Posted by S Peer Mohamed
(peer) on 1/7/2018 4:05:34 AM
|
|||
ராமநாதபுரத்தில் ஷரியத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பில் கண்டன பொதுக்ககூட்டம் நடந்தது. முஸ்லிம்களில் முன்று முறை தலாக் தெரிவித்து விவகாரத்து பெறும் நடைமுறைக்கு தடைவிதிக்கும் சட்ட மசோதா லோக்சபாவில் குரல் ஓட்டு எடுப்பின் முலம் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியவாறு உள்ளது. குறிப்பாக இஸ்லாமிய மக்களில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் தொடர் கண்டன போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பில் பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரியத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் சந்தைதிடலில் நடந்த கண்டன பொதுக்கக்ஷட்டத்தில் ராமநாதபுரம் ஜமாத் உலமா சபை மாவட்ட தலைவர் அல்ஹாஜ் அஹமது இப்ராகிம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அல்ஹாஜ் முஹம்மது ஜலாலுத்தீன் அன்வாரி வரவேற்றார். உஸ்மானியா அரபிகல்லுாரி முதல்வர் அல்ஹாஜ் ஹைதர்அலி , வலியுல்லா நுாரி, அப்துர்ரஹ்மான், ஷஹித் இப்ராகிம் அருஸி, முகம்மது யாசின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கோவை ஜாஹிர், இந்திய யுனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகம்மது உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். கண்டன பொதுக்கக்ஷட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்று தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மாவட்ட பொருளாளர் முகம்மது சாகிப் நன்றி தெரிவித்தார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |