Posted by Haja Mohideen
(Hajas) on 10/31/2017 3:55:57 AM
|
|||
54000 டன் மலேசிய மணல் முடக்கம்..!கன்னியாகுமரி பசங்க நாங்க54000 டன் மலேசிய மணல் முடக்கம்..! புதுக்கோட்டையை சேர்ந்த MRM ராமையா என்டர்பிரைசஸ் மலேசியாவிலிருந்து வரலாற்றிலையே முதல்முறையாக வரிகள் அனைத்தும் முறையாக கட்டி இறக்குமதி செய்யப்பட்ட ஆற்று மணல் முடங்கும் அபாயம்! தமிழக வரலாற்றில் முதல் முறையாக மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட 54 ஆயிரம் டன் வீடுகட்டும் மணல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மணல் மாஃபியாக்களின் நெருக்கடியால் கனிமவள அதிகாரிகள் மணலை துறைமுகத்தில் இருந்து எடுத்துச்செல்ல தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது! தாமிரபரணி… காவிரி…. தென்பெண்ணை… பாலாறு என தமிழகத்தின் நீராதரமாக விளங்கும் எல்லா ஆற்றிலும் ஈவு இரக்கம் இல்லாமல் நடந்த மணல் கொள்ளையின் விளைவு இன்று நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. அதோடு ஆற்றில் மணல் அள்ள நீதிமன்றம் விதித்துள்ள தடை காரணமாக ஒரு சில மணல் குவாரிகளே செயல்பட்டு வருகின்றன. அரசு குறைந்த விலைக்கு மணலை வழங்கினாலும் தட்டுபாட்டை பயன்படுத்தி மணல் மாஃப்பியாக்கள் ஒரு டன் மணலுக்கு 12 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விலை வைத்து விற்கின்றனர். மணல் தட்டுப்பாட்டால் பல கட்டுமான நிறுவனங்கள் தவித்து வருகின்றன. 7 கோடியே 75 லட்சத்து 54 ஆயிரத்து 813 ரூபாய் மதிப்புள்ள அந்த மணலுக்கு 2 கோடியே 88 லட்சம் ரூபாய் சுங்க வரியும் செலுத்தப்பட்டது. மேலும் ஜி.எஸ்.டி 38 லட்சம் ரூபாயும் செலுத்தியுள்ளனர். கப்பலில் இருந்து துறைமுக வளாகத்தில் கொட்டப்பட்ட மணலை 54 லாரிகளில் கடந்த சில தினங்களாக கேரளாவின் திருவனந்தபுரத்துக்கும் தமிழகத்தில் சில பகுதிகளுக்கும் 1000 டன் மணல் ஏற்றிச்செல்லப்பட்டது . இவற்றில் ஆறு லாரிகளை ஆரல்வாய் மொழியில் மறித்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக ஆறு லாரிகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் முறையாக வரி செலுத்தியிருப்பதாலும், மணலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருப்பதாலும் எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்வது என்று தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த 54 ஆயிரம் டன் மணலும் மார்கெட்டுக்கு வந்தால் எங்கே உள்ளூரில் 50 மடங்கு விலைக்கு விற்கப்படும் மணல் விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுமோ என்று அஞ்சிய மணல் மாஃப்பியாக்கள், இதனை தடுத்து வைத்திருப்பதாக கட்டுமான நிறுவனத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். பல வருடங்களாக தமிழகத்தில் ஆறுகளை சூறையாடி மணல் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட போதெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த கனிம வளத்துறையினர், முறையான சுங்கவரி கட்டி இறக்குமதி செய்யப்பட்ட மணலை வெளியில் எடுத்து வர தடை போட்டுள்ளது ஏன் ? என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு!54000 டன் மலேசிய மணல் முடக்கம்..!
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |