மயிலாடுதுறையில், மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் நாகை மாவட்ட அனைத்து ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, நாகை மாவட்ட அனைத்து ஜமாஅத்துல்உலமா சபைத் தலைவர் கே.எம். யாகூப் அலி காஸிமி தலைமை வகித்தார். தோப்புத்துறை அன்னை பாத்திமா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் கே.எம். ஷாகுல் ஹமாது பாகவி, தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை மாநிலத் துணைச் செயலாளர் எச். அப்துர்ரஹ்மான் பாகவி, மனித நேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் ஜே.எஸ். ரிபாயி ரஷாதி, தமுமுக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.எம். முஹம்மது ஹனிபா, திமுக தலைமை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் குத்தாலம் பி. கல்யாணம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாகை மாவட்டச் செயலாளர் என்.ஏ.எம். நூருல்லாஹ், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.எஸ். ஆரீப் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டன உரையாற்றினர். இக்கூட்டத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத்தார்கள், உலமா சபையினர் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அனைத்து ஜமாத்துல் உலமா சபை நாகை மாவட்ட இணைச் செயலாளர் சிந்தா மைதீன் நன்றி கூறினார். போக்குவரத்து மாற்றம்: இந்த பொதுக் கூட்டத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை- தரங்கை சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுக்கூட்டம் நடைபெற்ற இடம் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் நாகை மாவட்டக் காவல் துறை உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Thanks: http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/jan/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2839925.html
|