Posted by Haja Mohideen
(Hajas) on 7/22/2017 1:32:17 PM
|
|||
ஒரே ஊர்! ஒரே பாங்கு! ஒரு சிறிய யோசனை!! விரும்பதகாத சம்பவத்தால் இன்று நமது ஊரில் பாங்கின் ஓசை பரவலாக கேட்கவில்லை அதனால் நமது சிரமத்தை போக்க நாம் ஏன் FM TRANSMITTER முறையில் பாங்கை ஒலிக்க செய்யகூடாது. ஒரே பாங்கு! ஒரே இடத்தில் மிகவும் அழகான குரலில் இனிமையாக சொல்லப்படும் பாங்கை ஒட்டு மொத்த ஊருக்கும் கேட்கும்படியான வசதியை நாம் ஏன் ஏற்படுத்தக்கூடாது? நம்மிடையே, நமது சமுதாய மக்களில் Electric & Electranic பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஏராலம் அவர்களில் நல்ல திறமையான அதே நேரத்தில் சாதிக்க துடிக்கும் சகோதரர்களை ஒரு குழுவாக அமைத்து அவரகளிடம் அதன் வேலையை கொடுக்கலாம் அதற்காக ஊதியமும் கொடுக்கலாம் இப்போது சில பள்ளிவாசல்களின் பாங்கு சத்தம் ஸ்பீக்கரில் ஓலிபரப்புவதன் காரணமாக பக்கத்து தொருவிற்கே கேட்கவில்லை என்ற மக்களின் அதனால் தெருவுக்கு ஒரு ஸ்பீக்கர் வைக்கலாம் என்ற யோசனையிலும் சில பள்ளி நிர்வாகம் இறங்கயுள்ளன அதற்காக பல மீட்டருக்கு வயர்கள் வாங்கப்பட வேண்டும். #*FM Transmitter அமைப்பதற்கு எங்கே பதிவு செய்யது அதற்கான உரிமம் பெறவேண்டும் வருடத்திற்கான கட்டணம் என்ன. எத்தனை சதுர கிலோ மீட்டருக்கு ஓலிபரப்ப முடியும் #*ஏதாவது ஒரு பள்ளியின் மினராவை ஒலிபரப்பு கோபுரமாக பயன்படுத்தலாம் #* வயர் இல்லா தொழில் நுட்பத்தின் மூலம் வயர்களில் ஏற்படும் பழுகளினால் ஏற்படும் தடைகளையும் பொருளாதார செலவையும் கட்டுப்படுத்த இயலும் #* நமக்கு தேவைப்படும் இடங்களில் FM System பொருத்தப்பட்ட ஸ்பீக்கர்களை நிறுவ இயலும் #* நமது வீடுகளில் உள்ள FM Radio 📻 வையும் நாம் பயன்படுத்திக்கொள்ள இயலும் #* FM Radio 📻 System பராமரிப்பு செலவு குறைவு #* இந்த FM RADIO SYSTEM மூலமாக பாங்கு ஒசைக்கு மட்டும் அல்லாமல் பல வகையான ஆக்கபூர்வமான அறிவிப்புகளுக்கும் பயன்படுத்தலாம் #* ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தாலும் ஒட்டு மொத்த ஊரையும் ஒரே அழைப்பில் ஒர் இடத்தில் ஒன்று சேர்க்க இயலும் இதை பற்றி ஒருபுறம் யோசிப்போமா?! https://www.facebook.com/photo.php?fbid=1811065622255712&set=gm.1392487504153296&type=3&permPage=1 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |