Posted by Haja Mohideen
(Hajas) on 10/31/2017 2:43:10 AM
|
|||
சென்னையில் வசிக்கும் தோழமைகளின் #கவனத்திற்க்கு...
சென்னையில் இன்னும் நாலைந்து நாட்களுக்கு மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... *மழையினால் மின்தடை ஏற்படலாம், தண்ணீர் கிடைக்காமல் போகலாம். எனவே, வாய்ப்பு அல்லது நேரம் இருக்கும்போது கீழ்க்கண்டவற்றை செய்வது நல்லது. * பிஸ்கட், பால் அல்லது பால் பவுடர், அவசர மாத்திரைகள், தண்ணீர் கேன், பேட்டரி செல்கள், மெழுகுவர்த்தி, ரெடிமிக்ஸ் உணவு வகைகள், காய்கறிகள் போன்ற பொருட்களை போதுமான அளவுக்கு (மட்டும்) வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். * மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். * செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள். பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள். * மின்தடை இருக்கும்போது யுபிஎஸ் அல்லது இன்வர்ட்டரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். * தரைத்தளத்தில் வசிப்பவர்கள் மேடான இடத்திற்கு நகர வேண்டிய தேவை வரக்கூடும் என்பதால், முன்னரே அதற்கான இடங்களை அறிந்து வைத்திருங்கள். * குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள். * குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள். * ரயில், பஸ் என முக்கியப் போக்குவரத்து வசதிகள் தடைபடும் என்பதால் சென்னை தொடர்பற்ற தீவாகும் சாத்தியங்கள் உண்டு. ஆடம்பரங்களைத் தவிர்த்திடுங்கள். * உதவும் வாய்ப்பு உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இயன்ற அளவுக்கு உதவுங்கள். * கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனிக்கவும் - வேகமாக ஓடும் வெள்ள நீர் அரை அடி உயரம் இருந்தாலும் போதும், உங்கள் வாகனத்தை இழுத்துச்செல்லப் போதுமானது. எச்சரிக்கையாக இருங்கள். #சாதி_மதம்_இனம்_மொழிகளை கடந்து https://www.facebook.com/permalink.php?story_fbid=901029010061507&id=211971008967314
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |