இஸ்ரோ Vs. புல்லட் ரயில் =======================
ஒரு நாட்டின் மக்கள் தொகையில் 97% பஞ்ச பராரிகளாக இருக்கும் போது நேரு விண்வெளி ஆராய்ச்சிக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்க அடிக்கல் நாட்டுகிறார். 1962-ல் அதற்கு பெயர் இஸ்ரோ அல்ல, INCOSPAR (Indian National Committee for Space Research).
விக்ரம் சாராபாய் தான் முதல் நிறுவனர். 1969க்குப் பிறகு தான் அது இஸ்ரோவாகிறது. (Indian Space Research Organization). அதனுடைய காரணம் மகத்துவம் வாய்ந்தது.
அந்த காலக்கட்டத்தில் உலகில் வெகு சில நாடுகளில் மட்டுமே விண்வெளி ஆய்வுகளும், ராக்கெட் உருவாக்கும் தொழில்நுட்பம் இருந்தது. சீனாவுக்கே 60களில் விண்வெளிக் கனவுகள் கிடையாது. நேருவிற்கு இருந்தது.
நேரு ராக்கெட்களின் நுட்பத்தை வசப்படுத்துவதன் மூலம், இந்தியாவிற்கான பாதுகாப்பையும், நம்பிக்கையையும், முக்கியமாக உலக அரங்கில் இந்தியாவின் இடத்தையும் முன் எடுத்தார். USSR துணையோடு நம்மால் விண்வெளிக்கு போக முடியுமென்றால் அங்கிருந்து நம்முடைய விவசாயம், தட்பவெப்பநிலை இன்னபிற சாத்தியங்களை இந்தியாவின் மக்களுக்கு தர முடியும் என்று நம்பினார். அது அந்த காலத்தில் ஒரு விதத்தில் அமெரிக்காவை எரிச்சலூட்டியதும் உண்மையே. ஆக நேருவின் இஸ்ரோ உருவாக்கத்தில் நாம் கவனிக்க வேண்டியது
1 ) Build a Platform - சோவியத் யூனியன் துணையோடு விண்வெளியில் இந்தியாவாலும் அதன் நாட்டு மக்களின் நலனுக்காக, தங்களுடைய பொருளாதார நிர்பந்தங்களைத் தாண்டி, அடுத்த கட்ட தொழில்நுட்பத்தை முன்னெடுக்க முடியும்.
2 ) National Security - இரண்டாம் உலகப் போருக்கு பின்னான காலக் கட்டமும், பனிப்போருக்கு முன்னாலும், புதியதாக உருவான ஒரு நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வது முன்னுரிமையாக இருந்தது. நேரடியாக விண்வெளி நுட்பத்தினை கையிலெடுத்தால் எதிரிகள் யோசிப்பார்கள். ஆக இது ஒருவிதத்தில் பாதுகாப்பு அரண்.
3 ) Evolve a Confident State - ஒரு நாத்திகரான நேரு இந்தியாவை அறிவியல் வழி சமூகமாக மாற்ற வேண்டும் என்பதில் தீரா கனவோடு இருந்தார். அதற்கு தேவை பெரும்பாலான மக்களின் கனவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துதல். ராக்கெட் நம்மாலும் விட முடியும் என்பது பிரிவினையாலும், பஞ்சத்தாலும் மனந்தளர்ந்திருந்த மக்களுக்கான உற்சாக டானிக்காகவும் அது இருந்தது. [1961-இல் அடுத்த பத்தாண்டுகளில் நிலவில் காலை வைப்போம் என்று அமெரிக்காவில் கென்னடி சொன்னதும் இதே டானிக் தான். நாசாவிடத்தில் 1960களில் நிலவிற்கு போவதற்கான தொழில்நுட்பமே கிடையாது]
4 ) Social Good - ராக்கெட் விடுவது என்பது வெறுமனே Chest beating அல்ல. மாறாக நேருவின் கனவே நவீன தொழில்நுட்பங்களை எப்படி பெரும் பாலான மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது என்பதாக தான் இருந்தது. அவர் கண்ட கனவு விவசாயிகளைப் பற்றி, மழையைப் பற்றி, பருவநிலையைப் பற்றி. தொழில்நுட்பத்தினைத் தாண்டிய சமூகப் பயன்பாட்டினைப் பற்றியே தான் அவருடைய கவனம் இருந்தது.
5 ) Prudent Financials - ராக்கெட் விட்டால் நம் பெயர் நிற்கும், அதனால் ராக்கெட் விட்டு இந்தியாவின் முதல் ராக்கெட்டினை பறக்க விட்டது நான் தான் என்கிற தற்பெருமைக்காக நேரு இஸ்ரோவினை உருவாக்கவில்லை. மாறாக சோவியத் யூனியனோடு பேசுகிறார். "எங்களிடத்தில் இப்போது தொழில்நுட்பமோ, முழுமையான பணமோ இல்லை, ஆனாலும் எங்களுக்கு இது தேவை. விரைவில் எங்களால் இந்த நுட்பத்தினைப் பயின்று அதனூடே என்னுடைய மக்களுக்கு பெரிய பலன்களை உண்டாக்க முடியும்" என்று முடிக்கிறார்.
க்ரோஜெனிக் தொழில்நுட்பத்தை தர மாட்டோம் என்ற போது இந்தியாவில் அதை indigeneous ஆக உருவாக்க முடிகிறது. அடுத்த 30 ஆண்டுகளில் வாஜ்பேயின் ஆட்சிக் காலத்தில் நாம் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை உருவாக்குகிறோம். இவை அத்தனையும் உலகின் பெரிய நாடுகள் உருவாக்குவதை விட ஐந்தில்/பத்தில் ஒரு பங்கு நிதியில் இந்தியாவால் உருவாக்க முடிகிறது. இதற்கு காரணம் அன்றைக்கு நேரு இதை bootstrap செய்தது தான்.
இது தான் நேருவின் இஸ்ரோ உருவாக்க கதை. இது ஒரு தேசத்தின், எதிர்காலத்தின் நம்பிக்கைக்கான விதையை, ஒரு தனிமனிதர் தன்னுடைய தொலைநோக்குப் பார்வையால் உருவாக்கிய கதை.
மாறாக புல்லட் ரயிலில் என்ன நடந்திருக்கிறது?
நாம் கடன் வாங்குகிறோம். தொழில்நுட்பத்தை ட்ரான்ஸ்பர் செய்ய முடியாது என்று ஜப்பான் சொல்லி விட்டது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு மோடி எதிர்கால சந்ததிகளின் வாழ்வியலை அடகு வைக்கிறார். இந்த 88,000+ கோடிகள் இந்தியாவின் இரண்டு நகரங்களை மட்டுமே ஒருங்கிணைக்கின்றன.
அதுவும் ஒரு ரயிலில் 750 - 1000 பேர்கள் தான் போக முடியும். இரண்டு வழித்தடங்களில் நான்கு ரயில்கள் முழுமையாக போனாலுமே கூட ஒரு நாளைக்கு 4,000 பேர்கள் தான் பயணிக்க முடியும். அதுவும் இதன் விலை ரூ.2,000 - 5000 வரை போகலாம். ஆக மாதத்திற்கு 1,20,000, வருடத்திற்கு 14,40,000 பேருக்காக ஏன் ஒரு நாடே கடன் வலையில் போய் விழ வேண்டும் ? இதில் எதுவுமே பொது சமூகத்திற்கான, பெரும் மக்கள் தொகைக்கான பயன் இல்லை.
இது உலகின் அதிநவீன தொழில்நுட்பமா, அதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் பெயர் நிற்குமா என்றால் இல்லை. 35 வருடங்களுக்கு முன்பிருந்து புல்லட் ரயில்கள் ஜப்பானில் ஒடுகின்றன. மாறாக, எங்கள் ஊரிலும் புல்லட் ரயில் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள தான் இது உதவப் போகிறது.
இதன் மூலம் ஏதாவது சமூக நன்மைகள் கிடைக்கப் போகிறதா என்றால் அது கூட இல்லை. ஆசைக்கு குஜராத்தியோ, மராத்தியோ ஒரு முறை போய் பார்க்கப் போகின்றான். மற்றபடி இதுவும் இப்போது யாருமே சீந்தாத மெட்ரோக்களைப் போல எந்த ROIயும் இல்லாமல் ஒடும். ஆனால் வாங்கிய கடன் ஒட்டு மொத்த தேசத்தின் மீதும் விழும்.
பெருந்திட்டங்களில் ROI பார்க்க வேண்டுமா என்கிற கேள்விகள் எழலாம். கண்டிப்பாக கிடையாது. பெரும் மக்களுக்குப் பயன்படுகின்ற அரசு திட்டங்களில் ROI பார்க்கப் படக் கூடாது, ஆனால் Social Impact கண்டிப்பாக பார்க்கப் பட வேண்டும். இந்த திட்டத்தில் ROIயும் கிடையாது, Social Impactம் கிடையாது.
ஆக எப்படிப் பார்த்தாலும் இஸ்ரோவையும் புல்லட் ரயிலையும் ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்குமான ஒப்பீடல். 'நேரு செஞ்சதை தான் நாங்களும் செய்கிறோம்' என்று காவிகள் சொல்வது அப்பட்டமான பொய்.
நேரு இஸ்ரோவை மொத்த இந்தியாவின் நன்மைக்காக செய்தார். மோடி புல்லட் ரயிலை தனக்கான சிம்பாலிசமாக நிறுவ முயற்சி செய்கிறார்.
கடைக்கோடி இந்தியனுக்கு நன்மை பயக்காத எந்த பெருந்திட்டமும் ஏற்புடையதல்ல. இந்த புல்லட் ரயில் போகப் போகும் குஜராத், மகாராஷ்ட்ராவின் மக்களுக்கே இந்த திட்டத்தால் எந்த நேரடியான பயனும் கிட்டாத போது, கடைக்கோடி இந்தியனைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
ஆக, மேம்போக்கிறாக சொல்லப்படும் ஒப்பீடுகளை அலசி ஆராயாமல் ஏற்றுக் கொண்டால், இந்த சனியன்களோடு இன்னும் 5 வருடங்கள் குப்பைக் கொட்ட வேண்டும். இதை எதிர்க்காமல் விடிவில்லை.
நேரு மக்களை நேசித்ததால் அதிகாரத்துக்கு வந்தவர்.
மோடி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக மக்களை கொன்றொழித்தவர்.
எத்தனை ஆயிரம் காவி மோடிகள் இந்த நாட்டில் வந்தாலும் ஒரு நேருவுக்கு ஈடாக முடியாது.
நேருவின் பார்வைகளையும், மோடியின் நார்சிஸத்தையும் ஒப்பிட்டு நேருவின் சாதனைகளை கேவலப் படுத்தாதீர்கள்.
"There are some who question the relevance of space activities in a developing nation. To us, there is no ambiguity of purpose. We do not have the fantasy of competing with the economically advanced nations in the exploration of the Moon or the planets or manned space-flight. But we are convinced that if we are to play a meaningful role nationally, and in the community of nations, we must be second to none in the application of advanced technologies to the real problems of man and society." - Vikram Sarabhai in the 1960s
#ISRO #BulletTrainMadness #Nehra #Modi
|