Posted by Haja Mohideen
(Hajas) on 1/21/2018 9:10:06 AM
|
|||
நிலா_விருந்து_மூன்றுரா_பிரபு j (Jan 31 : Super moon, blue moon, blood moon மூன்றும் ஒரே நேரத்தில் ....) வரும் ஜனவரி 31 ஆம் தேதி நிலா நமக்கு ஒரே நேரத்தில் மூன்று விருந்து வைக்க உள்ளது.. அதாவது super moon , blue moon, blood moon இந்த மூன்று அதிசய நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடக்க உள்ளன. கூடவே முழு சந்திர கிரகணம் எனும் நிகழ்வையும் சேர்த்து கொள்ள மறக்காதீர்கள். இந்த கலர் கலர் நிலாகள் ...இவைகள் என்ன என்பதை பார்ப்போமா ?? 🌙 Super moon : நிலா நம்மை நீள் வட்ட பாதையில் சுற்றுவதை நாம் அறிவோம். அப்படி சுற்றும் போது எப்போவாவது மிக மிக அருகில் வந்து போகும். அப்படி மிக அருகில் வரும் நிகழ்வுக்கு பெயர் சூப்பர் மூன். அன்றைக்கு நிலா வழக்கத்தை விட மிக பெரிதாக தெரியும் வழக்கமான வடிவத்தை விட 14 சதம் அதிகம் பெரிதாக 30 சதம் அதிக வெளிச்சமாக தெரியும். 🌙 blue moon : இது நீல நிறத்தில் எல்லாம் தெரியாது சும்மா பெயர் தான் ப்ளூ மூன். 🌙 Blood moon : முழு சந்திர கிரகணத்தின் நடக்கும் ஒரு நிகழ்வு படி சூரிய கதிர்களில் உள்ள நீல நிறங்கள் வழியிலேயே சிதரடிக்க பட சிகப்பு நிறத்தை மட்டும் பிரதி பலிக்கும் ரத்த நிலா தான் blood moon இப்படி பூமிக்கு மிக பக்கத்தில் சூப்பர் மூனாக வந்து ...கூடவே ப்ளூ மூணாகவும் வந்து... ரத்த நிறத்திலும் வரும் jan 31 ஆம் தேதி தெரிய போகும் முழு சந்திர கிரகணம் ஒரு மிக மிக அறிய நிகழ்வு...கடந்த 150 ஆண்டுகள் கழித்து வரும் ஒரு அபூர்வ நிகழ்வு...வெறும் கண்ணால் பார்க்க தடை இல்லை என்பதால் உங்கள் பகுதியில் தெரியும் பட்சத்தில் பார்த்து மகிழுங்கள்..
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |