ரா_பிரபு
பாகம் 2 : (கடத்தும் ஏலியன்கள் )
ஏலியன்கள் இருப்பது இது வரை ஆதார பூர்வமாக நிரூபிக்க பட்டு இருக்கா ? இந்த கேள்வியை நீங்கள் நாசா விடம் கேட்டால் அவர்கள் அதை திட்டவட்டமாக மறுப்பார்கள். உண்மையில் அவர்கள் மிக உறுதியான ஆதாரத்தோடு அதை கண்டு பிடித்து இருந்தாலும் அதை மறுக்கவே செய்வார்கள் .ஏலியன் குறித்த உண்மை செய்திகள் மிக மிக விலைமதிப்பில்லாதவை , மிக மிக முக்கியமானவை எனவே உண்மையை உங்களுடன் பகிர நாசா என்றைக்கும் விரும்பாது .
அதனால் இந்த விஷயத்தில் நாசாவை நம்புவது முட்டாள் தனம். உலகமெங்கும் நாசா சாராத நூற்று கணக்கான ஏலியன் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் குடோன் கணக்கில் ஆதாரங்கள் வைத்திருக்கிறார்கள் ஏலியன் இருப்பதற்கு . அவர்கள் அதில் பல இடங்களில் பல பேரால் எடுக்க பட்ட போட்டோ வீடியோ தொடங்கி பல பேர் நேரில் சந்தித்ததாக சொல்ல படும் சாட்சிகள் வரையில் பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள். History tv, Discovery tv போன்ற உலகமெங்கும் உள்ள முக்கிய அறிவியல் சேனல்கள் ஏலியன் இருப்பதாய் பரிந்துரைகின்றன . அவ்வபோது வலிமையான ஆதாரங்கள் அடங்கிய டாக்குமென்ட்ரிகளை வெளியிடுகின்றன.
ஏலியனை நிஜமாகவே நேரில் சந்தித்தவர்கள் இருக்கிறார்களா ?
இந்த விஷயத்தில் ஏலியனும் ஆவியும் ஒன்னு அதாவது அதை பார்த்ததாக சொல்ல படுவதில் உண்மை கொஞ்சம் பொய் அதிகம் கொண்ட 'உண்மை'கள் அவை. ஆனால் ஏலியன் கதைகளை முற்றிலுமாக பொய் என்றும் நாம் ஒதுக்கி விட முடியாது. குறிப்பாக ஏலியன் கதைகளில் உலகம் எங்கும் பலர் ஒரே மாதிரி சொல்வது பலரையும் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. குறிப்பாக சில பேரின் அனுபவங்கள் ஒரே மாதிரி இருப்பது வியப்பு தருகிறது. அதில் மிக சுவாரஷ்யமானது ஏலியனால் மனிதர்கள் கடத்த படுவதாக சொல்ல படும் கதைகள்.
உலகில் பல பேர் தங்களை ஏலியன் கடத்தியதாக பதிவு செய்திருக்கிறார்கள். அவற்றில் பல பேர் ஏலியன் தன்னை கடத்தி அவர்கள் விண்கலத்தில் வைத்து ஏதேதோ சோதனை செய்தார்கள் என்று குறிபிட்டு இருக்குறார்கள். பல பேர் ஏலியன் தங்கள் உடலில் எதையோ செலுத்தி பரிசோதனை செய்ததாக சொல்கிறார்கள். பலர் அவர்கள் 'இப்படி இருந்தார்கள் 'என்று கடத்தல் அனுபவத்திற்கு பின் படம் வரைந்தும் காட்டி இருக்கிறார்கள். ஒரு பெண் இந்த புகார் கொடுத்த போது அவர்கள் தங்கள் மூக்கில் எதையோ பொருத்தினார்கள் என்று குறிப்பிட்டாள் . ஆச்சர்யம் என்ன வென்றால் இது நடந்து அடுத்த நாளே அந்த பெண்ணின் மூக்கில் உள்ளே ஒரு சிறு கட்டி உருவாகி இருந்தது. பொதுவாக இந்த மாதிரி கதைகள் பரபரப்பு விரும்பிகளால் கட்ட பட்ட பொய் கதைகளாக இருக்கும். ஆனால் எல்லா நேரத்திலும் எல்லா கதைகளும் அப்படி அல்ல.
சில பிரபலமான ஏலியன் கதைகளை இப்பொது பார்க்கலாம். Barney எனும் ஏலியன் சாட்சியாளர் சிவில் உரிமை இயக்கத்தில் அந்த ஊரில் கவுரவமான பதவியில் உள்ளவர். அவர் மனைவி Betty ஒரு சமூக சேவகி . அவர்கள் கதை விடுவார்கள் என்றால் அந்த ஊரில் யாரும் நம்ப மாட்டார்கள் அவர்கள் அனுபவம் என்ன என்று பார்ப்போம். 1961 ஆம் வருடம் அது . அவர்கள் இருவரும் விடுமுறை முடிந்து நயாகரா நீர்வீழ்ச்சி பார்த்துவிட்டு காரில் திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போது தங்கள் கார் மேல் ஏதோ ஒளி வெள்ளம் பாய்ந்ததை உணர்ந்தார்கள் அதை தொடர்ந்து தலை மேல் பறந்த அந்த வாகனத்தை நன்கு பார்க்க முடிந்தது .ஹில் தனது காரை விட்டு இறங்கி பைனாகுலரை கொண்டு அங்கே 11 மனிதன் வடிவை ஒத்த மனிதன் அல்லாத ஒன்றை பார்த்ததாக சொன்னார்.
அவர்கள் கருப்பு நிற பளபளக்கும் உடையும் தலையில் தொப்பி போன்று அணிந்து இருந்ததாகவும் பார்க்க பயங்கரமாக இருந்ததாகவும் சொன்னார். அவர்கள் இருவரும் வீட்டுக்கு கிளம்பி வந்த பின் பல சின்ன சின்ன விசித்திரதை உணர்ந்தார்கள் .
இருவருக்கும் தோலில் எரிச்சல் அரிப்பு போன்ற உணர்வு இருந்தது. ஹில் அணிந்து இருந்த துணிகள் பல இடங்களில் மர்மமாக கிழிந்து இருந்தது. betty தனது துணியில் மர்மமான ரோஸ் நிற துகள்கள் இருபதை கண்டாள். அவர்கள் ஒரு விசித்திரத்தை குறித்து கொண்டார்கள் அதாவது வழக்கமாக தங்கள் வீட்டிற்கு செல்ல 4 மணி நேரம் தான் ஆகும் ஆனால் அன்று அவர்கள் சென்றடைய 7 மணி நேரம் ஆனதை உணர்ந்தார்கள். 3 மணி நேரம் அதிகமாக எங்கே விரையம் ஆனது என்று அவர்களுக்கு எதுவும் நினைவில் இல்லை. என்ன விசித்திரம் என்றால் அதன் பின் பெட்டிக்கு அந்த அனுபவம் குறித்து கனவு வந்தது. அந்த கனவில் அவள் தோல் சேம்பிலை ஏலியன்கள் எடுத்ததாகவும் தொப்புளில் ஏதோ ஊசி சொருகியதாகவும் கனவில் நினைவு வந்தது. நிஜத்தில் அவர்கள் அது நடந்ததை மறந்து இருந்தார்கள்.
குறிப்பாக விமான ஓட்டிகளுக்கு ஏலியன் கடத்தல் அனுபவம் இருக்கிறது பல பைலட்கள் தங்கள் விமானத்தை UFO கடத்த பார்த்ததாக..தங்கள் திறமையால் விமானம் தப்பியது என்ற ரீதியில் சொல்லி இருக்கிறார்கள். ஒவொரு ஆண்டும் CAA எனும் நிறுவனத்திற்கு (Civil Aviation Authority ) விமானத்தில் பணி புரியும் பல பேர் தாங்கள் வானதில் வி்சித்திர பறக்கும் வஸ்துவை பார்த்ததாக நிறைய பதிவு செய்து இருக்கிறார்கள். CAA இந்த தகவல்களை பத்திரமாக வைத்திருக்கிறார்கள் பொது மக்களுக்கு தெரியாமல். கேட்டால் அவர்கள் எந்த தகவலும் மக்களுக்கு தருவது இல்லை. 'தங்கள் விமான பாதுகாப்பு அம்சங்களை பலபடுத்த இது உதவுகிறது இது ரகசியம் பொது மக்களுக்கு தருவதற்கு இல்லை' என்கிறார்கள்.
Antônio Vilas Boas என்பவரின் அனுபவத்தை பாருங்கள் 23 வயது பிரேசில் நாட்டு விவசாயி இவர். இவர் பகல் வெப்பத்தை தவிர்க்க இரவில் வேலை செய்வது வழக்கம். 1957 இல் ஒரு நாள் இரவு தங்கள் நிலத்தில் டிராக்டரை கொண்டு வேலை செய்து கொண்டிருந்த போது தலைக்கு மேலே வானத்தில் ஒரு சிகப்பு நட்சத்திரத்தை பார்த்தார் பார்க்க பார்க்க அது பெரிதாகி கொண்டே வந்த போது தான் அது சிகப்பு நிற ஒளியை முன் பகுதியில் வெளியிடும் ஒரு முட்டை வடிவ பறக்கும் வஸ்து என புரிந்தது. இந்த காட்சி ஏற்படுத்திய பயத்தால் டிராக்டரில் தப்ப முயன்ற போது டிராக்டர் ஹெட் லைட் மற்றும் இன்ஜின் மர்மமாக செயலிழந்து போனது. கால்நடையாகவே ஓட பார்த்த அவரை சில சாம்பல் நிற வேற்றுகிறவாசிகள் துரத்தி பிடித்து இழுத்து சென்று அந்த பறக்கும் தட்டில் போட்டார்கள். அங்கே தனது உடை முழுதும் கழட்ட பட்டு உடல் முழுவதும் ஒரு வகை ஜெல் கொண்டு மூடினார்கள். அதன் பிறகு பெரிய அரைவட்ட வடிவ அறை ஒன்றில் அழைத்து செல்ல பட்டார் . அங்கே புதிரான சிகப்பு நிற எழுதுக்கள் எழுத பட்டிருப்பதை கண்டார். அங்கே இவருடைய தாடை பகுதியில் இருந்து ரத்தம் எடுத்து கொண்டார்கள். அதன் பிறகு மூன்றாவது அறை யில் அழைத்து செல்ல பட்டதாகவும் அங்கே ஒரு பெண் ஏலியன் தன்னை சந்தித்ததாகவும் சொன்னார். அந்த பெண் ஏலியன் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தது என்று வேறு சொன்னார். Boas தொழில் அடிப்படையில் ஒரு கவுரவமான லாயர் . அதனால் அவர் பொய் சொல்லி இருக்க வாய்ப்புகள் குறைவு (அல்லது லாயர் என்பதனாலேயே நிறைய பொய் சொல்லி இருக்கலாமோ !! ? )
உலகம் எங்கும் இந்த "alien abduction" கதைகள் எக்க சக்கமாக உண்டு . Pascagoula Abduction என்ற சம்பவத்தை பார்க்கலாம்... October 11, 1973, மாலை நேரம் அது. 42 வயது Charles Hickson மற்றும் 19 வயது Calvin Parker இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்ய கூடிய co workers . மிஸ்ஸிசிபி நதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது ஒரு ஹிஸ்ஸிங் சப்தம் கேட்டு நிமிர்ந்தார்கள் அங்கு ஒரு ஓவல் வடிவ 30 ..40 அடி அகலம் கொண்ட 8 ..10 அடி உயரம் கொண்ட ஒரு பறக்கும் பொருளை கண்டார்கள். நீல நிற ஒளியை கொண்டுள்ள அது தன்னை கடந்த போது இருவரும் பேரலைஸ் க்கு ஆளானதாக சொன்னார்கள் தங்கள் நினைவு முழுதும் இருந்ததாகவும் ஆனால் உடலை அசைக்க முடியாதவாறு செயலிழந்து போனதாக தெரிவித்தார்கள். அந்த விசித்திர உயிரினங்கள் தங்களை நீண்ட நேரம் வைத்து பல சோதனைகள் செய்த பின் தன்னை போக விட்டதாக சொன்னார்கள்.
Travis Walton UFO incident இல் நவம்பர் 5 1975 இல் walton என்பவர் தங்களுடன் வேலை செய்யும் 6 பேருடன் ட்ரக்கில் செல்லும் போது தங்கள் தலை மேல் பறந்த ஒளி வட்டத்தை 6 பேரும் பார்க்க முடிந்தது. அதில் walton என்பரின் நினைவில் மட்டும் தான் ஒரு ஹாஸ்பிடல் போன்ற அறையில் அடைக்க பட்டதாகவும் அங்கே சொட்டை தலை சாம்பல் நிற ஜந்துகளால் தான் பரிசோதிக்க பட்டதாகவும் பிறகு ஒரு ஹைவே யில் தன்னை இறக்கி விட்டு அவர்கள் பறந்து சென்றதாகவும் தெரிவித்ததார்.
Frederick Valentich எனும் இளம் விமானியின் அனுபவம் மிக குறிபிட தக்கது காரணம் அவர் விமானதுடன் கானாமல் போனார் பிறகு கிடைக்கவே இல்லை. 21 அக்டோபர் 1978 இல் 235 கிலோ மீட்டர் ட்ரைனிங் புரோக்ராமில் இருந்த விமானி அவர். ஆளில்லா தீவு ஒன்றின் மேல் பறக்கும் போது திடீரென கானாமல் போனார். அவர் கானாமல் போவதற்கு முன் கண்ட்ரோல் ரூமில் தொடர்பு கொண்டு பேசியது தான் குறிப்பிட தகுந்தது. தன்னுடைய விமானதின் மேல் வேறொரு விமானம் பறப்பதாகவும் தனது விமானத்தின் இன்ஜின் தாறுமாறாக வேலை செய்வதாகவும் சொன்னார் ..பிறகு கொஞ்சம் நேரம் கழித்து தன்னை தொடருவது ஒரு விமானம் அல்ல என்றார். பிறகு அவருடன் தொடர்பு துண்டிக்க பட்டது அதன் பின் அவர் கிடைக்கவே இல்லை... (இந்த சம்பவம் நடந்த நேரத்தில் அந்த சுற்று வட்டாரத்தில் தாங்கள் UFO வை பார்த்ததாக பலர் பதிவு செய்து இருந்தது குறிபிட தக்கது.)
இது போன்ற ஏலியன் கடதல் அனுபவங்கள் உலகில் பல பகுதிகளிலும் பதிவு செய்ய பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சில விஷயத்தில் பொதுவாக இருப்பது குறிப்பிட தக்கது. பொதுவாக பலர் தன்னை கடத்தி போய் ஏலியன் பல சோதனைகள் செய்ததாக தெரிவித்தார்கள் .அவர்கள் எலியனை வர்ணித்தது பெரும்பாலும் ஒத்து போனது. பலர் தன்னுடன் அது பேச முயற்சி செய்ததாக சொன்னார்கள். இதுவரை 300 க்கும் மேற்பட்ட ஏலியன் கடத்தல் நிகழ்வுகள் பதிவு செய்ய பட்டுள்ளன.
இந்த அனுபவம் இருப்பவர்களை ஆராய்ந்து பெற பட்ட தகவல் படி இவர்கள் பெரும்பாலும் அவர்கள் கடத்த பட்ட இடத்திலேயே திரும்ப விட பட்திருந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் அந்த சம்பவத்தை மறந்து இருந்தார்கள் . தங்களின் கடிகார நேரம் திடீரென பாதியில் காணாமல் போனதை வைத்து தான் இடையில் தாங்கள் எதையோ மறந்து இருப்பதாக அவர்கள் உணர்ந்து இருந்தார்கள். அவர்களில் பலருக்கு பிறகு இது கனவில் தான் நினைவு வந்ததாக தெரிவித்தார்கள்.
மொத்தம் 1700 கும் மேற்பட்டவர்கள் தாங்கள் கடத்த பட்டதாக சொல்லி இருக்கிறார்கள். மொத்த ஜனதொகையில் 5 சதம் ஆட்கள் கடத்தும் அனுபவம் இருக்கலாம் என்றும் அதில் பல பேர் வெளியே சொல்லாமல் இருக்கலாம் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. ஒரு மனோதத்துவ நிபுணர் சொல்வது மிக குறிப்பிட தக்கது .தங்களிடம் வரும் நோயாளிகள் பல பேரை ஆழ் நிலை தூக்கத்திற்கு உட்படுத்தி அவர்களிடம் வேறு நோய் தொடர்பாக பேசி கொண்டு இருக்கும் போது பலர் தங்கள் கடத்த பட்டு இருந்ததை சொன்னார்களாம். அவற்றில் யாருக்கும் சுயநினைவில் இருக்கும் போது அது எதுவும் நினைவில் இல்லை என்பதையும் அவர் கண்டார்.
பொதுவாக உங்களுக்கு எப்போதாவது திடீரென இடையில் சில மணிநேரம் எப்படி போனது என்று தெரியாத மாதிரி மறதி அனுபவம் உண்டா அல்லது கனவில் உங்களை ஏலியன் கடத்தியது போல வந்தது உண்டா... உங்கள் உடலில் திடீர் என காயம் அடையாளம் ஏதும் உண்டாகி இருக்கிறதா ... தனியே நடந்து செல்லும் போது தலைக்கு மேல் எப்போவாவது வெளிச்சம் பின் தொடர்ந்த அனுபவம் உண்டா... எனில் எச்சரிக்கை . ..நீங்கள் ஏலியனால் கடத்த பட்டவராக இருக்கலாம் என்கிறார்கள்.
நம்மை விட பல மடங்கு தொழில் நுட்ப முன்னேற்றம் கொண்ட ஏலியன்கள் இப்படி அசட்டு தனமாக நம்மை கடத்தி கொண்டு பரிசோதித்து கொண்டா இருக்கும் ?என்பது பல பேருக்குள் எழுந்துள்ள கேள்வி தான். ஆனால் உலகமெங்கும் இந்த விடை தெரியாத கடத்தல் அனுபவம் பதிவு செய்ய பட்டு கொண்டிருப்பது ஒரு மறுக்க முடியாத மர்மம் தான்.
✴ ✴ ✴ ✴
ஆமாம் ..... இந்த ஏலியன்கள் இருக்கா இல்லையா ..? இது இருப்பதை எப்படி கண்டு பிடிக்கிறது ? அதுக்கு எதுனா அறிகுறி இருக்கா இல்லையா ? சொல்கிறேன்.
மர்மங்கள் தொடரும்............🕷🕷
|