Posted by Haja Mohideen
(Hajas) on 9/6/2017 10:40:00 PM
|
|||
சமூகத்தின் விளிம்புகளில் இருந்து உருவாகும் மருத்துவர்கள்
சில மாதங்களுக்கு முன்னாள் நடிகர் சத்யராஜின் மகள் ஒரு புகாரை எழுப்பினார், வெளிநாட்டு மருந்து கம்பெனிகளின் தரமற்ற மருந்துகளை பரிந்துரைப்பதற்கு லஞ்சம் தருவதாக சொல்கிறார்கள் மறுத்த பிறகு மிரட்டுகிறார்கள் என்றார். சில தினங்களுக்கு முன்பு நடத்திய பாஜக அலுவலக முற்றுகை கைதின் போது வந்திருந்த தோழர் ஒரு விஷயம் சொன்னார். தமிழகம் தெற்காசியாவின் மருத்துவ சுற்றுலா, இந்தியாவிலேயே சிறந்த சுகாதார கட்டமைப்பு என்பதெல்லாம் நாம் அறிந்த விஷயம். இந்த நீட்டின் மூலமாக அவர்கள் UnEthical மருத்துவர்களை உருவாக்க விரும்புகிறார்கள். ஏனென்று சொன்னால் வெறும் 20 ஆயிரம் ரூபாயில் அனிதா மாதிரி ஒரு பொண்ணு எந்த தடையும் இல்லமால் இங்கு மருத்துவராகிவிட முடியும். அப்படி சமூகத்தின் விளிம்புகளில் இருந்து உருவாகும் மருத்துவர்கள் இந்த சமூகத்தின் பல்வேறு வலியை புரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சவாலாக இருக்கிறார்கள். தமிழ்ச்சமூகத்தின் இயல்பான அறம் கண்மூடித்தனமாக மருந்து டெண்டர்களை ஒத்துக்கொள்ளாமல் அவர்களை தடுக்கிறது, சத்யராஜின் மகள் விஷயத்தில் நடந்தது போல. இப்போது இப்படியொரு கட்டமைப்பைதான் தமிழகத்தில் இருந்து துடைத்தெறிய நினைக்கிறார்கள். நமக்கு கல்வித்தரத்தை பற்றி, கட்டமைப்பை பற்றி சொல்லித்தர இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது, அப்படி வரும்போதே சட்டையை புடிச்சு கேட்ருக்க வேண்டும். தினசரி நாளிதழில் பார்க்கிறோம்தானே உத்தரபிரதேசம் கோரக்க போரை போல எத்தனை மாநிலங்களில் விதவிதமான உயிரிழப்புகள் நோய்கள், நமது மருத்துவ தரத்தை பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.. அடுத்து கட்டமைப்பு, நிர்வாகம் அந்த லட்சணத்தை அம்புட்டு தூரம் போயெல்லாம் பார்க்க வேண்டியதில்லை, தமிநாடு வரும் வடநாட்டு ரயில்களை பார்த்தாலே தெரிய வேண்டாமா?. இவர்கள் என்ன லட்சணத்தில் நிர்வாகம் பண்றாங்கன்னு.. இப்பொது பிரச்சினை வளர்ச்சியில் அவர்கள் நம்மைவிட 30 வருடம் பின்தங்கி இருப்பதல்ல, அதை தமிழ்நாட்டு மக்கள் உணராமல் இருப்பதே. நாம இன்னும் தூரம் போக வேண்டாமா என்றல் போக வேண்டும்தான், ஆனால் நமக்கு பின்னாலிருப்பவர்களோடு போட்டி போட்டு அல்ல.. முதலில் நம்ம கெத்து நமக்கு புரியனும்.. Anbe Selva
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |