மாலையில் வீட்டில் ஓதிய
எமது சமூகம் – இன்று
ட்யூசன் சென்று கொண்டிருக்கிறது.
*ஆம் .குர் ஆன் ஓதத் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது*.
பள்ளிக்கூடம் விட்டதும்
நம் சமூகம் –இன்று
தெரு முனைகளில் பலர் சூழ அரட்டையில்...
*ஆம் .இஸ்லாம் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது*.
பருவம் வரா சிறுவனிடம்
இன்று பல பாலியல் படங்கள் – அத்தா ஆசையாய்
வாங்கிக் கொடுத்த ஆன்ட்ராய்டு. போனில்..
*ஆம் .இறை. தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது*.
அத்தா அயல்நாட்டில்..
அம்மா டிவி நாடகத்தில்..
பிள்ளை தெரு முனைகளில்..
*ஆம் .மார்க்கம் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது*.
கைப்பந்து,கால்பந்து
என மும்முரமாய் எம் சமூகம்
தவறில்லை - பள்ளிக்கு அழைத்தால் மட்டும்
நேரமில்லை என்ற பதில்....
*ஆம் .தொழத் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது*.
மகனைத் திருத்த முடியா தந்தை...
மனைவியை கண்டிக்க இயலா கணவன்-
கண்ட்ரோல் இல்லா குடும்பம்.
*ஆம் .ஒழுக்கம் இல்லாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது*.
தன் கெத்தை காட்ட
வேகம் ஓடும் மோட்டார் பைக்..
மங்கையர் பார்க்க தலையில்
கரையான் தின்றது போன்ற முடி..
*ஆம்.கஷ்டம் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது*.
சப்தமில்லாமல்
ஒரு சமூகம் வீணாய் போய்க் கொண்டிருக்கிறது...
பெற்றோர்களாகிய நம்மால்
உருவாகிக் கொண்டிருக்கிறது...
*ஆம்.நம்மால் ஒரு சமுகம் வீணாகப் போய்க் கொண்டிருக்கிறது*.
*காலம் கடக்கும் முன்...விழித்துக் கொள்வோம்*..
நம் சமூகத்தை காத்துக் கொள்வோம்..
எம் சமூகம் சரியாய் வளர
பெரிதாய் ஒன்றும் செய்ய வேண்டாம்...
*பள்ளிவாசலோடு மட்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள்*.
*ஆம். பள்ளிவாசலோடு மட்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள்*.
பாங்கு சொன்னவுடன் பள்ளிக்கு வரச் சொல்லுங்கள்.
*எம் சமூகம் இந்த உலகை ஆளும்..இன்ஷா அல்லாஹ்*..