Posted by Haja Mohideen
(Hajas) on 7/29/2017 10:47:37 AM
|
|||
தமிழ்நாட்டு மக்கள் உடனடியாக செய்யவேண்டியது
தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கி தமிழ்நாட்டு மக்களின் மூளையை மழுங்கடித்து 1. Big Boss எல்லாரையும் பார்க்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயனற்ற மிகப்பெரிய அபத்தமான நிகழ்ச்சி.. 2. TNPL இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி, வேலை மற்றும் தொழில்களின் மீது இருக்கும் கவனத்தை சிதறடித்து அவர்களின் முன்னேற்றத்தை பாதிக்கும் ஒளிபரப்பத் தேவையில்லாத விளையாட்டு நிகழ்ச்சி.. 3. நாடகத்தொடர்கள். தத்தம் சேனல்களை பார்க்க வைக்கும், விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 4. ரஜினி & கமல் அரசியல் பிரவேசம் தனது படத்திற்கு விளம்பரம் தேடி, தனது படத்தை ஓட வைக்கும் குறுக்குபுத்தியுள்ள ரஜினியின் கேவலமான வியாபார புத்தி... தமிழனின் எந்த பிரச்சினைகளுக்கும் குரல்கொடுக்க யோக்கியதை இல்லாத கன்னடப் பற்றுள்ள கன்னடத்தான் என்கிற போலித்தமிழன். எல்லாம் சிரிக்கிறாங்கன்னு பூனை போய் பாத்ரூம்ல சிரிச்சுதாம்.. கமலின் அரசியல் வார்த்தைகள் அப்படிதான்.. பயனுள்ளதாய் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்ய தெரியாத செய்ய முடியாத தமிழ்ப்புலி என்று சொல்லிக்கொள்ளும் பொதுநலத்தைப் பேசி தன்னலத்தைப் பற்றி மட்டுமே செயல்படுத்தும் திருட்டுப் பூனை.. 5. அ.தி.மு.க கண்ணாமூச்சி நோ கமெண்ட்ஸ் (கூத்துகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்) 6. சினிமா, மது, பொழுதுபோக்கு, IPL, கார்ப்பரேட் கவர்ச்சிகள் மற்றும் பல... (பட்டியல் நீளும்) தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க யாரும் களமிறங்கவில்லை... ! தமிழர்களே தமிழ்நாட்டை காப்பாற்ற களமிறங்குங்கள்...
இதையெல்லாம் நாம் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்காக சொல்கிறேன். நம்முடைய பிள்ளைகள் சோலைவனமாக இருக்கவேண்டிய தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமே தவிர தமிழ்நாட்டை பாலைவனமாக்கி அதில் தண்ணீருக்கும் சோற்றுக்கும் அலையும் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக.. இவ்வளவுநாளாய் சும்மா இருந்து வரும் தலைமுறையினர் வாழட்டுமே சுகமாய்... (பகிருங்கள் https://www.facebook.com/groups/baithussalam/permalink/1398679200200793/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |