Posted by Haja Mohideen
(Hajas) on 11/20/2017 1:54:06 AM
|
|||
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மனுஷீ சில்லர் தேர்வாகியுள்ளார். இத்தனை நாள் இந்தியாவில் அழகிகளே இல்லையா? இப்போ என்ன திடீர்ன்னு 20 வருஷம் கழிச்சி? ஜிஎஸ்டி வரியை கடுமையாக உயர்த்தி, பின்னர் கொஞ்சமாக குறைத்து, ரிட்டர்ன் பைல் பண்ணுவதை கடுமையாக்கி, பின்னர் அதை கொஞ்சம் எளிமையாக்கி, ஒருவழியா மக்களுக்கு ஜிஎஸ்டி-யோடு கட்டாய கல்யாணம் செஞ்சி வெச்சிடுச்சு அரசாங்கம். மக்களும் ஜிஎஸ்டி-யோடு குடும்பம் நடத்த ஆரம்பித்தும் விட்டனர். WTO-வின் வறுபுறுத்தலால் தான் ஜிஎஸ்டி இந்திய மக்கள் தலையில் சுமத்தப்பட்டது எனும் குற்றச்சாட்டுக்கு வலிமை சேர்க்கும் விதத்தில் உள்ளது இந்த உலக அழகி தேர்வு. ஒரே அளவிலான வருமானம் இல்லாத நாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வரி என்ற அருப்புதமான கொள்கையை திணித்து, இப்போது அந்த பொருட்களில் குறிப்பிட்ட சில பொருட்களை சந்தை படுத்த இந்தியாவை சேர்ந்த ஒரு உலக அழகியும் தேர்வாகிவிட்டார். ஏற்கனவே தேர்வான முன்னாள் உலக அழகிகளுக்கு வயதாகி விட்டாலும் அவர்களும் அந்நிய நிறுவனங்களான கார்னியர், ரெவ்லான் போன்ற ஹேர் டைக்கு மாடலாகிவிட்டார். இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் மேக்கப் போடும் பெண்களுக்கு, இனி FACEBOOK-ல் லைக் போடுவதில்லைன்னு காளையர் அனைவரும் சபதமெடுத்தால், கன்னியரை காத்த பெருமைக்கும் ;) அந்நியரை விரட்டிய பெருமைக்கும் சொந்தக்காரர்கள் ஆகலாம் :P -BALA- https://www.facebook.com/prabhuyourfriend/posts/1534069909981289 https://www.facebook.com/prabhuyourfriend/posts/1534078866647060
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |