Posted by S Peer Mohamed
(peer) on 7/14/2017 3:51:44 AM
|
|||
ஜமால் சார் ! நான் நமதூர் எலிமெண்ட் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எனக்கு ஆசிரியர் அதன்பின் அதே பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் மென்மைக்கு மறுபெயர் ஜமால் சார் என்று சொல்லலாம் பள்ளிக்கூடத்தில் பாடம் எடுக்கும்போது மிகவும் எளிமையாகவும் மாணவர்கள் எளிதில் புறிந்து கொள்ளும்படியும் பாடம் நடத்துவார்கள் ஜமால் சாரை கண்டு அவரிடம் படித்த எந்த மாணவர்களும் பயந்ததை நான் பார்த்ததில்லை மாறாக .," மிகவும் மரியாதை " கொடுப்பதை பார்த்திருக்கின்றேன் நான் உள்ப்பட . அந்த அளவுக்கு எல்லா மாணவர்களிடமும் அன்பாய் மென்மையாய் பழகும் பக்குவம் கொண்டவர் ஜமால் சார் படித்த காலத்துடன் ஜமால் சாரின் தொடர்பு விட்டு போய்விட்டது அதன்பின் அவரை நான் சந்தித்தது துபாயில் ( 1978 ) துபாயில் அன்றைய புகழ் பெற்ற bank of oman நிறுவனத்தில் நல்ல அந்தஸ்தான பதவியில் இருந்தார் துபையில் பணியாற்றிய நமதூர் ஏர்வாடி மக்கள் எல்லோரிடமும் மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்தார்கள் இந்த நேரத்தில்தான் துபையில் " eman " தொடங்கப்பட்டது 1978 ஈமானின் முதல் பொருளாளராக இருந்து மிகவும் கண்ணியமாய் எல்லோரும் மதிக்கதக்க அளவில் செயல் பட்டார் . ஜமால் சார் துபாயை முடித்து விட்டு ஊருக்கு வரும்வரை அவர்தான் ஈமானின் பொருளாளராக இருந்தார் என்று நினைக்கின்றேன் நானும் துபாயில் இருக்கும்போது 13 / 14 ஆண்டுகள் ஜமால் சாருடன் பழகி கழித்த உன்னத தருணங்கள் மனசு மறக்காதவை பழக எளிமையானவர் ஆலோசனைகள் வழங்குவதில் அனுபவஸ்தர் அடுத்தவரை உள்ளன்போடு நேசித்து பாசம் கண்ட மரியாதைக்குரிய ஜமால் சார் அவர்கள் இன்று (4-Jul-2017) இறைவனடி சேர்ந்திட்ட (வபாத் ) செய்தி கிடைத்தது யா அல்லாஹ் அன்னாரின் பாவங்கள் யாவையும் மன்னித்து அன்னாரின் மண்ணறையை வெளிச்சமாக்கி Peer Mohamed
இன்று 06.07.2017 அஸர் தொழுகைக்குப் பின்னர் கீழ முஹல்லம் - இப்ராஹீம் கனி, ஈமான்.
ஜமால் சார் - ஒரு ஈமானிய ஆளுமை I wish to share a few thoughts about Jamal Sir. He was my head master and my class teacher in my seventh and eighth standards in 1973 & 1974. Then I had close contacts interacting with him in Eman matters as its treasurer in Dubai in 1989. Then I dealt with him on personal and family matters. Then lastly I was interacting with him on Keezha Muhallam affairs. During all these phases of interaction, I never ever saw him upset or angry with anyone. He was cool and gentle. Amazing qualities everyone should adapt, but I am not able to. Alhamdulillah he was such a good person. Masha Allah. May Allah reward him suitably! I remain praying... |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |