Posted by S Peer Mohamed
(peer) on 12/31/2017 2:36:47 PM
|
|||
29 டிசம்பர் 2017 காலையில் பம்பரம், குச்சிக் கம்பு, ஆபியம் மணியாபியம் என பம்பரமாக சுழன்று விளையாட ஆரம்பித்தனர். விளையாடும்போது அங்கு வந்த வெளிநாட்டினர் விளையாட்டினை ரசித்து புகைப்படம் எடுத்தனர். அநேகமாக நமது ஊர் விளையாட்டுக்கள் இந்நேரம் அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ பிரபலம் ஆகி இருக்கும். ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் சுவையான நெய் சோறு, சிக்கன், கறிக்குழம்பு, இனிப்புடன் மதிய உணவு தலைவாழை இலையில் பரிமாறப்பட்டது. சகோதரர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர். கல்யாண வீட்டு சாப்பாடு போல் இருந்ததாக ஒரு சகோதரர் குறிப்பிட்டார். பின்னர் வந்திருந்தவர்கள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு கயிறு இழுக்கும் போட்டி, ஏழு கல் , உறியடி. கபடி என பால்ய காலத்திற்கே இழுத்து செல்லும் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டது. 40 வயதிற்கு கீழ் மற்றும் 40 வயதிற்கு மேல் என ஓட்டப் பந்தயமும் நடத்தப்பட்டது இது ஒரு புறம் நடக்க, சகோதரிகள் சிட்டிக்கல், பல்லாங்குழி, டாகஸி டாக்ஸி , மூலை போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களில் மூழ்கினர். மொழி இன்றி சொல் என பழமொழியை சைகையுடன் சொல்லும் போட்டியும் பெண்களுக்கு நடைபெற்றது. குழந்தைகளுக்காக லெமன் ஸ்பூன், சாக்கு ஓட்டம், தமிழில் ஆங்கில வார்த்தைகளை சொல்லும் போட்டி , ஓட்டப் பந்தயம் போன்றவை நடத்தப்பட்டது. இதற்காக முயற்சி எடுத்து உழைத்த சகோதரர்கள் அனைவருக்கும் குறிப்பாக சகோதரர்கள் அல்தாஃப், தவ்ஃபீக், அமீர் புஹாரி , முஹைதீன் ஆகியோருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் அனைத்து நலன்களையும் அருள்வானாக. ஊரிலிருந்து ஈமான் நிகழ்ச்சிக்காகவே வந்து கலந்துகொண்டு சிறப்பித்ததுபோல் அமையப்பெற்றது ஈமான் நிறுவனர்களில் ஒருவரான ஷாபி காக்கா , லெப்பைவளவு முத்தவல்லி பாரூக் காக்கா, புதுக்குடி ஸேக் காக்கா, அவுலியா சார் ஆகியோரின் வருகை. இது தவிர பொதக்குடி ஜலால் காக்கா , டாக்டர் ஸாஹுல் ஹமீத் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டது சிறப்பாக இருந்தது. காலை, மாலை மண்டை வெல்லத்தில் தயாரிக்கப்பட்ட தேனீர் வழங்கியது cherry in the cake ஆக அமைந்தது வாட், வேலை போன்ற டென்சனிலிருந்து விடுபட்டு புத்துணர்வு பெற்ற ஒரு நாளாக இந்த நாள் அல்லாஹ்வின் அருளால் அமைந்தது என்றால் மிகையல்ல… ஜஸாக்குமுல்லாஹு கைரா. ஈமான் டிரஸ்ட்
http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=69_2017_Eman_Cultural_Day-I http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=68_2017_Eman_Cultural_Day-II http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=67_2017_Eman_Cultural_Day-III
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |