Posted by Haja Mohideen
(Hajas) on 9/23/2017 10:56:15 AM
|
|||
(#சின்னவா_கமல் முதலமைச்சர் ஆகி, ஊழலை ஒழிப்பேன் என உறுதிபடக் கூறியுள்ளதால் இந்த பதிவை 2 ஆம் முறை பதிகிறேன்) இப்படித் தான் ஒரு 4 வருசத்துக்கு முன்னாடி,,, "இந்தியாவில் ஊழல் பெருகீருச்சு,,எனவே காங்கிரஸை ஒழிக்கனும்,,,அப்படியே வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவை சொர்க்க பூமியாக மாத்தலாம்" எனக் கூறி,,, #அன்னா ஹசாரே, கிரண் பேடி,பாபா ராம் தேவ் என ஒரு படை கிளம்புச்சு,, அனைத்து ஊடகமும் 24 மணி நேரமும் அவர்கள் நடத்தும் உண்ணாவிரதத்தை காண்பித்தது,,,தமிழ்நாட்டில் இருந்து நடிகர் விஜய் கூட நேரில் போய் ஆதரவு தெரிவிச்சாரு,,, அதுக்கு அப்பறம் வந்த தேர்தல்ல ஆட்சி மாறுச்சு,,,ஆனா எந்த ஒரு கருப்பு பணமும் மீட்கப்படல,,, கருப்பு பணம் மீட்கபடவில்லை என்பதையும் தாண்டி,,,,அதுவரை தங்களை எந்த கட்சியை சாராத நபர்களாக காட்டிக் கொண்ட இந்த கூட்டம்,,ஒன்றன் பின்பு ஒன்றாக பாஜக,#ஆர்எஸ்எஸ்_டவுசர்கள் லைன்ல போய் நின்னுச்சு,,, இதுல #கிரண்_பேடி பாஜகவிலேயே நேரடியாக இணைந்து,இன்னைக்கு புதுச்சேரி கவர்னராக போய் உட்கார்ந்திருக்கு,,, அதுவரை பஞ்சப் பரதேசியாக இருந்த #பாபா_ராம்தேவ்,,,இன்று இந்தியாவில் மிகப் பெரிய தொழில் அதிபரில் ஒருவாக பாஜகவின் தயவால் மாறீருக்காரு,,,, அடடே !! "தங்களை ஏதோ உத்தம புருசர்கள் போல காட்டிக் கொண்ட இந்த கூட்டத்தை உருவாக்கியதே இந்த பாஜக தான் போல" ,,,என அப்ப தான் நமக்கே விசயம் புரிஞ்சுது,,, ஆனால் இந்த கூட்டம் காங்கிரசுக்கு எதிராக ஆர்பரித்த போது ,,,காங்கிரஸை வீழ்த்தினால்,,அவர்களுக்கு மாற்றாக அதை விட படு மட்டமான பாஜக தான் வரும் என நாம யாருமே யோசிக்கல,,, இப்ப மக்களாகிய நம்மால் போய் அவர்களிடம் "ஏன்டா !! நல்லவனுக போல பேசி ஏமாத்துனீங்களே, ,நீங்களும் அரசியல் பொழப்புக்கு தான் இந்த வேலையை பார்த்தீங்களா? என நியாயம் கேட்க முடியுமா?? சத்தியமா முடியாது,,,, #இப்ப_அப்படியே_தமிழ்நாட்டிற்கு_வருவோம் !!! எப்படி இந்திய அளவில் காங்கிரசுக்கு எதிராக ஊழலை ஒழிப்போம் என்ற கோசம் காங்கிரசுக்கு எதிராக முன் வைக்கப்பட்டதோ,,,அதே போல சில வருடங்களாக தமிழ்நாட்டிலும் ஒரு கோசம் முன் வைக்கப்படுது,,, அது "#திராவிடத்தால்_வீழ்ந்தோம்" "திராவிடக் கட்சிகளான அதிமுக,திமுகவை ஒழிப்போம்" என்ற கோசம்,,, இங்கேயும் "அன்னா ஹசாரே,அரவிந்த் கெஜர்வாலாக,,பாபா ராம் தேவாக,கிரண்பேடியாக" ஒரு கூட்டம் பார்ம் ஆயிருக்கு,,,, 60 வருட திராவிட ஆட்சியை வீழ்த்துவோம் என #சீமான், #தமிழருவி_மணியன் போன்றோர்களும்,,,, #சிஸ்டம்_சரியில்லை எனவும்,,,ஊழலை ஒழிக்க போறேன் எனவும் ரஜினி,""#கமல்"" போன்ற கூத்தாடிகளும் கூவித் திரிகின்றனர்,,, தமிழ்நாடு இந்தியாவில் மற்ற எல்லா மாநிலத்தையும் விட கல்வி,பொருளாதாரம், சுகாதாரம் என எல்லாத் துறைகளிலும் தலைசிறந்து விளங்குகிறது என்பதை சற்றும் யோசிக்காமல்,,, நாமும் "அய்யோ ஆமாங்க !! திராவிட ஆட்சியால தமிழ்நாடு ரொம்ப கெட்டு போச்சு" என இந்த கூட்டத்தின் ஒலறல்களை வழிமொழிகிறோம்,,, சரி திமுக,அதிமுகவை ஒழிச்சுட்டு யார வர வைக்க போறோம்?? அந்த இடத்தை நிரப்பி,தேர்தலுக்கு பல லட்சம் கோடி செலவு செய்யும் பெருளாதாரம் யாரிடம் உள்ளது?? அவர்களின் இடத்தை நிரப்ப யார் கழுகு போல காத்துக் கொண்டுள்ளனர்?? #கழகங்கள்_இல்லாத்_தமிழகம்' என யார் முழங்கித் திரிவது?? சந்தேகமே வேண்டாம் அதே "" #பாஜக """ தான்,,, ஆக தமிழ்நாட்டில் "திராவிடத்தை வீழ்த்துவோம்" "திராவிடக் கட்சிகளை ஒழிப்போம்" "ஊழலை ஒழிப்போம்" என வீர வசனம் பேசும் கூட்டத்தை யார் இயக்குகிறார்கள் என உங்களால் யூகிக்க முடிகிறதா?? Manoj kumar https://www.facebook.com/permalink.php?story_fbid=881680488663026&id=211971008967314
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |