Posted by Haja Mohideen
(Hajas) on 7/31/2017 9:23:39 AM
|
|||
ரேசன் கடைகளுக்கு மூடுவிழா – தமிழக அரசு அரசாணை வெளியீடுசென்னை, கொஞ்சம் கொஞ்சமாக ரேசன் கடைகளை மூடி மக்களின் கொஞ்ச நஞ்ச வாழ்வாதாரத்தையும் குழிதொண்டி புதைக்கும் வேலையில் மத்திய மாநில அரசுகள் இறங்கியிருக்கிறது. அதன் ஒருபகுதியாக பொது விநியோக திட்ட பயணாளிகளை அடையாளம் காணும் விதிமுறைகள் என்ற பெயரில் தமிழக அரசு ஒரு அரசாணையை இன்று வெளியிட்டிருக்கிறது. உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி , நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் ,3 அறைகளுக்கு மேல் கொண்ட கான்கிரீட் வீடுகள் வைத்திருப்பவர்கள், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஈட்டுபவர்கள், வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மத்திய , மாநில அரசு ஊழியர்கள் , குளிர்சாதன பெட்டி வைத்திருப்பவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, வருமான வரி செலுத்தக்கூடிய ஒரு நபரை கொண்ட குடும்பத்திற்கு ரேஷன் பொருட்கள் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நகர்ப்புறம் – அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்களுக்கு, நகர்ப்புறம் – அன்னபூர்னா திட்ட பயணாளிகளுக்கு கொண்ட குடும்பங்களுக்கு, கணவரை இழந்த பெண்கள் குடும்பத்திற்கு, திருமணமாகாத பெண்களை குடும்ப தலைவராக உள்ள குடும்பங்களுக்கு, மாற்று திறனாளியை குடும்பா தலைவராக கொண்ட குடும்பத்திற்கு, நகர்ப்புறம் – வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுகள், நகர்ப்புறம் – ஓய்வூதியம் திட்ட பயாணிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |