Posted by S Peer Mohamed
(peer) on 11/21/2018 12:55:41 PM
|
|||
November 20, 2018
புதுடெல்லி (20 நவ 2018): இந்த 18 நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் இனி இந்திய அரசின் அனுமதி இன்றி பயணிக்க முடியாது. இதற்கு முன்பு கீழ்க்கண்ட 18 நாடுகளுக்குப் பயணிக்க Emigration Check Required (ECR) உள்ளவர்கள் மட்டுமே அனுமதி பெற வேண்டும் என்றிருந்த சட்டம் தற்போது மாற்றியமைக்கப் பட்டுள்ளது. அதன்படி 18 நாடுகளுக்கு பயணிக்கும் Emigration Check NOT Required (ECNR) அதாவது அனைத்து இந்தியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். இந்த முன்பதிவை இந்திய அரசின் www.emigrate.gov.in இணைய தளம் மூலம் செய்யலாம். இந்த முன்பதிவானது குறைந்த பட்சம், பயணம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு முடித்திருக்க வேண்டும். முன்பதிவு செய்யாத பயணிகள் மேற்கூறிய நாடுகளுக்கு பயணிக்க இனி அனுமதிக்கப் பட மாட்டார்கள். இந்த சட்டம் எதிர்வரும் ஜனவரி 1, 2019 முதல் அமலுக்கு வருகிறது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |