Posted by Haja Mohideen
(Hajas) on 11/14/2017 1:45:19 AM
|
|||
திருநெல்வேலி நினைவுகள்...!! தூய சவேரியார் கல்லூரியில் வேதியியல் துறையில் சீனிவாசன் என்ற பேராசிரியர் பாளை தெற்கு பஜாரில் இருந்தார். ஒரு முறை வாசலில் அவர் நின்று பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த வழியே வந்த காவல் ஆய்வாளர் மகன் யாரோ ஒரு பெண்ணை கேலி செய்வதை பார்த்து சத்தம் போட்டாராம். அவன் நேரே அவனது அப்பாவிடம் சென்று பேராசிரியர் திட்டிய சம்பவத்தை சொல்லி இருக்கிறார். அந்த இன்ஸ்பெக்டர் நேரே வந்து பேராசிரியரை காவல் நிலயத்துக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கி இருக்கிறார். அருகில் இருந்த இன்னொரு பேராசிரியர் ஒருவர் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவரையும் தாக்கி இருவரையும் ரிமாண்ட் செய்திருக்கிறார்கள். மறுநாள் காலையில் விசயம் வெளியே தெரிந்து சேவியர் கல்லூரி மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்து இருக்கிறார்கள். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் ஊர்வலமாக இறந்த அவன் உடலை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கல்லூரி நோக்கி மாணவர்கள் வர, காவல் துறை கல்லூரி வாசலில் சம்பவம் நடைபெற்றது 21.11.1972... தனது பேராசிரியர் தாக்கப்பட்டதற்காக தனது உயிரை இழந்த மாணவன் லூர்து நாதன் நினைவாக பாளை தெற்கு பஜாரில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களால் லூர்துநாதன் சிலை திறக்கப்பட்டது. நாற்பத்தைந்து வருடங்கள் ஓடி விட்டன.. மாலை வேளைகளில் சிலை அருகே பானி பூரிக்களையும் , உளுந்த வடைகளையும் ஆமை வடைகளையும் ஆசையோடு தின்று கொண்டு இருக்கும் மாணவர்களையும், அந்த மாணவன் எங்கோ சேலத்தில் இருந்து இங்கே படிக்க வந்து நம்ம ஊர் பேராசிரியர் சீனிவாசனுக்காக உயிர் தியாகம் செய்தவன் என்ற வரலாறு அவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை...
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |