Posted by S Peer Mohamed
(peer) on 10/13/2018 5:05:47 AM
|
|||
ஈமான் சார்பாக இளைஞர்களுக்கென நடத்தப்பட்ட பிரத்யேக நிகழ்ச்சி இன்று 21.09.2018 முதினாவில் உள்ள பாக் தைகா உணவகத்தில் நடைபெற்றது. மதிய உணவிற்கு பின் தொடங்கிய நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட சகோதரர் முஹம்மத் இப்ராஹிம் ( Net Achievers Forum) வாழ்வில் முன்னேற ஒரு இலக்கு இருக்க வேண்டும், அதனை அடையும் வழிமுறைகள் பற்றிய தெளிவு வேண்டும் என்பதை பற்றி சிறப்பான சொற்பொழிவாற்றினார். வெற்றி அடைய பொறுமை, தர்மம், பிறரை காயப்படுத்தாமல் இருத்தல், உள்ளிட்ட 10 பண்புகளை விளக்கினார்.
அதன் பின்னர் வரவேற்பு உரை நிகழ்த்திய சகோதரர் காஸிம் நிஸ்தார், ஈமானின் பணிகளில் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என குறிப்பிட்டார். தொடர்ந்து ஈமானிய இலக்குகள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார் சகோதரர் ஹனீப். ஈமானிய இலக்குகளை அடையவும் ஈமான் தொடர்ந்து அறப்பணிகளை விரிவாகவும் விரைவாகவும் செயலாற்றிட இளைஞர்களின் பங்களிப்பு மிக அத்தியாவசியமானது என்பதை இஸ்லாமிய அடிப்படைகளில் விளக்கினார். இளைஞர்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் சிறிதளவு ஈமானிய பணிகளுக்கு ஒதுக்கினால் பல அரும்பணிகளை சாதிக்க முடியும் என குறிப்பிட்ட அவர், மறுமையில் இளமையை எந்த வழியில் கழித்தாய் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் நகர முடியாது என்ற நபிமொழியையும் நினைவூட்டினார். நாய்க்கு தண்ணீர் அளித்து பாதுகாத்ததால் ஒரு கெட்ட பெண்ணின் பாவத்தையே அல்லாஹ் மன்னிக்கும்போது மனிதர்களுக்கு உதவிடும்போது கிடைக்கும் பலனை உணர்ந்து சமூக பணிகளில் இஃலாஸுடன் செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். 1978 ஆம் வருடம் ஏர்வாடியின் நலனிற்காக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் , தனியாக செயல்படாமல், ஈமான் என்ற அமைப்பினை உருவாக்கிய அப்போதைய இளைஞர்களை நினைவு கூர்ந்து, தற்போது நடைபெற்று வரும் பணிகளின் நன்மைகளும் அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் கிடைப்பது போல் நாமும் இந்த ஸதக்கதுல் ஜாரியா பணியில் இணைய வலியுறுத்தினார். இன்றைய நிகழ்ச்சி மூலமாகவே ஈமான் ஏர்வாடியின் முன்னேற்றத்திற்காக பல்வேறு துறைகளில் பயணிப்பதை அறிந்துக் கொள்வதாக பங்கேற்றவர்களில் சிலர் கருத்துரைத்தனர். மீண்டும் ஒரு மதினா என்பது உங்கள் ஊர் சார்ந்த இலக்கு என நினைக்காதீர்கள், அல்லாஹ்வின் அருளினால் ஈமானின் செயல்பாடுகளால் உத்வேகம் பெற்றுள்ள வேறு சில ஊர் சகோதரர்களும் தங்களின் ஊர்களிலும் இவ்வாறான பணிகளை செயல்படுத்த ஆர்வப்பட்டு முன் வந்துள்ளனர். இன்ஷா அல்லாஹ் உங்கள் பணி ஒரு ஸதக்கதுல் ஜாரியாவாக அமையும் என ஊக்க வார்த்தைகளை உள்ளத்திலிருந்து வெளிப்படுத்தினார் சிறப்பு விருந்தினர் முஹம்மத் இப்ராஹிம். தற்போதைய பொருளாதார தேக்க நிலையை குறிப்பிட்டு, வேலையை மட்டும் நம்பியிராமல் தொழில் முதலீடுகளும் சகோதரர்கள் செய்ய வேண்டும் என கருத்துரைத்தார் சகோதரர் ஷாபி. அவரின் கருத்தை குறிப்பிட்டு பேசிய சகோதரர் பீர் முஹம்மத், தொழில் முதலீடு சம்பந்தமாக ஒரு குழு அமைத்து அதில் சகோதரர்களை இணைக்க படிவம் தயாரித்து அனுப்புவதாக கூறினார். சிறு வயதில் இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வெற்றி பெற்ற இமாம் நவவி ரஹ் மற்றும் இமாம் புஹாரி ரஹ் அலை போன்று நமதூரிலும் பார்வை குறைபாடுடைய சகோதரிகள் குர் ஆனை மனனம் செய்த ஹாஃபிழாக்கள் ஆகியோரின் உதாரணத்தினை கூறி தெளிவான இலக்குடன் இஃலாஸாக பயணித்தால் அல்லாஹ்வின் அருளால் வானம் வசப்படும் என்று உற்சாகமூட்டி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் சகோதரர் அப்துல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ் ஈமான் பணிகள் பற்றிய தங்கள் கருத்துக்களை emancharitabletrust@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது தங்களின் ஆலோசனைக் குழு உறுப்பினரிடமோ தெரிவிக்கலாம் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |