இஸ்லாமின் பெயரால் அமர்நாத் யாத்ரீகர்கள் கொல்லப்பட்டதற்கு காஷ்மீரில் உமர் அப்துல்லா முதல் உமர் ஃபாரூக் ,காஷ்மீர் மக்கள் வரை கடும் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளதோடு எங்களின் பெயரால் (#NotInMyName) தீவிரவாதச் செயலில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்ற தெளிவான ,உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
இந்து மதம்,பசுவின் பெயரால் தீவிரவாதத்தில் ஈடுபடும் குண்டர்களுக்கும், அதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் வலிமையற்ற மத்திய அரசுக்கு எதிராகவும் இந்துக்களும், மத நம்பிக்கையில்லாவிட்டாலும் மனிதநேயம் பேணுபவர்களும் 'எங்களின் பெயரால் அப்பாவி இஸ்லாமிய,தலித் மக்களைக் கொல்லும் இந்த தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியா முழுவதும் #NotInMyName என்று ஒன்றுதிரண்டனர். அதையே இன்று இஸ்லாமியர்களும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.
இந்திய சமூகத்திற்கு இது ஒரு நல்ல செய்தி. மதத்தின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படுவதை ஒரு சமூகமாக மக்கள் எதிர்த்து நிற்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
மாற்று மதத்தினர் தங்களது மதத்தின் பெயரால் தீவிரவாத தாக்குதலுக்கும்,கொலைக்கும் உள்ளாவதை எதிர்த்து நிற்கும் இந்திய சமூகம் ,இந்த தீவிரவாதிகளிடம் இருந்து தன்னைத் தானே காத்துக்கொள்ளும் வலிமை பெற்றிருக்கிறது எனபது தெளிவு.
மதத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாத செயல்பாடுகள்,படுகொலைகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படவேண்டும். இவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த தேசத்திற்கு ஆபத்தானவர்கள்.
மக்கள் மத்தியில் பிளவு அரசியலை ஊக்குவிக்கும் சுயநல அரசுக்கும்,தீவிரவாதிகளுக்கும் மக்கள் கொடுத்திருக்கும் எச்சரிக்கைதான் இந்த #NotInMyName பிரகடனம். இனிமேலும் மக்கள் இந்த கொடுஞ்செயல்களை பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
இந்துக்களும்,இஸ்லாமியர்களும் இந்தியர்கள். மனிதநேயமே அவர்களின் முதல் நம்பிக்கை என்பது மீண்டும் ஒருமுறை இந்திய மண்ணில் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சகோதரி ஜோதிமணி சென்னிமலை முகநூல் பதிவு
https://m.facebook.com/story.php?story_fbid=10212013383482298&id=1604805555
|