Posted by S Peer Mohamed
(peer) on 4/13/2018 1:33:55 AM
|
|||
ஜம்முவில் கத்துவா பகுதியில் கூட்டு வல்லுறவு மற்றும் படுகொலைக்கு ஆளான பகர்வால் எனும் இஸ்லாமிய நாடோடி இனத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஆஷிபாவின் மரணத்தில் அதிர்ச்சி ஊட்டுபவை, அவளுக்கு அப்போது நேர்ந்தது மட்டுமல்ல, அதற்கு முன்னும் பின்னும் நேர்ந்தது இன்னும் கொடுமை. 1) ஜனவரி 10ம் தேதி தன் கிராமத்துப் புல்வெளியில் குதிரைகள் மேய்த்துக்கொண்டிருந்த (அவளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு) ஆஷிபாவைப் பிடித்து ஒரு கோவிலில் சஞ்ஜு ராம் (!) என்கிற ஒரு அர்ச்சகர் தான் அடைத்து வைத்திருக்கிறார். அதற்கு இரண்டு சிறுவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார் சஞ்ஜு ராம். 2) மயக்கமருந்து கொடுத்து பட்டினி போட்டு ஒரு வாரத்துக்கு மேல் வைத்து 6 பேர் (2 சிறுவர்கள் உட்பட) கூட்டு வல்லுறவு நடத்தியிருக்கின்றனர். அவர்களில் தீபக் கஜூரியா என்கிற முஸ்லீம் வெறுப்பும் தேசப்பற்றும் நிறைந்த காவல் அதிகாரியும் ஒருவர். ஜம்முவில் இருந்து வெளியூர் போன ஒரு சிறுவனை தொலைபேசியில் அழைத்து "பசியைத் தீர்த்துக்கொள்ளும்படி" அழைக்கவே, அவனும் இவர்களும் சேர்ந்து கொண்டான். ஆஷிபாவைக் கழுத்தை நெறித்துக் கொன்றதோடு, அவள் இறந்து விட்டாள் என்பதை உறுதி செய்ய அவரது தலையை ஒரு பெரிய கல்லால் அடித்துச் சிதறடித்திருக்கின்றனர். அதற்குப் பிறகும் அவர்களில் ஒருவர் ஆஷிபாவை பலாத்காரம் செய்திருக்கிறார். 3) ஆஷிபாவின் உறவினர்கள் சிறுமியைக் காணோம் என்று ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவர்களைத் தடியடி நடத்தி விரட்டிய காவல்படையில் தீபக் கஜுரியாவும் இருந்தார் என்பது இன்னும் கொடுமை. 3A) சஞ்ஜி ராம் தனக்கு உதவியாக வைத்துக்கொண்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பெற்றோரை மிரட்டி/பயமுறுத்தி பணமும் வசூலித்திருக்கிறார். 4) உள்ளூர் காவல்துறையினர் கொலைக்கான சாட்சியங்களை அழித்ததோடு சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுத்தனர். சஞ்சி ராம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மதப்பற்று, தேசப்பற்று ஆகியவற்றோடு காவல்துறையினருக்கு பணமும் லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார். 5) பல மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு, மாநில முதல்வரின் இடையீட்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் கிரைம் பிராஞ்ச் சாஞ்ஜி ராம் உட்பட 6 பேரைக் கைது செய்தவுடன் அவர்களுக்கு ஆதரவாக பாஜக மந்திரிகள் இருவர் தலைமையில் இந்து ஏக்தா மஞ்ச் எனும் பெயரில் உள்ளூர் இந்துக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இஸ்லாமிய நாடோடிகளை பயமுறுத்தி அங்கிருந்து விரட்டுவதற்காகத் தான் இது நடத்தப்பட்டது என்றும் இது இந்திய ராணுவமும் காவல்துறையும் ஜம்மு காஷ்மீரில் வழக்கமாக செய்வது தான் என்று இதை ஏன் பெரிது படுத்துகிறீர்கள் என்றும் வாதம் எழுப்பப்பட்டது. 6) இதையும் மீறி இப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் முற்படும் போது ஜம்மு பார் கவுன்சில் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தது இன்னும் கூடுதல் கொடுமை. 7) இப்போது இந்தச் சிறுமிக்கு எதிராக சங் பரிவாரும் தேசபக்தர்களும் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். 8 ) குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரிக்கு பதவி உயர்வு கிடைக்கும். பரிசும் பாராட்டுக்களும் குவியும். 8A) கோயில் அர்ச்சகர் சஞ்ஜு ராம் எம்.எல்.ஏ. வோ எம்.பி.யோ ஆகலாம். பிரதமர் கூட ஆகலாம். அவருக்கு எல்லாத் தகுதியும் இருப்பதை இந்துக்கள் அறிந்து பெருமையுடன் அவருடன் வாக்களிக்கலாம். 9) நடுநிலைவியாதிகள் இந்தியா வாழ்க என்று வாந்தி எடுப்பார்கள். 10) நாம் சுரணையற்று இந்த நாட்களைக் கடந்து போவோம். -Amudhan Ramalingam Pushpam |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |