ஆண்டு தோறும் இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத்தொகை (டிவிடென்ட்) வழங்கும். அதன்படி இந்த ஆண்டு 50,000 கோடி ரூபாயை வழங்க இருக்கிறது.
ஆனால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தும், பெருமுதலாளிகளின் கடன் தொகைகளை தள்ளுபடி செய்யும் வகையிலும், கார்பரேட் முதலாளிகளின் கடன் தொகை தள்ளுபடி செய்வதால் வங்கிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டவும் ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையைச் சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த உபரித் தொகை reserve fund மிக நெருக்கடி நிலை நாட்டுக்கு ஏற்பட்டால் தவிர செலவிட எடுக்க கூடாது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எந்த அரசும் இதுவரை அந்த ரிசர்வ் ஃபண்டில் கை வைத்ததில்லை. மத்திய அரசின் கடுமையான நிர்பந்தம் தாள முடியாமல் இறுதியாக உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார்.
சரி அந்த ரிசர்வ் தொகை வழங்கினால் தான் என்ன? ஏன் உர்ஜித் படேல் பிடிவாதமாக மறுத்தார் என்பதற்கு 2008 ம் வருடத்தை நாம் நினைவில் கொணர வேண்டும். 2008 ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் அதிகாலையில் “லேமன் பிரதர்ஸ்” எனும் அமெரிக்க வங்கி திவால் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு உலக நிதிச் சந்தையில் சுனாமியை விளைவித்தது எனில் மிகை அல்ல. 639 பில்லியன் டாலர் – அதாவது சுமார் ரூ45 இலட்சம் கோடி சொத்து மதிப்புள்ள ஒரு வங்கி திவாலானது. ஒரே நொடியில் வங்கியின் 25,000 ஊழியர்கள் வேலை இழந்தனர்.
இது உலக அளவில் அனைத்து நாடுகளின் நிதி நிலைமையையும் புரட்டி போட்டது. இதன் எதிரொலியாக சில நாட்களில் உலகின் இன்னொரு மிகப்பெரிய வங்கியான இங்கிலாந்தின் ராயல் ஸ்காட்லாந்து வங்கி திவால் ஆனது. ஸ்காட்லாந்து வங்கி திவால் என்றால் இங்கிலாந்தே திவால் என்று பொருள். அதன் பிறகு ஏ.ஐ.ஜி. போன்ற மிகப்பெரிய காப்பீடு நிறுவனங்களும் நெருக்கடியில் சிக்கின. பெரியதும் சிறியதுமாக நூற்றுக்கணக்கான வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் திவாலாகின. ஐஸ்லாந்து மற்றும் கிரீஸ் எனும் இரண்டு நாடுகள் முற்றாக திவால் நிலைக்கு தள்ளப்பட்டன.
ஒரே ஒரு அமெரிக்க வங்கி திவாலான போது உலக பொருளாதாரமே சீர்குலைந்தது. அந்த நிலையிலும் இந்திய பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம் உலக தலைசிறந்த பொருளாதார மேதைகளுள் ஒருவரான மன்மோகன்சிங் பிரதமராக இருந்தார். அவரது அனுபவத்தின் மூலம் இந்திய வங்கிகளின் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்தி சமாளித்தார்.
நெருக்கடிகளை எப்படி சமாளித்தார் என்று மன்மோகனை ஐரோப்பிய நாடுகள் கூட ஆலோசித்தன. உலகமே தலை குப்புற விழ இருந்த நிலையிலும் மன்மோகன்சிங் ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் ஃபண்டில் கை வைக்கவில்லை. இன்று நாட்டை நிர்வகிக்கும் பாஜக மத்திய அரசின் நிதி நிர்வாக மேலாண்மையை பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலேயே நாடு அறிந்து கொண்டது.
முழுமையாக இந்திய வங்கிகளை அவர்கள் அழித்து முடிப்பதற்குள் அவர்களின் பதவி முடிந்து அரசை விட்டு வெளியேறினால் இந்தியா பாதுகாக்கப்படும்.
|