Posted by Haja Mohideen
(Hajas) on 3/17/2018 10:23:12 AM
|
|||
ஏர்வாடி SV_இந்து_துவக்க_பள்ளியில் குழந்தைகளுக்கு கண்ணில் பாதிப்பு16-03-2018 பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இயங்கும் பள்ளி ஒன்றில் ஆண்டு விழாவை முன்னிட்டு மேடை கண்கவர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிக வெளிச்சம் கொண்ட இந்த விளக்குகளால் பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கண் பார்வை பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி ஆண்டுவிழாவிற்காக இரவு அமைக்கப்பட்ட மின் விளக்குகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஆண்டு விழா முடிந்து வீடு திரும்பிய பிறகு பாதிப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறது. மின் விளக்குகளால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கண் பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://www.facebook.com/photo.php?fbid=1476647285780861&set=gm.1615069781895066&type=3&permPage=1
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சேனையர் தெருவில் இயங்கி வரும் #SV_இந்து_துவக்க_பள்ளியில்... 16.03.2018 அன்று நடைபெற்ற ஆண்டு விழாவின் போது அதிக மின் வெளிச்சம் தரும் மின் விளக்கு பயண்படுத்தியதால்... 40 க்கும் மேற்ப்பட்ட குழந்தைகளுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்... குழந்தைகளுக்கு பயப்படும் வகையில் கண்களில் எவ்வித பாதிப்புகளும் இல்லை என்று சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவர் தெரிவித்தார்... S.V.Hindu Primary School
Primary school in Eruvadi
#தகவல்:- #தமுமுக_ஊடக_பிரிவு_ஏர்வாடி..
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |