Posted by Haja Mohideen
(Hajas) on 9/24/2017 12:24:57 AM
|
|||
Times Now ராகுல் சிவஷங்கர் கமல் அவர்களை எடுத்த பேட்டியின் பகுதிகளை அங்கொன்றும் இங்கொன்றும் பார்த்து, தற்போது தான் அதை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையை சொல்லப்போனால், ராகுல் சிவ ஷங்கரின் மிக சிறப்பான, கமலை சமாளிக்கும் வித்தை அறிந்த விதமாக தான் முழு பேட்டியும் இருந்தது. அவர் கேட்டது, பெரும்பாலும் rapidfire கேள்விகள், இதில் மட்டுமே தான் கமலை சிக்க வைக்க முடியும் என்பதை அவர் அறிந்திருக்கிறார், ஏனினில், கொஞ்சம் விட்டு பிடித்தால், கமல் சொல்ல வேண்டியதை விட்டு, வேறு எங்கெங்கோ போய் சாமர்த்தியமாக தப்பித்து கொள்ளும் நழுவுற மீன். பாண்டே கமலை எடுத்த பேட்டியில், பாஜக அராஜகங்கள் குறித்த கேள்விகள் இல்லாமல், மாநில கேள்விகள் மட்டுமே ஆக்கிரமித்தது, பேசி வைத்துக்கொண்டு எடுத்த இன்டெர்வியூ என்று நிறைய பேர் விமர்சனம் செய்திருந்தார்கள். அந்த குறை இந்த பேட்டியில் நிவர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது. Rapidfire கேள்விகளில், கமலால் வெட்டொன்று துண்டு இரண்டு என்று பதில் சொல்ல முடியாமல் அவர் தொண்டைக்குழி குண்டு மேலும் கீழும் ஓடியது. மாட்டு இறைச்சி அராஜகம், டீமானிடைசேஷன், மோடி ஆட்சி, கர் வாப்ஸி, போன்ற எந்த விவகாரத்துக்கும், தன்னோட நிலைப்பாட்டை சொல்வதற்கு கமலுக்கு இருந்த சங்கடம் வெளிப்படையாக தெரிந்தது. மாட்டு அரசியல் விவகாரத்தில் கூட தன்னோட நிலைப்பாடாக "எல்லாமே holy" ரக பதில்களை சொல்லி சமாளித்தார். கேட்கப்பட்டது நாட்டில் நடக்கும் cow vigilantism பற்றி, ஆனால் கமல் சொன்னது "தான் உயிர்களை எப்படி பார்க்கிறேன்" என்பதை பற்றி. இது தான் கமலின் தந்திரம். " its cruel , its atrocious " என்று கூட கமலால் சொல்ல முடியாது, ஆனால் ராகுல் எதிர்பார்த்தது இந்த நிலைப்பாடுகளை தான். ஓகே, இறுதியாக; கமல் தன்னோட அரசியல் விளையாட்டை மீடியா எதிர்பார்க்கும் விடையை தராமல் சாமர்த்தியமாக நழுவுகிறார் என்று வைத்து கொண்டாலும், ஒரு ஐந்தாண்டு ஆட்சியில் இருந்து விட்டு எதிர்கொள்கிற கேள்விகளுக்கான விடையாய் ஒரு தேர்ந்த அரசியல் வாதியை போல பதில் சொன்னாலும், அதில் அரசியல் தன்மை கலந்து இருந்தாலும், அது தான் நிதர்சனமாக இருக்கும், ஏனினில் அரசியல் சூழ்ச்சி, சறுக்கல் நிறைந்தது. ஆனால் ஒரு புது வரவாக, எந்த இயக்கத்திலும் இல்லாத காற்றாற்றமான மடியில் கனமில்லாத சுதந்திரம் இருக்கும் போதே கமலால் ஒற்றை பதிலில் தன்னோட நிலைப்பாட்டை சொல்ல முடியாத போது, கமலுக்கு எதை பேச வேண்டும் எதை பேச கூடாது என்கிற கொள்கை இருக்கு, அதை இனி தான் கமல் நிறுவ போகிறார் என்பதில்லை, இதை கமலை தொடர்ச்சியாக கவனித்து வருகிறவர்களுக்கு தெரியும். எடப்பாடி, ஓபிஸ், செல்லூர் ராஜு, தனபால் போன்ற பிள்ளை பூச்சிகளை அடித்து கமல் தன் அரசியல் நிலைப்பாட்டை நிறுவுகிறாரே தவிர, ராகுல் சிவ ஷங்கரின் கேள்விகளான பாஜக வை சேர்ந்த சங்கீத் சோம், யோகி ஆதித்ய நாத், சாக்ஷி மஹராஜ் போன்றவர்களின் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மமான அறிக்கைகளை குறிப்பிட்டு கேட்ட போது, ரோலர் கோஸ்டாரில் நூறடி உயரத்தில் அரை நிமிடம் நிறுத்தி, மீண்டும் சர்ரென்று கீழ் இறங்கும் போது இருந்த பயம், கமலின் முகத்தில் தாண்டவமாடியது. அதிலும், யோகி ஆதியநாத்தின் கடந்த காலத்து அச்சுறுத்தல் அறிக்கைகளை குறித்து கேட்ட போது, "நீங்க எதை கேக்குறீங்க தம்பி, கொஞ்சம் படித்து சொல்லுங்க" என்பதை போல அப்பாவியாக, தான் செய்தி தாள்களே படிக்காதது போலவே, அதையெல்லாம் முதல் முறை கேட்பதை போலவே கேட்டு தலையாட்டியது எல்லாம் கிளாசிக்♥ கமல் நீட்டி மொழுக நினைத்த போதெல்லாம், "நான் கேட்டது இவ்ளோ தான், அதுல உன் stand தெரிஞ்சிடிச்சி, நீ ஏன் பேசிட்டே இருக்க" என்று ராகுல் சிவசங்கர் அடுத்த கேள்விக்கு தாவியது, நானொன்னும் "சினேகன், ஆரவ், காயத்திரி, ஜூலி இல்ல" பேசுறதை கேட்டுட்டே இருக்க attitude. நல்ல நேர்காணல்🙏🙏 https://youtu.be/I-q_XHNcwjY https://www.facebook.com/Musicallybaskar/posts/10213224166214450 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |