Posted by S Peer Mohamed
(peer) on 9/21/2017 12:03:33 PM
|
|||
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லையில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டம் திற்பரப்பு அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் சேர்வலாறு அணையின் உச்சநீர்மட்டம் 156 அடி. நீர் இருப்பு, 88.91 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1913.43 கன அடி ஆகும். மணிமுத்தாறு அணையின் உச்சநீர்மட்டம் 118 அடி. நீர் இருப்பு, 43 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 807 கன அடி ஆகும் பாபநாசம் அணை பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவு 143 அடி. நீர் இருப்பு, 83.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2804.72 கன அடி ஆகும். வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 304.75 கனஅடி. குமரி மாவட்ட அணைகள் பேச்சிப்பாறை அணையின் மொத்த கொள்ளளவான 48 அடியில் தற்போது வரை 21 அடி நீர் வரத்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2086 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணியின் மொத்தக் கொள்ளளவான 77அடியில் தற்போது 45.10 அடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1255 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணை மேட்டூர் அணை கர்நாடகா, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மிதமான மழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.16 அடியிலிருந்து 77.39 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணை இதேபோல் வைகை அணை நீர் மட்டமும் 36.81 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 61 கன அடியாகவும், நீர் கொள்ளளவு 717 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து 40 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு, சோத்துப்பறை அணைகள் நிரம்பிவழிகின்றன. பில்லூர் அணை நிரம்பியது சிறுவாணி அணை மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மொத்தம் 50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணை தற்போது 42 அடியை தாண்டி உள்ளது. திருமூர்த்தி அணை கேஆர்பி அணை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை முழு கொள்ளளவான 52 அடி நீர் இருப்பில் 51 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 355 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |