Posted by Haja Mohideen
(Hajas) on 12/30/2017 4:49:37 AM
|
|||
#முத்தலாக்_தடை_சட்டம். ஏற்கனவே ... உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ...இந்த இன்ஸ்டன்ட் ட்ரிபிள் தலாக்கைத் ...தூசி தட்டி ...மறுபடியும் பாராளுமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ள . மோடி வகையறாக்களே. உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பே ஒரு சட்டம்தான் (Judge Made Laws) ஆகவே ஏற்கனவே உள்ள சட்டத்தை மறுபடியும் புதிதாகச் செய்வது போல் 120 கோடி மக்களின் நேரத்தை வீணடிப்பது ஓர் வரலாற்றுப் பிழை . மேலும் விவாகரத்து வழக்குகளைப் பொறுத்தவரை இந்த தேசத்தில் மிக அதிகம் துன்பப்படுவது இந்துப் பெண்களே இஸ்லாமியப் பெண்கள் அல்ல. ஒரு விவாகரத்து HMOP வழக்கு மெயின் சூட் எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்றும் பாதிக்கப்பட்ட இந்துப் பெண் தனது வாழ்விற்காக போடும் Maintenance Petition ஐ I/A வின் மீது I/A வாக எத்தனை வழக்குகள் ஓடும் என்றும் அந்த I/A விலேயே எத்தனை அப்பீல் மனுக்கள் ஓடும் என்றும் பலருக்கும் தெரியாது. நீதிமன்ற நடைமுறையே தெரியாமல் பலரும், தலாக்கை எதிர்த்து பதிவுகள் இடுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகின்றது. இத்தனை இடைக்கால I/A மனுக்களால் பெண்தரப்பு சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்து விடும். பல பெண்கள் திக்குத் திசையற்று சிதறி விடுவார்கள் ... இத்தனை துன்பங்களை நிர்க்கதியாக, இந்துப் பெண்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதை எல்லா நீதிமன்ற வாசல்களிலும் அனைவரும் காண இயலும் ... பாஜகவின் இந்த தலாக் சட்டமுன்வடிவால் எந்த இஸ்லாமிய பெண்ணும் தன் கணவன் மேல் போலீசில் புகார் அளிக்கப் போவதில்லை (அரிதிலும் அரிதாக ஒரு சிலரைத் தவிர) . மற்றபடி, மோடி வகையறாக்களைப் பொறுத்தவரை இந்துக்களோ,இஸ்லாமியர்களோ, அதைப் பற்றிக் கவலையில்லை கார்ப்ரேட் நலன் மட்டுமே முக்கியம். முத்தலாக் சொல்லி தன் மனைவியை விவாகரத்து செய்யும் நபருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை... இது அறிவுக்கு பொருத்தமற்ற சட்டம். சில_கேள்விகள்... 1. அந்த நபரை சிறையிலடைத்து விடுவதால், அவர் அந்த பெண்ணுடன் மீண்டும் இணைந்து வாழ்ந்திடுவாரா.? 2. அவர் சிறைச்சாலையிலிருக்கும் காலத்தில், அந்த பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் வாழ்வாதாரம் கொடுக்கப் போவது யார்.? 3. இந்த சட்டத்தினால் விவாகரத்து குறைந்து விடுமா.? 4. தண்டனைக்கு பயந்து தலாக் சொல்லாமலேயே அந்த பெண்ணை அவர் ஒதுக்கி வைத்துவிட்டால், அவளின் நிலை என்ன.? இந்த தண்டனை சட்டம் அந்த பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு அளிக்கும்.? 5. அந்த ஆண் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்தோ, செய்யாமலோ இல்லற வாழ்க்கை வாழும்போது, இந்த பெண் மட்டும் தனியாக வாழ்வது அவளுக்கான தண்டனை ஆகாதா.? ( உதாரணம் : மோடியின் மனைவி யசோதா) 6. மேற்கூறிய 5 வது கருத்தின்படி வாழும் அந்த ஆண் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வது சாத்தியம்தானே.? 7. இணைவி, துணைவி (கீப்) என்ற நடைமுறையை இந்த சட்டம் எப்படி எதிர்கொள்ளும்.? ஒரு முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணை, உயிரோடு இருக்கும் நிலையில் அவள் வயிற்றைக் கிழித்து கொன்ற கூட்டம் இன்று அவளுக்காக கவலை கொள்வதுதான் வேடிக்கையாக உள்ளது. https://www.facebook.com/groups/974379272628815/permalink/1715431015190300/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |