Posted by S Peer Mohamed
(peer) on 3/1/2018 5:16:54 AM
|
|||
#துபாயில் நன்மை செய்யும் சகோதரர் #தன்னலமற்ற சேவையால் பல குடும்பங்களுக்கு நன்மைசெய்யும் துபாய் வாழ் இந்தியர் அஷ்ரஃப். இவர் கையெழுத்திட்டுத்தான் துபாயில் இருந்து நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. சுமார் 4,700 உடல்களை அஷ்ரஃப் கையெழுத்திட்டு அவர்களது தாய் நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஸ்ரீதேவியின் உடலைக் காண ஆயிரக்கணக்கான இந்தியர்களின் கண்கள் கண்ணீரோடு காத்திருக்கும் நிலையில் அவரது அசைவற்ற உடலை சவப்பெட்டியில் வைத்து அதற்கான ஆயத்தப் பணிகளை செய்து, ஆவணத்தில் கையெழுத்திட்டவர் துபாயில் வாழும் கேரளத்தவர் அஷ்ரஃப். 44 வயதாகும் அஷ்ரஃப், ஐக்கிய அரபு நாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் உடல்களை தாயகம் அனுப்பத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை செய்ய உதவி வருகிறார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி 16 ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வரும் அஷ்ரஃப், இதுவரை 38 நாடுகளைச் சேர்ந்த 4,700 பேரின் உடல்கள் தாயகம் திரும்ப உதவியுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், துபாயில் அதிகாரிகளுக்கு நீங்களோ, நானோ எல்லோருமே ஒன்றுதான். இது துபாயாக இருக்கட்டும், ஷார்ஜாவாக இருக்கட்டும், ஐக்கிய அரபு நாடுகளில் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எல்லோரும் ஒன்றுதான் என்கிறார். துபாயில் இருந்து ஸ்ரீதேவியின் உடல் போனி கபூரின் பெயரில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அந்நாட்டைச் சேர்ந்த குடியுரிமை பெற்ற ஒருவர் உறுதி அளிக்க வேண்டும் என்ற அமீரக சட்டப்படி, அஷ்ரஃப் கையெழுத்திட்டே ஸ்ரீதேவியின் உடல் தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமீரகத்தின் சட்டத்திட்டங்கள் அனைத்தும் அஷ்ரஃபுக்கு அத்துப்பிடி. துபாயில் பிழைப்புத் தேடி வந்து உயிரிழக்கும் பலரது குடும்பத்திற்க்கு உதவிசெய்யும் அஷ்ரப் . ஒரு மாதத்துக்கு 30 முதல் 40 உடல்களை தனது முயற்சியினால் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அஷ்ரஃப் பற்றி அறிந்த பல நாடுகளைச் சேர்ந்தவர்களும், தங்களது உறவினர்கள் உயிரிழக்கும் போது தொடர்பு கொள்வது இவரைத்தான். சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான கட்டணங்களை மட்டுமே உறவினர்களிடம் இருந்து பெறும் அஷ்ரஃப், தனது சேவைக்காக எந்த பணத்தையும் வாங்குவதில்லை. அது மட்டுமல்ல, தனது ஈடுஇணையற்ற சேவைக்காக ஒரு நன்றியைக் கூட அவர் எதிர்பார்ப்பதில்லை. அது பற்றி அவர் கூறுவது என்னவென்றால், தாய் நாட்டுக்கு உடல் வந்ததும், எனக்கு போன் செய்து நன்றி கூற வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். போனில் அதிக நேரம் யாருடனும் பேசுவதில்லை. ஏன் தெரியுமா? உறவை இழந்து துடிக்கும் குடும்பத்தினர் உதவி கோரி என்னை அழைக்கும் போது அவர்களுக்கு அழைப்பு கிடைக்காமல் போய்விடக் கூடாதல்லவா? என்று கேட்கும் அஷ்ரப், கடைசியாக ஒரு முறை தனது உறவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று துடிக்கும் மக்களுக்காகவே இதனை செய்வதாகவும் கூறுகிறார்.அஷ்ரப் அஜ்மான் 0553886727,இவரின் கைபேசி! |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |