Posted by Haja Mohideen
(Hajas) on 12/10/2017 7:24:33 AM
|
|||
#சமீபத்திய_அரசியல்வாதிகளின்_துரோகம்_ஒரு_தெளிவான_பார்வை களவியற் காரிகை
தமிழக மக்களே நன்றாக கவனித்தீர்களாயின் அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனம் தற்போது வெட்டவெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டு இருக்கின்றனர். எவ்வளவு பெரிய கிரிமினல் குற்றவாளியாக இருந்தாலும் அவனுக்கே தெரியாமல் ஒரு தடயத்தை விட்டு செல்வான் என்பது தான் புலனாய்வு துரையின் கோட்பாடு. அதே மாதிரி தான் தற்சமயம் தெரியாமலே தமது தடயத்தை விட்டுள்ளது தமிழக அரசியல் வியாதிகள் அனைத்தும், நன்றாக கவனியுங்கள் எதற்காக ஆட்சிக்கு வருகிறீர்கள் என்றால் அத்தனை பேரும் சொல்லக்கூடிய ஓரே வார்த்தை நாங்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்று தான் கூறுவார்கள். ஆனால் எதற்காக இவனுங்க ஆட்சிக்கு வருகிறான் என்பது எங்களுக்கு தெரியாமல் இல்லை. சமீபகாலமாக இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளின் கபட நாடகத்தை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உணராமல் இல்லை. இவ்வளவு நாளாக அரசியல் என்றால் அப்பாவின் வேட்டி, மேல் துண்டு பஸ்ஸில் போகும் போது நடக்கும் கூட்டம் என்று தான் இளைஞர்களாகிய நாங்கள் அறிந்து வைத்து இருந்தோம். ஆனால் என்றைக்கு நாங்கள் இவனுங்கள் சுதந்திரம் பெற்றது முதல் மாறி மாறி கூட்டணி ஆட்சிதான் செய்துள்ளனர். ஆனாலும் பெரிய அளவில் மாற்றம் ஒன்றும் இல்லை. மாற்றம் வந்தது அரசியல்வாதிகளின் கஜானாவில் தான். சமூகவலைதளத்தில் நாங்கள் கிழிக்கும் கிழி அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் தோற்கிறது காரணம் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு டீவி சேனல், தலைவர் இன்றைக்கு அங்க போனார் இங்கே வந்தார் என்று தொடர்ந்து அவங்க கட்சிக்காரர்களை திருப்தி படுத்த ஒளிபரப்பு செய்துக்கொண்டே இருக்கிறது . வேறொரு சேனலில் இந்த தலைவரின் ஊழல் பிரித்து மேயப்படுகிறது. நம்ம ஆளு தான் வேற சேனல் கூட பார்க்க மாட்டானே. ஆக கட்சியின் அடிமட்ட தொண்டன் முதற்கொண்டு அவங்க கட்சியின் பத்திரிக்கையை வாரம் தவறாமல் வாங்கி படிக்க வேண்டும். ஏற்கனவே கொடுக்கும் திட்டத்தை மேலே இருந்து அடிமட்ட மக்களுக்கு வருவதற்குள் அவனுங்க ஆளுங்க பிச்சி பிச்சி கடைசியில் பிச்சையாகத்தான் நமக்கு வருகிறது. இப்படி எவ்வளவோ திருடி அவனுடைய சாதாரண தொண்டனின் உழைப்பை திருடிய அனைத்து கட்சிகளின் யோக்கியதையை சமீப காலமாக இளைஞர்கள் நாங்க பார்த்து வருகிறோம். இதையே நாங்க சமூக தளத்தில் இருந்து செருப்படி கொடுக்கும் போது அவனுக்கு வலிக்கிறது. இதனுடைய கோபம் தான் நீண்ட நாள் பகையை தீர்க்கத்தான் மாணவர்கள் போராட்டதில் தடியடி நடத்தி தமது இச்சை புத்தியை அடக்கி கொண்டனர். . . சரி இப்போது விஷயத்திற்கு வருகிறேன். நாம என்னதான் சமூகவலைதளத்தில் இவனுங்க யோக்கியதையை போட்டாலும் அவனுங்க தொண்டன் கேட்கவே மாட்டார்கள். உதாரணமாக மோடி நாட்டு மக்களே இந்தியாவின் வறுமைக்கு காரணம் அதிகமக்கள் தொகைத்தான் அதற்காக நான் ஒரு திட்டம் வைத்துள்ளேன் மாத வருமானம் 15 ஆயிரத்து கீழ் உள்ள மக்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும். என்று கூறினாலும் அடடே என்ன மாதிரியான தலைவர் டா எங்க தலைவரு என்று விஷத்துக்கு வியாக்கியானம் சொல்லத்தான் அவன் கட்சி கூட்டம் வருமே தவிர அடேய் இருக்கும் பணக்காரர்கள் அத்தனை பேர் வீட்டிலும் சோதனை செய்யுங்கடா எங்கள ஏண்டா இப்படி சாவடிக்கிறீங்க என்றால் . நீ ஆண்டி இந்தியன் என்று வாய்கிழிய பேசுவானுங்க தவிர சிந்திக்கவே மாட்டார்கள். அதனால் அதற்கு நாம் கவலைபடக்கூடாது. எத்தனை நாளைக்கு தான் நம்ம தாத்தா பாட்டி திமுக டா அதிமுக டா பாஜக டா காங்கிரஸ் டா னு கதறிக்கொண்டு இருப்பார்கள். அடுத்து நாமதான். நாம் தேர்தெடுக்கும் நபர் தான் முதல்வர். தொண்டன் கதறிக்கொண்டே இருப்பான் கண்டுக்கவே வேண்டாம். ஒரே ஒரு வார்த்தை தான் மக்களை காப்பாற்றத்தான் அரசியலுக்கு வர போகிறாய் என்றால், குமரி மாவட்ட மீனவர்களுக்கு களத்துக்கு வரவேண்டியது தானே எவனை ஏமாற்ற வேண்டும். இளைஞர் கூட்டமே சமூகவலைதளத்தில் இவனுங்க யோக்கியதையை வச்சி கிழித்துக்கொண்டே இரு இது தான் நாம இவனுங்களுக்கு கொடுக்கும் செருப்படி. . நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் ஊடகங்கள் விலைபேசப்படுகிறது. குமரி மீனவர்கள் பிரச்சினையை திசைதிருப்ப எத்தனையோ முயர்சியை ஊடகங்கள் வாயிலாக அரசியல் கட்சிகள் செய்கின்றது. இந்த சமூகவலைதளம் மட்டும் இல்லையென்றால் எந்த விஷயமும் தெரிந்து இருக்காது. மீனவர்கள் கொடூர புகைப்படத்தை வெளியிட்டது சமூகவலைதளம் தான் பின்னர் தான் ஊடகங்கள் குதிக்க ஆரம்பித்தது. ஒரு சக பிரஜையை காப்பாற்ற வக்கு இல்லாத ஒருத்தி என்னமோ சொந்த காச பிச்சகாரனுக்கு போடுவது போல பேசுறா கேட்டால் அவள் தான் பாதுகாப்பு அமைச்சராம் அதில் ஒரு சக மீனவன் விரக்தியில் தூக்கு மாட்டி தொங்குவது போன்று கேட்டானே கேள்வி இதை எந்த ஊடகமாவது வெளியிட்டதா ? இத்தனைக்கும் அங்கு அத்துனை ஊடகமும் இருந்தது. சமூகவலைதளம் தான் வெளியிட்டது. நீங்க யோசித்து பாருங்கள் குஜராத்துல எவன் ஜெயிச்சா நமக்கு என்ன ? ஆனா இந்த தந்தி டீவி கும்பல் பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குஜராத்தை போய் படம் எடுத்து இங்க ஒளிபரப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாட்டு தேர்தலுக்கு குஜராத் சேனல்கள் இங்கு வந்து உட்கார்ந்து கொண்டு படம் பிடிக்கிறதா ? இவ்வளவு செலவு செய்ய தெரிந்த ஊடகத்திற்கு இதை விட கம்மியான செலவு தான் ஆகும் இங்கு உள்ள குமரி மாவட்டம் சென்று ஒரு படகை வாடகைக்கு எடுத்து மீனவர்கள் மாட்டிக்கொண்டு தவிக்கும் அல்லது அவர்களின் பிணங்கள் மிதந்து கொண்டு கிடக்கும் அவல காட்சியை இவனுங்களின் கேடுகெட்ட ஆட்சி முறையின் உதாரணம் என்று கேள்வி எழுப்ப திராணி உண்டா ? அட அந்த பிணங்களையாவது மீட்டிய திருப்தி உணக்கு கிடைக்குமே செய்வானுகளா? மாட்டார்கள். இது தான் கேடுகெட்ட ஊடகங்களின் அறமாம்.. அரசியல் வாதிகளையும் ஊடகங்களையும் கேள்விகேட்க சமூகவலைதளம் தான் சரி கேட்போம் நமது கேள்வியை
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |