ஏர்வையில் புகழ் பெற்ற திண்ணைகள்....
ஏர்வாடி நகரில் ஒவ்வொரு தெருவிலும் அவரவர்களுக்கு பிடித்த திண்ணைகள் உண்டு ...ஆனால் இம்மூன்று திண்ணைகள் மட்டும் மிக பிரபலம்...
திண்ணை நம்பர் ஒன்று:
அஞ்சாவது தெரு (உறவுமுறை வேண்டாம்) ஐ ஓ பி இஷாக் பாய் வீட்டு திண்ணை...இங்கு வருகை தராதவர்கள் மிக மிக அரிது. காலை நேரம் பொதுவாக லீவ் விட்டிருக்கும்,காரணம் திண்ணை கிழக்கு பக்கம் இருப்பதால் வெயில் சூடு இருக்கும்.இரவு ஒரு மணி இரண்டு மணி வரை தர்பார் அமளி துமளி படும். படையப்பா படத்தில் ரஜினி,செந்தில் காமடி ஒன்று உண்டு. “மாப்ள இவர்தான் அவர்போட்டிருக்கும் கோட் என்னுடையதுன்னு” அதேமாதிரி இஷாக் பாயிடம் ஒரு ராலி சைக்கிள் இருந்தது,சைக்கிள் என்னமோ அவருடையதுதான்.ஒருகாலம் அவர் ஓட்டுனது இல்ல ... காரணம்,காலையில் சைகிள் வீட்டிலிருந்து வெளிய வரும்... அதுக்கப்பறம் அத யார் எடுதுட்டுபோரா,எங்க போயிருக்கு,எப்ப திரும்பி வரும் யாருக்கும் தெரியாது.திரும்பி வரும்... எப்போதெரியுமா...? ராத்திரி படுக்கும்போது வாசல்ல வந்து நிக்கும்....வண்டி பஞ்சர் ஆனாலோ,டயர் போனாலோ யாரும் கவலை படப்போவதில்லை....காரணம் நம்ம இஷாக் பாய்.....எந்த கேள்வியும் இல்லாம அழகா புதுசு மாற்றி வச்சிடுவார் மவராசன்...ஆனால் சைகிள் அவருடையது ...ஆனா அது அவருக்கு சொந்தமில்லை ....ஓட்டாத ஆள் இல்லை ...போகாத இடமும் இல்லை .. இந்த திண்ணைக்கு பெர்மனேண்டா அஞ்சு உறுப்பினர்கள் உண்டு, இந்த அஞ்சு உறுப்பினர்களும் ஒரு நாலாவது லீவ் போட்ட சரித்திரமே இல்ல ... 1.பண்டுவர் குலாம் காக்கா...ஆள் சைஸுக்கு தகுந்தமாதிரி குரலும் அப்படி இருக்கும், 2.கம்மடி பீர் மச்சான்(தற்போதைய மாத்தள பீர்)வெண்கல சிரிப்புக்கு சொந்தகாரர்...மனுஷன் சிரிச்சா தூரத்துல உள்ளவன் கூட சொல்லுவான் இது யார் சிரிப்புன்னு. 3.அலி ஷேக் மன்சூர் மீரான் காக்கா 4.கம்பனி வீட்டு பாஷா காக்கா 5.கட்ட காஜா காக்கா
திண்ணை நம்பர் ரெண்டு:
எட்டாவது தெரு மீரான் காக்கா(அலியப்பா) வீட்டு திண்ணை 24 மணிநேர சர்விஸ் திண்ணை....பட்டப்பெயர் வைப்பதற்கு புகழ் பெற்ற திண்ணை ....உதாரனத்திற்க்கு:குட்டாளி அப்பா பேரன் அப்பாபேக்கு ஒரு பெயர் வைக்கணும்....எல்லோருக்கும் பட்ட பெயர் இருக்கு இவனுக்கு மட்டும் சரியா அமையல...சபைகூடி ஒருமித்த குரலுடன் குட்டாளி என்ற முன்னேளுத்தின் “கு”வையும் பேரன் என்ற முன்னேளுத்தின் “பே”வையும் ஒன்று சேர்த்து நம்ம அலியப்பா முன் மொழிய கட்டப்பா ரபீக் காக்கா வைத்த பெயர் தான் “குபே” இப்படி பல தலைசிறந்த பெயர்களை உருவாக்கும் திண்ணை .
திண்ணை நம்பர் மூன்று:
ஏழாவது தெரு A.M.S வீட்டு தின்னைன்னும் சொல்லலாம் கிணத்தடிவீட்டு வீட்டு தின்னைன்னும் சொல்லலாம் ...ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லுவது சைத்தான் திண்ணை .... எந்த கிணத்துல தண்ணி அதிகமா கிடக்கு,எந்த குளத்துல தண்ணி இருக்கு ,எந்த வீட்டு தோட்டத்துல தேங்காய் இருக்குன்னு துல்லியமா தெரியக்கூடிய திண்ணை.இந்த திண்ணையில் உள்ளவர்களால் அதிகமா பாதிக்கப்பட்டவர் திரு.சாமுவேல் சார் ...இவர் அஞ்சாவது தெரு இஷாக் பாய் வீட்டிற்கு பக்கத்தில் வாடகைக்கு குடி இருந்ததால் இந்த திண்ணையை தாண்டிதான் போக வேண்டும் வர வேண்டும்.மனுஷன் ரொம்ப பாதிக்கப்பட்டு நொந்து நூலானது தனி வரலாறு.... இது போக உங்க தெருவிலும் இருக்கும்....தெரியபடுத்துங்க...தெரிஞ்சிக்குவோம் ....
https://www.facebook.com/groups/baithussalam/permalink/1421692987899414/
|