Posted by S Peer Mohamed
(peer) on 10/13/2018 6:40:36 AM
|
|||
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகில், டோனாவூருக்கு என் நன்பரை சந்திக்க பைக்கில் மாலை சுமார் 5:00 மணி வாக்கில் வள்ளியூர் பக்கத்தில் இருந்து சென்றிருந்தேன். பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் போனதே தெரியவில்லை. 8:00 மணி வாக்கில் திரும்பி ஊருக்கு வரும் போது, சரின்னு போயி ஒரு 6 புரோட்டாவ சால்னால பிச்சி போட்டு அடிச்சிட்டு, பல யோசனைல வந்ததால, பெட்ரோல் போட மறந்துட்டேன். உச்சி பொத்தை தாண்டி, பைபாஸ் ரோடு பாலத்துக்கிட்ட வந்துகிட்டு இருக்கும் போது பெட்ரோல் இல்லாமல் பைக் நின்றுவிட்டது. அது அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. அங்கிருந்து எந்த பக்கம் பெட்ரோல் பங்க் செல்ல வேண்டுமானாலும் ரொம்ப தூரம் போகனும். இரவு 8 மணிக்கு மேல் மனிதர்களுக்கு பெர்சனல் டைம் என நினைப்பவன் நான். எனவே நண்பர்களை தொந்தரவு செய்யவும் மனதில்லை. பைக்கை சாய்த்து போட்டு ஓட்டியும் பெரிய பலனில்லை. விதியையும், பெட்ரோல் போடாமல் விட்ட மதியையும் நொந்தபடி உருட்ட துவங்கினேன். திடீரென இன்னொரு பைக்கில் இருவர் என் முன் வந்து நின்றனர். என்ன சார் பெட்ரோல் இல்லையா?என்றார் ஒருவர். ஆமா சார் என்றேன். அதை முழுதும் கூறி முடிக்கும் முன்னரே அவர் பைக் பேக்கிலிருந்து சிறிய கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து கொடுத்தார். எனக்கு ஏதோ இறைவன் என்னை தேடி வந்து தந்தது போன்ற உணர்வு. ஏனெனில், உண்மைலேயே, தர்மம் தலை காக்கும் என்பார்களே அப்படி. பெட்ரோலை வாங்கி ஊற்றிவிட்டு: சார், தயவு செய்து இதை உங்கள் பெட்ரோலுக்கான காசா நினைக்காதீங்க, நீங்க எப்படியும் பெட்ரோல் போடுவீங்க. இல்ல சார், நான் சிசிடிவி தொழில் பண்றேன். அடிக்கடி கஸ்டமர் இடங்களுக்கு செல்லும் போது, இதன் மூலமா நீங்க பலன் அடஞ்ச மாதிரி, மற்றவர்களும் அடையும் போது....அந்த திருப்தி போதும் சார் எனக்கு அவர்களை அப்படியே அனுப்ப மனதில்லை. சரி உங்க தொலைபேசி எண் கொடுங்க. அவர் பெயர் ஆதம் என்றும்,சிலிக்கான் ஆதம் என்றால் அனைவருக்கும் தெரியும் என்றும் சொல்லி, தொலைபேசி எண்ணையும் கொடுத்து விட்டு என் நன்றியை சிரிப்பால் ஏற்றுக்கொண்டு சென்று விட்டார். (இன்னொருவர் அவரின் உதவியாளர் போலும்) அவர் போவதற்கு முன் சொன்னது: சார் இந்த தொழில் செய்றதுல ஒரு ஆத்ம திருப்தி இருக்கு சார். பொது மக்களுக்கு பாதுகாப்பு, பள்ளிகள் அதில் படிக்கும் குழந்தைகள், ஏன், இறை இல்லங்களுக்கு கூட போட்டுக் குடுத்திருக்கோம் சார். இதன் மூலமா தவறுகள் நடப்பதை தவிர்ப்பது மட்டுமல்லாது, வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அன்றிலிருந்து அவருக்கான நன்றியாக பெட்ரோல் போடும் போது ஒரு சிறிய பாட்டிலில் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொள்வேன். அந்த பாட்டிலில் ஒரு ஸ்டிக்கரில் சிலிகான் ஆதம் என்ற அவர் பெயரையும், இதுவரை பெட்ரோல் இல்லாமல் ரோட்டில் உருட்டி சென்ற நான்கு, ஐந்து பேருக்கு உதவியிருக்கிறேன். அவர்கள் பதிலுக்கு பணம் கொடுக்க வரும்போது: தேவைப் பட்டா அவரை அழையுங்கள் என்று ஸ்டிக்கரில் உள்ள எண்ணை கொடுப்பேன். யாருமே வேண்டுமென்றே பெட்ரோல் நிரப்பாமல் செல்வதில்லை. அவசரமான உலகத்தில்..... அவர் தந்த பெட்ரோல் ஒரு சிறிய தொகை தான் வரும். ஆனால் அந்த நேரத்தில் அது விலை மதிக்க முடியாதது. முடிந்தால் நீங்களும் செய்யுங்கள். அன்றைய இரவு எனக்கு இதை சொல்லி தந்தது. இருட்டில் அவர் முகம் கூட நினைவில் இல்லை. பெயர் மட்டும் தான் தெரியும் ஆதம். இரண்டு உள்ளங்களையும் வாழ்த்துவோம். +91 99526 71620 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |