Posted by S Peer Mohamed
(peer) on 1/7/2018 10:11:34 AM
|
|||
*மோடி அவர்களுக்கும் ஹிந்துத்துவா சகோதரர்களுக்கும் நன்றி!* இந்தியாவில் முஸ்லிம்களை அழிக்க நினைக்கும் உங்கள் செயல்கள் வீரியமாக செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்வை நான் வேண்டிக் கொள்கிறேன். உறங்கி கிடக்கிறார்கள் இஸ்லாமிய உலமாக்கள், எதற்கும் கையாளாகாதவர்கள் இவர்கள் என்று எனக்கு மார்க்கத்தின் மீது பற்று வந்த காலம் முதலே நினைத்து இருந்தேன். ஆனால் உணர்ந்து கொண்டேன் தற்பொழுது! ஜும்மாவின் தினத்தில் தவ்ஹீத் பள்ளிகளை தேடி ஓடுவேன் சுன்னத் ஜமாத் கொள்கை கொண்ட பள்ளிகளை ஜும்மாவின் தினத்தில் புறக்கணித்தேன். ஆனால் உணர்ந்து கொண்டேன் தற்பொழுது! ஜமாத்துல் உலமா போன்ற ஜமாத்கள் எல்லாம் ஆன்மீக கூட்டம், வானத்திற்கு மேலும் பூமிக்கு கீழும் உள்ளவை பற்றி மட்டும் தான் பேச தெரியும் என நினைத்து இருந்தேன்.ஆனால் உணர்ந்து கொண்டேன் தற்பொழுது! வெள்ளை ஜுப்பா, வெள்ளை தொப்பி அணிந்தவர்கள் எல்லாம் உலகம் அறியாத அப்புரானிகள் என்று நினைத்து இருந்தேன். ஆனால் உணர்ந்து கொண்டேன் தற்பொழுது. ஆம் நான் நினைத்து இருந்தவை எல்லாம் தவறானவை என்று உண்ர்ந்து கொண்டேன். உறங்கி கிடந்த என் தமிழ் முஸ்லிம் ஜமாத்கள் அனைத்தும் திகைத்து போனது ஜமாத்துல் உலமா செயல் வீரியத்தை பார்த்து. ஜும்மா மேடைகள் தனக்கே உரிய தனித்துவத்தை பறைசாற்றியது. ஆம் குறுகிய காலத்தில் பெரும் படைகள் திரட்டப்பட்டது. மத்திய அரசே உன் ஆட்டத்தை இன்னும் வீரியமாக செய், இன் ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு சுதந்திர போர்க்கான அழைப்பை ஜும்மா மேடைகளில் இருந்து கேட்பதற்கு தயாராக இருக்கிறது இந்த முஸ்லிம் சமூகம். களம் இறங்குவார்கள் வாலிபர்களும் வயோதிகர்களும். ஜுப்பா தொப்பி அணிந்தவரை பார்க்கும் போது ஏளனமாக பார்த்த காலம் சென்றுவிட்டது, இனி அதே ஜுப்பா தொப்பி அணிந்தவர் 4 நிமிடம் உரையாற்றினால் போதும் அல்லாஹ்விற்காக உயிரை மயிராக தூக்கி எறிந்து களத்தில் நிற்க தயாராகிவிட்டது இந்த முஸ்லிம் சமூகம். உதாரணத்திற்காக! என் தாயிடம் நடந்த சிறிய உரையாடலை நினைவுப்படுத்துகிறேன். தெரிந்து கொள்ளுங்கள் இந்த சமூகம் உங்கள் எதிர்ப்பால் எப்படிப்பட்ட வீரியத்தை அடந்துள்ளது என்று. ஜமாத்துல் உலமா நடத்திய போராட்டத்தில் பெண்களுக்கு அழைப்பு தரப்பட்டவில்லை. (இதற்கான காரணம் பல உள்ளது முக்கிய காரணம் மார்க்கம் பெண்களுக்கு சிரமத்தை தரவில்லை என்பதும் போராட்டம் இரவு நேரங்களில் முடிந்தால் பெண்கள் வீடு திரும்ப சிரமமாகும் என்பதும்) என் தாய் கேட்டார் பெண்களுக்கு அனுமதி இல்லையாமே என்று, நான் கூறினேன் ஆம் பேராட்டத்தில் ஈடுபடுபவர்களை சிறை வைத்தால் பெண்களால் முடியாதே அதுனால் தான் என்றேன். என் தாய் சொன்னார் ஒரு நாள் அல்ல ஆயுள் முழுதும் சிறை என்றாலும் இறைவனின் சட்டத்தை காப்பதற்காக நான் நிற்பேன் என்றார். அல்ஹம்துலில்லாஹ். இது பெருமைக்காக அல்ல இந்த சமூகத்தை பள்ளியின் ஜும்மா மேடைகள் ஏற்படுத்திய மாற்றத்தை கூறவே! இது தான் இன்றைய முஸ்லீம்களுக்கு ஏற்ப்பட்டு இருக்கும் வீரியமான மாற்றம். ஹிந்துத்துவாவினற்கு என் மனமார்ந்த நன்றிகள்! அல்ஹம்துலில்லாஹ்! - யூசுப் கோவை |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |