ஏர்வாடியில் நிரந்தர நிலத்தடி நீர் சேமிப்பு
ஊரில் தண்ணீர் பஞ்சம் என்கிறார்கள்.
Si Sulthan
தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க கமிட்டி அமைத்து அடிக்கடி மீட்டிங் போட்டு பேசுகிறார்களாம், போட்டோவெல்லாம் போடுகிறார்கள், ஆனால் அதன் விரிவான செய்தி விளக்கங்களை காணோம். கொடுமுடியாற்றிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என மனு கொடுத்தார்களாம்.
எனக்கு மனதில்பட்ட ஒரு சிறு யோசனையை சொல்கிறேன், சரியா வருமா? என ஆலோசிக்கவும். டேமிலேயே தண்ணீர் இல்லாதபோது ஆற்றில் எப்படி தண்ணீர் வரும் என தெரியவில்லை. அப்படி டேமில் தண்ணீர் வந்தாலும் அதை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாயத்துக்கு திறந்துவிடுவார்களே தவிர, குடிதண்ணீருக்காக ஆற்றில் திறந்துவிட மாட்டார்கள் என்று நான் கருதுகிறேன்.
மேலும் மழைநீர் சேமிப்பு என்பது மழை வந்தால் மட்டுமே சேமிக்க முடிவது. நம் ஊரில் மழை பெய்தால் நிலத்தடி நீர் தட்டுப்பாடு அதிகம் வருவதில்லை. இதெல்லாம் தற்காலிக யோசனைகள், எப்போதும் நீரை சேமிக்க நான் சொல்லும் யோசனை என்னவென்றால்: நமது ஊரில் அனைத்து தெருக்களிலும் சிமிண்ட் கால்வாய் கட்டி தினசரி ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் குளிக்க துவைக்க என வெள்ளமாக ஓடி கழிவு நீராக ஆற்றில் கலக்கிறது.
குறிப்பாக இந்த நீர் கக்கூஸ் தண்ணீர் அல்ல. எல்லாவீட்டிலும் கக்கூஸ் வசதி பெரும்பாலும் இருக்கிறது.எனவே கக்கூஸ் தண்ணீர் நேரக கக்கூசுக்குதான் போகுமே தவிர கழிவு நீரோடு கலப்பதில்லை. கழிவு நீராக ஓடுவதெல்லாம் குளிக்கும், துணி துவைக்கும் நீர் மட்டுமே. எனவே ஒவ்வொரு வீட்டுக்கும் முன்போ, அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளிலோ(10 அடிக்கு ஒன்று, அல்லது 20 அடிக்கு ஒன்று) கழிவுநீர் கால்வாய்களில் தரையில் இருக்கும் அடிப்பகுதி கான்கிரீட்டை 2க்கு 2 என்ற அளவில் மண் தரைவரை பெயர்த்துவிட வேண்டும். (முடிந்தால் அந்த இடங்களில் மேலும் ஆழமாக குழி தோண்டி மழை நீர் சேகரிப்பு முறையில் உடைந்த செங்கல், மணல், கூழாங்கல் முதலியவற்றால் நிரப்பலாம், இல்லாவிட்டால் அப்படியே விட்டாலும் போதும்) இப்போது ஆறாக ஓடும் கழிவு நீர் கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது மண்ணின் வழியாக நிலத்தில் இறங்கும். இது நிலத்தடி நீர் மட்டத்தை , பக்கத்தில் இருக்கும் வீட்டு போரின் நீர்மட்டத்தை கொஞ்சமாவது பாதுகாக்கும். ஒரு பத்தோ இருபதோ அடிக்கு நீர் தரையை கடந்து போகும்போது அது ஆட்டோமேட்டிக்காய் பில்டர் ஆகிவிடும். அதனால் அது நன்னீராக மாறிவிடும். மேலும் இந்த கழிவுநீர் குளிக்கும், துணி துவைக்கும் தண்ணீர்தான் ஆகையால் அருவருப்படையவும் தேவையில்லை.
இது மிகவும் எளிதான வழி.. இதனுடைய சாதக பாதகங்களை சகோதரர்கள் ஆலோசிக்கலாம், விமர்ச்சிக்கலாம்.
https://www.facebook.com/photo.php?fbid=1420972147952302&set=a.122339681148895.12044.100001185906417&type=3&permPage=1
|