Posted by S Peer Mohamed
(peer) on 10/13/2018 7:54:43 AM
|
|||
உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள்...நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கு.. சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன்..... மிகுந்த வருத்தத்துடனேயே இந்த பதிவை பதிவிடுகிறேன்....... தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் சகோதரி தமிழிசை.இவருடைய கருத்தை பற்றியும்,இவர் சார்ந்திருக்கும் கட்சியின் நிலைபாடு பற்றியும் பலரும் பல விதமான விமர்சனங்களையும்,பதிலடிகளையும் தந்து வருகின்றனர்...... தாராளமாக தாருங்கள்.அதில் எவ்வித தவறும் இல்லை.ஆனால் பதிலடி தருகிறோம் என்கின்ற பெயரில் வரம்பை மீறி அவருடைய உடல் குறைகளையும் சேர்த்து விமர்சித்து வருகிறார்கள்....... பிறர் கேலி,கிண்டல் செய்கிறார்கள் என்றால் பொதுவான அறிவுரையாக கூறலாம்.ஆனால் ஏகத்துவத்தையும்,தூதுத்துவத்தையும் ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிம் இவ்வாறு கேலி கிண்டல் செய்யலாமா? மெக்கா பள்ளி எப்படி புனிதமோ,ரமலான் மாதம் எப்படி புனிதமோ அதுபோலதான் பிறருடைய கண்ணியமும் புனிதம் என நபி(ஸல்) அவர்கள் இறுதி பேருரையில் கூறியதை மறந்து விட்டீர்களா? குட்டையாக இருக்கும் ஒரு பெண்மணியை குறிக்க விரலின் சிறுபகுதியை காட்டி இவ்வாறு ஒருவர் இருப்பாரே அவர் எங்கே என கிண்டலாக கேட்டபோது நபிகளார் அதை கண்டித்ததை வரலாற்றை படித்த பின்புமா ஒருவருடைய உடல் குறைகளை விமர்சிக்க வேண்டும்? சகோதரி தமிழிசையை பொறுத்தவரை இஸ்லாமியர்களை சீண்டும் வகையிலான பேச்சுக்கள் பேசுவது பாஜகவின் மற்ற தலைவர்களை விட குறைவுதான் என கூறலாம்.முஸ்லிம் பெண்களை பாதுகாக்கதான் பொதுசிவில்(?) சட்டம் என இவர் கூறிய ஒருசில கருத்துகளை தவிர,பெரும்பாலும் முஸ்லிம்களை நேரடியாகவோ மறைமாகவோ ஆத்திரமூட்டும் வகையில் இவர் பேசுவதை தவிர்ப்பவர்..... இறைவன் அனைத்து மனிதர்களையும் ஏற்றத் தாழ்வோடு தான் படைத்துள்ளான்.இதில் தன்னை நினைத்து பெருமைப்படவோ,அடுத்தவர்களை மட்டம் தட்டி பேசவோ என்ன இருக்கிறது? சகோதரி தமிழிசையை விமர்சிப்பவர்கள் கூட சொட்டத் தலையாகவோ,உயரம் குறைவாகவோ,பெரிய கண்ணுடனவோ,பெரிய மூக்குடனோ,முகத்தில் பருக்களை கொண்டராகவோ இருக்கலாம்.உங்கள் குறையை ஒருவர் கேலியோடு விமர்சித்து வளை தலத்தில் பதிவு போட்டால் உங்கள் மனம் தாங்குமா? அப்படிப்பட்ட மன பாரத்தோடு நியூஸ்7 சேனலில் சகோதரி தமிழிசை தனது வேதனையை நேர்காணலில் வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறார்.கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் நெறியாளர்(?) நெல்சனும் சிரித்து கொண்டிருக்கிறார். இதில் வேதனை என்னவென்றால் அந்த பேட்டியையும் நெட்டிசன்கள் கிண்டலடித்து மீம்ஸ் போடுகிறார்கள்.அந்த சைக்கோக்களை திருத்தமுடியாது. ஆனால் முஸ்லிம்களே!ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் விமர்சிப்பது தமிழிசையின் உருவத்தை அல்ல,இறைவன் படைத்த படைப்பை. திருந்துங்கள்!பிறரையும் திருத்துங்கள்........
பதிவு. சகோதரர் #இஸ்காக்அலி |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |