Posted by S Peer Mohamed
(peer) on 3/16/2019 5:54:57 PM
|
|||
தேதி:15 மார்ச், 2019 ஈமானின் தற்போதைய தலைமையின் பதவிகாலம் கடந்த 2018 ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவுபெற்றது. ஆனால்அந்த நேரத்தில் ஈமானிய மொட்டுக்கள், ஈமானின் 40ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் ஈமானின் 40ஆவது ஆண்டு மலர் வெளியீடு ஆகிய முக்கியமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி சூரா உறுப்பினர்களின் ஆலோசனையின் படி தள்ளிவைக்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ். அப்பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று விட்ட நிலையில், கடந்த மாதம் நடந்த சூரா கூட்டத்தில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான முதல் கட்ட பணிகள் திட்டமிடப்பட்டது. அதன் படி சூரா உறுப்பினர்கள் மற்ற சூராவில் உள்ள உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு இதனைப் பற்றி தெரிவித்தனர். மேலும் அவரவர் சூரா உறுப்பினர்களையும் உறுதிப் படுத்தினர். இன்று (15-மார்ச்-2019) சகோதரர் அப்துல்லாஹ் இல்லத்தில் புதியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி சூரா உறுப்பினர்கள் தாங்கள் தொடர்பு கொண்ட ஈமான் உறுப்பினர்களின் கருத்துக்களை இக்கூட்டத்தில் பதிவு செய்தனர். பின்னர் சகோதரர் பீர் இஸ்லாத்தில் தலைமையின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். பின்னர் சகோதரர் ஹனீஃப் அவர்கள் ஈமானின் பைலாவின் அடிப்படையில் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையினை விவரித்தார். அதன் பின்னர் சகோதரர் அலி அவர்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் போது என்னென்ன குணங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்று விவரித்தார்கள். அதன் பின்னர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் நேரில் பங்கேற்ற சூரா உறுப்பினர்கள்; 1. அல்தாஃப் நேரில் வரமுடியாத சூரா உறுப்பினர்களான 17. உவைஸ், 18. முஹம்மது (அபு தாபி), 19. நவ்ஸாத் ஆகியோர் தங்களது தேர்வை மொபைல் மூலமாக மேற்பார்வையாளர்களிடம் தெரிவித்தனர். அதிமகான சூரா உறுப்பினர்களின் தேர்வின் படி சகோதரர் ஹனீஃப் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அல்லாஹு அக்பர். ஹனிஃப் அவர்கள் சகோதரர் அப்துல்லாஹ் அவர்களை துணைத் தலைவராக நியமித்தார்கள். அல்லாஹு அக்பர். இன் ஷா அல்லாஹ் அடுத்த சூரா கூட்டத்தில் மற்ற நிர்வாகிகளைத் தலைவரும், துணைத் இவர்களது சீரிய தலைமையில் ஈமான் மென்மேலும் சிறப்புடன் பணியாற்றிடவும், மீண்டும் ஒரு மதினா என்ற இலக்கை நோக்கி வீரியமாக செயல்படவும் பிரார்த்திக்கின்றோம். இலக்கை அடைந்திட அனைவரும் இணைந்து செயல்பட்டிட வேண்டும். மிகப்பெரிய பளுவான சுமையை அனைவரும் இழுத்து செல்லும்போது எளிதாக கொண்டு செல்லலாம். அனைவரும் இழுக்கும்போது ஒருவர் இழுக்காமல் இருந்தாலும் அதனை கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்படும். ஒருவரின் அலட்சியம், சோம்பல் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் பாதிக்கும் என்பதை நாம் அறிவோம். எனவே அனைத்து சூரா மெம்பர்களும் முழுமையாக தலைமைக்கு கட்டுப்பட்டு, செய்ய வேண்டிய பணிகளை சிறப்புடன் செய்ய கேட்டுக் கொள்கிறோம். அல்லாஹ் நமது பணிகளை ஏற்று ஈருலகிலும் வெற்றியை அளிப்பானாக. அவன் விரும்பக் கூடியதை செய்யும் வலிமையையும், அவன் வெறுப்பதிலிருந்து விலகி கொள்ளும் பண்பையும் தந்திடுவானாக. ஈமானின் 40 ஆண்டு மலர் ஈமானின் அடுத்த பத்தாண்டிற்கான இலக்குகளை தெளிவாக விளக்குகின்றது. ஒவ்வொருவரும் அதனை வாங்கி படிக்குமாறு அன்புடன் இந்த நல்ல தருணத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஈமானின் ஒவ்வொரு உறுப்பினர்களும் இந்த அளப்பரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தனது சக முஸ்லிம் சகோரரது துயரத்தை போக்குவது மஸ்ஜிதுந் நபவியில் இஃதிகாஃபில் ஈடுபடுவதை விட சிறந்த பணி என்பதை உணர்ந்து தங்களால் ஆன பங்களிப்பை உவப்புடன் முன்வந்து வழங்கவேண்டும். அல்லாஹ் நாடினால் நமது இந்தப் பணி மீஸான் தராசில் நன்மையின் எடையினை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அன்புடன் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |