Posted by Haja Mohideen
(Hajas) on 1/7/2018 5:22:35 AM
|
|||
சத்தமே இல்லாமல் மனித சுனாமியாய் ஆர்ப்பரித்த சுன்னத் ஜமாஅத்
*சத்தமே இல்லாமல் மனித சுனாமியாய் ஆர்ப்பரித்த சுன்னத் ஜமாஅத் : நாடு தழுவிய அளவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு....!!* ஜமாஅத்துல் உலமா சபை என்பது ஒவ்வொரு பள்ளிவாசலிலும் பணிப்புரியும் இமாம்களின் அமைப்பாகும். ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் மற்றும் போராட்டமும் நடைபெற்றது. அனைத்து ஊர் போராட்டங்களிலும் சுன்னத் வல் ஜமாஅத்தை சேர்ந்த பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் தலையில் தொப்பியுடன் பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். ஒவ்வொரு ஊரிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம் ஆர்ப்பரித்தது. மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பிய மத்திய உளவுத்துறைக்கு இன்னும் குழப்பம் தீரவேயில்லை. வால் போஸ்டர் இல்லை, பேனர் இல்லை, சுவர் விளம்பரம் இல்லை, பத்திரிக்கை விளம்பரம் இல்லை, தொலைக்காட்சி விளம்பரம் இல்லை ஆனால் சத்தமே இல்லாமல் மனித சுனாமியாய் லட்சோபலட்ச மக்கள் எப்படி திரண்டனர் ? மத்திய உளவுத்துறைக்கு இன்னும் குழப்பம் தீரவேயில்லை. மத்திய உளவுத்துறையே அறிந்து கொள்... எந்த பத்திரிக்கையின் உதவியும் இல்லாமல் எந்த தொலைக்காட்சியின் உதவியும் இல்லாமல் பெரும் படையை வீதிக்கு கொண்டு சக்தி இமாம்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த ஜுமுஆ என்ற மீடியாவை விட உலகின் எந்த மீடியாவுக்கும் பவர் கிடையாது. ஜுமுஆ மேடையில் ஒரேயொரு அறிவிப்பு செய்தனர். அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து நாடு தழுவிய அளவில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு முத்தலாக்குக்கு எதிராக பாஜக அரசு கொண்டு வந்துள்ள மசோதாவுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இதேப்போன்று தான் சுதந்திர போராட்டத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் வீதிக்கு வந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர். கோவிலும், தேவாலயமும் ஆன்மீக தளங்களாக இருந்தபோது ஒவ்வொரு பள்ளிவாசலையும், ஒவ்வொரு ஜுமுஆ மேடையையும் இமாம்கள் விடுதலை போராட்ட களமாக அமைத்தனர். வீறுகொண்டு எழுந்த முஸ்லிம் சமுதாயம் சொத்தை இழந்து, சுகத்தை இழந்து, தமது சதவீதத்துக்கும் மேலாக உயிர் தியாகம் செய்து வெள்ளையனை விரட்டியடித்து இந்திய விடுதலையை பெற்றனர். மீண்டும் அதேபாணியில் சுன்னத் ஜமாஅத் பெரும்படை பாசிச பாஜகவை விரட்டியடிக்க வீதியில் இறங்கி விட்டது. நேற்றைய தினம் தமிழகத்தில் நடத்திய போராட்டத்தைப்போல் அகில இந்திய அளவில் இமாம்கள் நடத்தியிருந்தால் சர்வதேச சமூகத்தை அதிர வைத்திருக்கும். இருப்பினும் அதற்கான விதை தமிழகத்தில் போடப்பட்டு விட்டது. இமாம்களின் பவர் என்னவென்று மத்திய உளவுத்துறை மூலம் மத்திய உள்துறைக்கு செய்தி சொல்லப்பட்டு விட்டது. *தமிழகத்தில் அடித்த ஒவ்வொரு அடியும் டெல்லியை அதிர வைத்து விட்டது. பாசிச பாஜக அரசை புறமுதுகிட்டு ஓட வைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ் !!*
https://www.facebook.com/photo.php?fbid=1934702280125576&set=gm.1724628314270570&type=3&permPage=1
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |