Posted by S Peer Mohamed
(peer) on 2/28/2018 4:00:22 AM
|
|||
சிரியாவில் நடைபெற்று வரும் யுத்தத்தில் பொது மக்கள் மீது இரசாயன தாக்குதல்களை நடத்துகிறது பஷர் அல் அஸாத்துடைய (ஷீயா) படை. இரசாயனத் தாக்குதல் காரணமாக ஆயிரக் கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டால் மக்கள் மூச்சுத் திணறி இறந்து மடிவார்கள். அதிலும் சிறுவர்கள், குழந்தைகள் மூச்சுத் திணறளை தாங்க முடியாமல் மிக அவசரமாகவே மரணத்தி மடிவார்கள். இரசாயனத் தாக்குதலில் சிக்கியவர்கள் உயிர் பிழைப்பதற்காக செயற்கை சுவாசக் கருவி வழங்கப்படும். சிரியாவில் நடைபெறும் தாக்குதலில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் சிக்குண்டு கிடப்பதினால் செயற்கை சுவாசக் கருவிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிரியாவின் Ghouta நகர் பகுதியில் நடைபெற்ற இரசாயண தாக்குதலில் சிக்கிய இரண்டு சகோதரிகளே இவர்கள். கிடைத்ததோ ஒரு செயற்கை சுவாசக் கருவிதான்! பிழைக்க வேண்டியவர்கள் இருவர். ஆனால் அது முடியாது. இந்நேரம் தன் தங்கையை காப்பாற்றி உயிர் பிழைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருந்த ஒரு செயற்கை சுவாசக் கருவி மூலம் தன் தங்கையை காப்பாற்றி விட்டு தன் உயிர் துறந்தாள் இந்த சிரியாவின் சிறகு முளைக்கா சிட்டு! பருவம் தெரிந்தவர்கள் கூட செய்யத் துணியாத பெரும் சாதனையை இச்சிறு வயதிலேயே செய்த இவர் இந்த யுகத்தின் பெருமகள் தான். விதையிலேயே விரூட்சமானாய்! உன் தங்கை உயிர் காக்க இந்நுயிர் துறந்தாய். உன் உயிர் துறப்பையும், தங்கையை காப்பாற்றிய தன்னலமற்ற தியாகத்தையும் என் எழுத்துக்களுக்குள் சுருக்க முடியாது சகோதரி. நீ என் மகளாக, என் சகோதரியாக, பிறந்திருக்க வேண்டுமே என ஏங்குகிறேன். என் கரம் உனக்காக இப்பொழுதில் மட்டுமல்ல இன்றிரவு முழுவதும் இறைவனிடம் இறைஞ்சுகிறது. சுவனத்தின் சிட்டுக் குருவியாய் வல்ல அல்லாஹ் உன்னை மாற்ற வேண்டும் என, கண்ணீர் சிந்த எழுதும் இக்கணம். இதற்கு மேலும் எழுத வார்தைகள் இன்றி தவிக்கிறேன். கண்ணீரை எழுத்தாக்க முடியும் என்றால் இன்று விடிவதற்குள் நீ ஒரு பெரும் வரலாறாகவே மாறியிருப்பாய். யா அல்லாஹ், சிரியாவில் அல்லல் படும் அபலைகளை காப்பாற்றுவாயாக! யா அல்லாஹ் பஷர் அல்-அஸாதையும் அநியாயக்கார அவன் படையையும் பாலைவன தூசை விட கேவலமாக மாற்றி அழிப்பாயாக, இவ்வுலகில் எவனும் இப்படி கேவலமாக சாக வில்லை என உலக மக்கள் பேசும் அளவுக்கு அஸாத்தின் மரணத்தை மாற்றுவாயாக! |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |