ஆக்கம் J .யாஸீன் இம்தாதி
^^______^^ Bismillahir Rahmanir Raheem ****** நடிகை ஸ்ரீதேவியின் இறந்த உடலுக்கு மகாராஷ்டிர அரசு சார்பாக தேசிய கொடி போர்த்தப்பட்டு துப்பாக்கி தோட்டாக்கள் வானுயர்த்தி அரசாங்க காவல் துறை அதிகாரிகள் சல்யூட் அடித்து முழங்க கண்ணீரோடு அஞ்சலி செலுத்தப்பட்டது என்ற தகவலை நம் நாட்டு ஊடகங்கள் போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பியதை காணும் போது
ஒட்டு மொத்த இந்திய மக்களும் விபரம் இல்லாதவர்கள் என்றும் சினிமா போதையில் மிதக்கும் அறிவிலிகள் என்றும் பிற நாட்டவர்களே இந்திய மக்களை ஏளனம் செய்யும் அளவு நம் நாட்டு அரசியல்வாதிகளின் நிலை கேவலமாகி விட்டது
கோடிகளில் புரண்டு குடியின் தாண்டவத்தால் தன்னிலை அறியாது துபாயில் அமைந்துள்ள சொகுசு மாளிகை குளியல் அறையில் தடுமாறி விழுந்து மரணித்து போன நடிகை ஸ்ரீதேவிக்கும் நம் நாட்டு அரசாங்கத்திற்க்கும் என்ன சம்மந்தம்
ஸ்ரீதேவி என்ன நம் நாட்டு பிரதமரா
அல்லது நம் நாட்டு ஜனாதிபதியா
அல்லது நம் நாட்டு MLA வா
அல்லது MP யா?
அல்லது நம் நாட்டுக்கு பெறுமை சேர்த்தி கொண்டிருக்கும் விஞ்ஞான அமைப்பின் தலைவரா ?
அல்லது நம் நாட்டு ராஜாங்கத்தின் அந்தரங்க ஆலோசகரா ?
அல்லது ராணுவத்தில் பங்கு பெற்று அந்நிய நாட்டு போர்களத்தில் எதிரிகளால் உயிரை மாய்த்த வீரப்பெண் தியாகியா ?
சினிமாவில் காசுக்காக நடித்து பல கோடிகளுக்கு உரிமைபட்ட நடிகை என்பதை தவிர வேறு என்ன ஸ்ரீதேவிக்கு நம்நாட்டில் தனிச்சிறப்பு(?) உள்ளது ?
அன்றாடம் உழைக்கும் பாமரனும் கூட அவனால் இயன்ற அளவு பொருளாலும் உடலாலும் நம் திருநாட்டுக்கு பல வகையில் தியாகம் செய்கின்றான்
ஆனால் கோடிகளில் புரளும் நடிகர் நடிகைகள் தான் அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்க்கு வருமான வரிகளை கூட சரியாக கட்டாது கள்ள கணக்கு காட்டுபவர்கள் என்பது அனைவரும் அறிந்து வைத்துள்ள உண்மையாகும்
பகுத்தறிவு பேசும் ஊடகங்களும் கூட நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை ராணுவ வீரர்களின் மரணத்தை போன்று தன்னிலை மறந்து வர்ணிக்கிறார்களே தவிர ஊடகங்களில் எந்த ஒன்றும் இந்த அவல நிலையை கண்டித்ததாக தெரியவில்லை
ஒரு புறம் மனித நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வரும் இஸ்லாமிய அறிஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் நாட்டில் ஒழுக்க கேடுகளை பரப்பும் நடிகர் நடிகைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவிப்பதையே சாதனையாக சொல்லி காட்டுகின்றனர்
கேரளாவில் பசிக்காக அலைந்த ஒரு அப்பாவியை படுகொலை செய்த ஈனப்பிறவிகளை கண்டிக்காத ஊடகம் நடிகையின் எதார்த்த சாவுக்கு வரிந்து கட்டி கொண்டு நீலிக்கண்ணீர் வடிப்பது தான் ஆச்சரியமாக உள்ளது
வெறுப்புடன் J .இம்தாதி
|