போதெல்லாம் குஜராத்திகள் பலியாவதும் வியப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என நமக்கு நாமே சப்பை கட்டு கட்டிகொள்கிறோம். உண்மையில் தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது தான். ஆனால் உலக அளவிலும், உள்ளூர் அளவிலும் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் அனைத்தும், உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்டவை தான். வாழ்வில் தோல்வி அடைந்தவர்களை follow செய்து அவர்களை மூளை சலவை செய்து தீவிரவாதி ஆக்குகிறது சர்வதேச மாபியா கும்பல். நாட்டில் நடைபெறுகிற எல்லா தீவிரவாத தாக்குதல் பின்னாலும் ஒரு அப்பட்டமான அரசியல் இல்லாமல் இல்லை. அமர்நாத் யாத்திரையில் கொல்லப்பட்ட 7 பக்தர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் ... https://www.facebook.com/tamilnadu.goverment/posts/296832174114379 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |