Posted by S Peer Mohamed
(peer) on 3/1/2018 11:24:25 PM
|
|||
அப்போது சொன்னார் இப்போதும் வலிக்கிறது! ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும் போரினால் உள்நாட்டிலே அகதிகளாக இருக்கும் நிலைக்கு சிரிய மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சிரியாவில் நடப்பதை உள்நாட்டுப் போர் என்பதைவிடப் பிறநாடுகளால் தூண்டப்பட்ட ஒரு யுத்தமாகவே அது மாறி நிற்கிறது. கொத்துக் கொத்தாய் மடியும் குழந்தைகளின் முகங்களைப் காணமுடியவில்லை. சிரியா மீதும் அங்கே அகதிகளாக்கப்பட்டிருக்கும் அம்மக்கள் மீதும் ஏன் நாம் அக்கறை கொள்ள வேண்டும் என, நிஜவாழ்க்கையில் அசல் கதாநாயகியாக வலம் வரும் ஏஞ்சலினா ஜோலி, கடந்த 2015-ம் ஆண்டு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றியபோது ஐந்து காரணங்களைக் கூறினார். உலகின் மனசாட்சியை உலுக்கிய அந்த காரணங்கள் இந்த கணம் வரை அப்படியே இருக்கின்றன... 2. ஒரு பெண் பிள்ளை, தன் சின்னஞ்சிறிய சகோதரர்களையும், சகோதரிகளையும் குடும்பத் தலைவியாகக் காத்து வருகிறாள் ஓர் அகதிக் கூடாரத்தில். அந்தச் சிறுமியின் தாய் விமானக் குண்டுவீச்சில் இறந்து போயிருந்தார். அவர்களின் தந்தை ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். அவரின் நிலை என்னவெனத் தெரியவில்லை. ஆக, குடும்பத் தலைவி பொறுப்பேற்றுக் கொண்ட அந்தப் பெண்ணின் வயது 11. 3. பல கட்டடங்களைக் கட்டிய ஒரு பொறியாளர், அகதியாய் உயிர் பிழைக்க தப்பிச் செல்லும் போது அவரது கண் முன்பாக அவரின் மகள் சென்ற படகு விபத்துக்குள்ளாகி 8 வயது மகள் கடலில் மூழ்கிச் சாவதை செய்வதறியாமல் பார்த்துக் கதறினார்’ என்று அவருடைய உறவினர்கள் அவர்களுடைய மொழியில் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால், ஆறு பிள்ளைகளின் தாயாக அதன் வலியை உணர்ந்தேன்! 4. கால்கள் அற்ற ஒரு இளைஞனைச் சந்தித்தேன், உனக்குச் செயற்கைக் கால்கள் வேண்டுமா, வேறெதுவும் உதவி வேண்டுமா எனக் கேட்டேன், 'ஒரே ஒரு உதவி. எனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது. நாங்கள் ஏன் நிர்மூலமாக்கப்பட்டு இரவில் பனிகொட்டும் பாலைவனத்தில் கூடார வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டோம்? இதற்கு மட்டும் பதில் தெரிய வேண்டும்' என்றான். கனவான்களே எனக்குத் தெரியும், இதற்கு உங்களிடத்திலும் பதில் இல்லை என்று! 5. உலக நாடுகளே, நீங்கள் விமானத்தில் உணவும், மருந்தும் போடுவதால், அம்மக்கள் உயிரோடிருக்க முடிகிறது என்றால், அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்தால் அவர்கள் மீது குண்டும் போடப்படுகிறது. எவ்வளவு பணம் வேண்டும், எவ்வளவு மருந்துகளும், உணவும் வேண்டும்? எனக் கேட்கும் விசாலமான மனது உங்களுக்கு இருக்கலாம், ஆனால் சிரியா மக்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கதகதப்பான கூடாரம் மட்டுமே. அது உயிர்ப் பாதுகாப்பு மிக்க உங்கள் நாடுகளில் வேண்டும். தயவு செய்து உங்கள் எல்லைகளைப் பூட்டிவிட்டு உணவுகளை எறியாதீர்கள், அது குண்டைவிடக் கொடியது. - Jayanthan Jesudas |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |