Posted by S Peer Mohamed
(peer) on 3/1/2018 11:06:44 PM
|
|||
👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தையாவது நீதிபதி லோயா மரணம் குறித்து பேசியிருந்தால் இந்தியாவின் நீதி நிலைத்திருக்கும். 👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, ஹரேன் பாண்டியா ஒரு கார் உள்ளே சுட்டு கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும், காரின் உள்ளே ஒரு துளி இரத்தம் கூட இல்லையே அது எப்படி என்பதில் காட்டியிருந்தால் இந்தியக் கொலைகார அரசியல்வாதிகளின் ஆட்டம் அடங்கியிருக்கும். (அந்த மஹா டிவி பையனை காருக்குள்ள உக்கார வச்சி டெமோ காட்டியிருக்கலாம்) 👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, சோராபுதீன் எப்படி மரணமடைந்தார், கவுசர் பீ எப்படி மறைந்தார் ஆகியவற்றில் காட்டியிருந்தால் இந்தியாவின் கொலைகாரக் கும்பல்கள் கைதாயிருக்கும். 👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, இஷ்ரத் ஜஹான் எப்படி மரணமடைந்தார் என்பதில் காட்டியிருந்தால் இந்தியாவின் மதவாத கொலைகளை நாடே அறிந்திருக்கும். 👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, பணமதிப்பிழப்பிற்கு சிலமணி நேரங்களுக்கு முன் நீரவ் மோடி மட்டும் எப்படி 90 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தினான் என்பதில் காட்டியிருந்தால் இந்தியா இந்நேரம் வல்லரசாகியிருக்கும். 👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, நீரவ் மோடி எப்படி 11,400 கோடி ரூபாய் ஊழல் வெளிவருவதற்கு முன்னதாக தனது குடும்பத்தினர் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றினான் என்பதில் காட்டியிருந்தால் இந்தியாவின் திருட்டுக் கும்பல் முழுமையும் பிடிபட்டிருக்கும். 👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம், புதிதாகப் பதிவு செய்த இரண்டே நாட்களில் 60,000 கோடி ரூபாய் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெற்றது எப்படி என்பதில் காட்டியிருந்தால் இந்தியாவின் கார்பரேட் களவாணிகளுக்கு துதிபாடும் ஊழல்வாதிகளை அடையாளம் கண்டிருக்கலாம். 👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, அமித் ஷா மகன் ஜெய் ஷா 50 ஆயிரம் ரூபாய் கம்பெனியை, இரண்டே வருடத்தில் 80 கோடி ரூபாய் கம்பெனியாக மாற்றியது எப்படி என்பதில் காட்டியிருந்தால் இந்தியாவின் கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும். 👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, வாலண்டரி டிஸ்க்ளோஷர் ஸ்கீமில் 13,860 கோடி ரூபாயை வெளிப்படையாக அறிவித்த மகேஷ் ஷா ஏன் ஒரு டிவி ஸ்டுடியோவில் இருந்து கைது செய்யப்பட்டார்? அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பதில் காட்டியிருந்தால் இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களே நிகழாது. 👉ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பதில் காட்டிய ஆர்வத்தில் 10 விழுக்காடு ஆர்வத்தை, ஒரு போர் விமானம் ரூ.714 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் 126 விமானங்களை வாங்க காங்கிரஸ் அரசு போட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, ஏன் ஒரு போர் விமானம் ரூ.1666 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் 36 விமானங்களை வாங்க பாஜக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்பதில் காட்டியிருந்தால் இந்தியாவின் ஊழல்வாதிகள் கைதாகியிருப்பார்கள்.... 😭😭😭😭 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |