Posted by S Peer Mohamed
(peer) on 10/13/2018 8:16:46 AM
|
|||
வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் : ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் அதிரடி அறிவிப்பு !! ஆவுடையார்பட்டினம் சுன்னத் வல் ஜமாஅத் சார்பில் திருமணம் தொடர்பாக பல்வேறு கட்டளைகள் பிறக்கப்பட்டுள்ளது. 1. வரதட்சணை வாங்கும்/கொடுக்கும் திருமணத்தில் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஹலரத் ஆகியோர்கள் பங்கேற்க மாட்டார்கள். 2. திருமணம் குறித்த நேரத்தில் நடைபெற வேண்டும். 3. மேளம், தாளம், தப்ஸ் போன்றவைகளுக்கு அனுமதி இல்லை. 4. குதிரை, யானை போன்ற விலங்குகளில் மாப்பிள்ளை ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை. 5. ஆடல், பாடல், கச்சேரிகளுக்கு அனுமதி இல்லை. 6. பட்டாசு வெடித்தல், வான வேடிக்கைகளுக்கு அனுமதி இல்லை. 7. வாகனங்களில் ஊர்வலம் என்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்ள அனுமதி இல்லை. 8. பெண்கள் புகைப்படம், வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். 9. எளிமையான முறையில் திருமணம் நடத்த வேண்டும். 10 . நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் திருமணத்தை நடத்த வேண்டும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |